ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் பரிசீலனையில் உள்ள மூன்று அம்சங்கள்.

ஆசிரியர்கள் 15,12,8(A,B,C) வருடங்கள் ஒரே பள்ளியில் பணிபுரி ந்தவர்கள்

தலைமையாசிரியர்கள் 10+, 10,/ 5(A,B,C) ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் என மும்மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றனர்

கட்டாய இடமாறுதல்

A) பணிபுரியும் பள்ளி அமைந்த ஒன்றியத்திலிருந்து அடுத்த ஒன்றியத்திற்கு

B) பள்ளி அமைந்த கல்வி மாவட்டத்திலிருந்து வேறு கல்வி மாவட்டத்திற்கு

C) பணிபுரியும் வருவாய் மாவட்டத்தில் காலிப்பணியிடம் இல்லையென்றாலோ உபரி என்றாலோ தேவையான அடுத்த வருவாய் மாவட்டத்திற்கு

அடுத்தது பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள், ஆண் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பணி புரியும் பெண் ஆசிரியர்கள் 8 ஆண்டுகள் பணி முடியாவிட்டாலும் அருகில் உள்ள பள்ளி அல்லது இருபால் மாணவர் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.

பணிநிரவல் மற்றும் கட்டாய கலந்தாய்வு முடிந்த பின்னர் உள்ளூர்/வெளியூர் விருப்ப மாறுதல் கலந்தாய்வு மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியருக்கு EMIS இணையத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மேல்நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.

அடுத்த முதுகலை ஆசிரியர்/உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உள்ளூர் இடமாறுதல் கலந்தாய்வும்,வெளியூர் இடமாறுதல் கலந்தாய்வும் அதனைத் தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.

அடுத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ளூர்,வெளியூர் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.

அடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ளூர் /வெளியூர் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு முடிந்த பின்னர் அல்லது அதற்கு முன்னர் மனமொத்த மாறுதல் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளி தவிர்த்து பெற்றுக்கொள்ளலாம். கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

விருப்ப மாறுதல் விதிகள்

1)ஓராண்டு பணிமுடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களில் கட்டாய மாறுதலில் வேறு வருவாய் மாவட்டம் சென்றவர்கள், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை,ஊனமுற்றோர்,இராணுவத்தில் பணிபுரியும் கணவர்/மனைவி , கொரோனாவால் துணையிழந்தவர்,மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர், முதிர்கன்னிகள், விதவைகள்,கணவன் மனைவி 30 கி.மீ க்கு மேல் பிரிந்து பணிபுரிபவர்கள்,வேறு கல்வி மாவட்டத்திற்கு/ஒன்றியத்திற்கு கட்டாய மாறுதலில் சென்றவர்கள், ஆகியோருக்கு வரிசை எண்களின் அடிப் படியில் முன்னுரிமை.

2.ஒருமுறை பணியாற்றிய பள்ளியை மீண்டும் தேர்வு செய்தல் கூடாது.

3.பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியை பெண் ஆசிரியர்களும், ஆண் குழந்தைகள் படிக்கும் பள்ளியை ஆண் ஆசிரியர்களும் இருபாலர் பள்ளியை இருபால் ஆசிரியர்களும் தெரிவு செய்யலாம்.

Leave a Comment