ஆறாம் வகுப்பு தமிழ் வினா-விடைத் தொகுப்பு இயல்-1

ஆறாம் வகுப்பு தமிழ் வினா-விடைத் தொகுப்பு இயல்-1

இன்பத்தமிழ்

மனப்பாடம்

தமிழுக்கு அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. ஏற்றத் தாழ்வற்ற ———- அமைய வேண்டும்.

   அ. சமூகம்                ஆ. நாடு                     இ.வீடு               ஈ. தெரு

2.         நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு —– ஆக இருக்கும்.

    அ. மகிழ்ச்சி                        ஈ. கோபம்                   இ. வருத்தம்               ஈ. அசதி

3.         நிலவு+என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———–.

    அ. நிலயென்று           ஆ. நிலவென்று         இ. நிலவன்று     ஈ. நிலவுஎன்று

4. தமிழ்+எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———–.

    அ. தமிழங்கள்             ஆ. தமிழெங்கள்                இ. தமிழுங்கள்    ஈ. தமிழ்எங்கள்

5. ‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக்கிடைப்பது ———–.

    அ. அமுது+தென்று              ஆ. அமுது +என்று             இ. அமுது + ஒன்று      ஈ. அமு+தென்று

6. ‘செம்பயிர்’ என்னும்சொல்லைப் பிரித்தெழுதக்கிடைப்பது ———–.

    அ. செம்மை+பயிர்              ஆ. செம்+பயிர்            இ. செமை+ப்யிர்  ஈ. செம்பு+பயிர்

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

  1. விளைவுக்கு       – பால்
  2. அறிவுக்கு          – வேல்
  3. இளமைக்கு                – நீர்
  4. புலவர்க்கு           – தோள்

விடை:

  1. விளைவுக்கு       – நீர்
  2. அறிவுக்கு          -தோள்
  3. இளமைக்கு                – பால்
  4. புலவர்க்கு           – வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.

பேர்   – நேர்

பேர்   – நீர்

பேர்   – ஊர்

பால்   – வேல்

வான் – தேன்

தோள்        – வாள்

குறுவினா

  1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

    அமுது, நிலவு, மணம்

  • நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

    நாங்கள் தமிழை ஒளியுடனும் , வண்ணங்களுடனும், அணிகலன்களுடனும் ஒப்பிடுவோம்.

சிறுவினா

  1. இன்பத் தமிழ் பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

தமிழுக்கு அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

  • சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
  • சமூக ஒழுங்கமைவுக்குக் காரணமான உழவுத்தொழிலுக்கு அடிப்படையானது நீர்.        எனவே, நீர் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது.
  • மேலும் நீர் பாகுபாடு பார்ப்பதில்லை.  அனைத்தையும் தூய்மைப்படுத்தும். அது     மழைவடிவிலோ அல்லது ஆறாகவே வந்து சேரும் இடமெல்லாம்  பயனளிக்கும். கடலில்         உள்ள நீர்க்கூட தன் வளங்களைத் தன்னை நாடிவரும் அனைவருக்கும் கொடுக்கும்.
  • எனவே, நீர் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது.

சிந்தனை வினா

வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?

  • வேல் என்பது ஓர் ஆயுதம். எனினும் அது தமிழ்க் கடவுளாம் செவ்வேலின் கையில் இருப்பது. அடையாளமாகத் திகழ்வது எனவேதான் தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது.
  • வேல் கூர்மையானதும் செம்மையானதும் ஆகும்.  அதுபோல தமிழும் செம்மையானது. ஆதலால் தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது.

                                            தமிழ்க்கும்மி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. தாய்மொழியில் படித்தால் ———— அடையலாம்.

அ. பன்மை         ஆ.மேன்மை                      இ பொறுமை              ஈ. சிறுமை

2.         தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் —————– சுருங்கிவிட்டது.

அ. மேதினி               ஆ. நிலா                    இ. வானம்                  ஈ. காற்று

3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது————–.

அ. செந்+ தமிழ்   ஆ. செம்+தமிழ்           இ. சென்மை+தமிழ்              ஈ. செம்மை+தமிழ்

4.         ‘பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது—————.

    அ. பொய்+அகற்றும்           ஆ. பொய்+கற்றும்        இ. பொய்ய+ கற்றும்             ஈ. பொய்+ யகற்றும்

5.         பாட்டு+இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைப்பது————-.

    அ. பாட்டிருக்கும்       ஆ. பாட்டுருக்கும்         இ. பாடிருக்கும்            ஈ. பாடியிருக்கும்

6.         எட்டு+திசை என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைப்பது—————.

    அ. எட்டுத்திசை ஆ. எட்டிதிசை            இ. எட்டுதிசை            ஈ. எட்டிஇசை

நயம் உணர்ந்து எழுதுக.

  1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
  2. கொட்டுங்கடி      – கொட்டுங்கடி
  3. எட்டுத்               – எட்டிடவே
  4. ஊழி                 – ஊற்றெனும்
  5. நிலை                        – நின்றதுவாம்
  6. பூட்டறுக்கும்               – பூண்டவரின்
  7. அகற்றும்            – அன்பு
  8. உள்ள                        – உயிர்
  9. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
  10. கொட்டுங்கடி      – எட்டுத்திசை
  11. ஊழி                 – ஆழி
  12. பொய்                – மெய்புகட்டும்
  13. கொட்டுங்கடி      – கொட்டுங்கடி
  14. கும்மி                – கும்மி
  15. எட்டுத்திசை               – எட்டிடவே
  16. கண்டதுவாம்               – கொண்டதுவாம்
  17. அன்பு                        – இன்ப
  18. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
  19. கொட்டுங்கடி      – கொட்டுங்கடி
  20. கண்டதுவாம்       -கொண்டதுவாம்
  21. பெருக்கிற்கும்     – காலத்திற்கும்
  22. கொண்டதுவாம்   – நின்றதுவாம்
  23. பூட்டறுக்கும்       – பாட்டிருக்கும்
  24. பாட்டிருக்கும்      – காட்டிருக்கும்

குறுவினா

  1. தமிழ்மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
  2. தமிழ், பொய்யகற்றும்..
  3. அது மனித மனதின் அறியாமையை நீக்கும்.
  4. உயிர் போன்ற உண்மையை ஊட்டும்.
  5. உயர்ந்த அறத்தைத் தரும்.
  6. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டும்.
  7. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
  8. செந்தமிழின் புகழ் எட்டுத்திசையிலும் பரவவேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

  1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
  2. பலநூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
  3. தமிழ், பொய்யகற்றும்; அது மனித மனதின் அறியாமையை நீக்கும்; உயிர் போன்ற உண்மையை ஊட்டும்; உயர்ந்த அறத்தைத் தரும்; இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டும்.
  4. எனவேதான் தமிழ் கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி என்று கவிஞர் கூறுகிறார்.
  5. தமிழ்க்கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொணவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.
  6. தமிழ், பொய்யகற்றும் மொழி .அது மனித மனதின் அறியாமையை நீக்கும்மொழி .

உயிர் போன்ற உண்மையை ஊட்டும்மொழி .உயர்ந்த அறத்தைத் தரும்மொழி .இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டும்மொழி . ஆதலால் செந்தமிழின் புகழ் எட்டுத்திசையிலும் பரவும்படி கும்மியடிங்கள் என்று கவிஞர் கூறுகிறார்.

சிந்தனை வினா

  1. தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?

தமிழ்மொழி, பல்துறைச் சார்ந்த நூல்களையும்தன்னகத்தேகொண்டுள்ளது. அறிவு களஞ்சியமாக விளங்குகிறது. கற்பதற்கும் எளிமையானது. ஆதலால் தமிழைப் படித்தால் அறியாமை அகலும்.

                                   வளர்தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. ’தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்————–.

அ. புதுமை                      ஆ. பழமை                இ. பெருமை               ஈ. சீர்மை

2. ’இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது—————–.

    அ. இடன்+புறம்                ஆ. இடை+புறம்   இ. இடம்+புறம்   ஈ. இடப்+புறம்    

3.      ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது—————–.

   அ. சீர்+இளமை               ஆ. சீர்மை+இளமை           இ. சீரி+இளமை   ஈ. சீற்+இளமை

4. சிலம்பு+ அதிகாரம் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக்கிடைப்பது————.

   அ. சிலம்பதிகாரம்     ஆ. சிலப்பதிகாரம்              இ. சிலம்புதிகாரம் ஈ. சிலபதிகாரம்

5. கணினி+ தமிழ் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக்கிடைப்பது————.

    அ. கணினிதமிழ்               ஆ. கணினித்தமிழ்              இ. கணிணிதமிழ்  ஈ. கனினிதமிழ்

6.      “தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்———–.

    அ. கண்ணதாசன்     ஆ. பாரதியார்             இ. பாரதிதாசன்   ஈ. வாணிதாசன்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது————. (மொழி)
  2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கணநூல் ——— (தொல்காப்பியம்)
  3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ———– அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். (எண்களின்)

சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

  1. தனிச்சிறப்பு – தமிழ்மொழி தனிச்சிறப்பு வாய்ந்த மொழியாகும்.
  2. நாள்தோறும் – நாம் நாள்தோறும் அறத்தைப் பேண வேண்டும்.

குறுவினா

  1. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?
  2. தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும். இலக்கியம் தோன்றிய பின்னரே இலக்கண விதிகள் தோன்றும் என்ற அடிப்படையில் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல இலக்கியங்கள் தோன்றியிருக்க  வேண்டும்.
  3. ஆதலால் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தைப் பெற்றுள்ள தமிழ் மிகவும் தொன்மையான மொழி ஆகும்.
  4. நீங்கள் அறிந்த தமிழ்க்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
  5. ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
  6. கம்பராமாயணம்,
  7. சீறாப்புராணம்
  8. தேம்பாவணி

சிறுவினா

  1. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?
  2. உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை ஆகும் . தாழ்திணை என்றால் பொருள் இழிபடுமாறு அமையும் ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்.
  3. அல் + திணை= அஃறிணை, அதாவது உயர்திணை அல்லாத திணை என்பது அதன் பொருள் சிறப்பு.
  4. அதுபோலவே இனிப்புக்கு எதிரான பதம் கசப்பு. பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், பாகற்காய் (பாகு அல் காய்)என்று கூறுவதும் பொருள் சிறப்பு உடையதே.(பாகு – இனிப்பு ; அல் – அல்லாத)
  5. பாகற்காய் என்பது கசப்புக்காய் என்று கூறினால் உண்ணத்தகாத காய் என்று கருதிவிடக்  கூடாது என்பதற்காகவே நம் முன்னோர் பாகற்காய் என்று கூறுயுள்ளனர்.
  6. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.
  7. தமிழ் பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி.
  8. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிமெய் எழுத்துகள். உயிர், மெய் எழுத்துகளின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம்.
  9. அதுபோலவே எழுத்துகளை கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும். எ.கா: அ+மு+து= அமுது
  10. தமிழ் எழுத்துகளை எழுதும் முறையும் மிக எளியதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

எ.கா: வலஞ்சுழி – அ,எ,ஔ..

இடஞ்சுழி- ட,ய, ழ…

  • எனவேதான் தமிழ் இனிய மொழியாகக் கருதப்படுகிறது.
  • தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
  • தமிழ் பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி.
  • மெல்லோசை மிக்க மொழி.
  • ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி எழுத்துகள் உள்ளன. ஆதலால், கற்பதற்கு எளிமையானது.
  • தமிழ், மூத்தமொழி, செம்மையான மொழி, தூய மொழி, தாயாக விளங்கக்கூடிய மொழி.

       தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கு ஏற்பச்  சொற்களை எழுதுக.

  1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்——–(பசு)
  2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல் ———- (தீ)
  3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்———(எஃகு)

குறுவினா

  1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவையாவன:

எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்.

  • மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.

வல்லினம் : க்,ச்,ட்,த்,ப்,ற்

மெல்லினம் : ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

இடையினம்        : ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

  • தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
  • உயிர் எழுத்துகள்:

        குறில்                : 1 மாத்திரை

        நெடில்       : 2 மாத்திரை

  • மெய்யெழுத்துகள்    (அரை மாத்திரை (1/2))

வல்லினம்  : அரை மாத்திரை (1/2)

மெல்லினம் :அரை மாத்திரை (1/2)

இடையினம்        :அரை மாத்திரை (1/2)

  • உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் குறில்         : 1 மாத்திரை

உயிர்மெய் நெடில்       : 2 மாத்திரை

  • ஆய்த எழுத்து – அரை மாத்திரை (1/2)

Leave a Comment