பத்தாம் வகுப்பு – தமிழ்-இயல் – 5  வினா – விடைத் தொகுப்பு

இயல் – 5

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                

1.   “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது

            மொழிபெயர்ப்பு” என்று சொன்னவர்…..

அ) பாரதி                   ஆ) மணவை முஸ்தபா      இ) கவிமணி              ஈ) ம.போ.சி

2. ”ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்” என்று கூறியவர்———- ஆவார்.

அ) பாரதி                   ஆ) மு.கு. ஜகந்நாதர்         இ) கவிமணி              ஈ) ம.போ.சி

3. ”உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்று கூறியவர்——— ஆவார்.

அ) பாரதி                   ஆ) மு.கு. ஜகந்நாதர்         இ) கவிமணி              ஈ) ம.போ.சி

4. பின்வருவனவற்றுள் எது வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டது அன்று—-.

அ) பெருங்கதை        ஆ) சீவகசிந்தாமணி இ) கம்பராமாயணம்   ஈ) சிலப்பதிகாரம்

4. பின்வருவனவற்றுள் எது வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டது அன்று—-.

அ) வில்லிபாரதம்     ஆ) சீவகசிந்தாமணி இ) கம்பராமாயணம்   ஈ) மணிமேகலை

5. கூற்று 1:தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது.

கூற்று 2 : இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.

அ) கூற்று1 சரி; கூற்று 2 தவறு                   ஆ) கூற்று2 சரி; கூற்று 1 தவறு

இ) கூற்று1 , 2 ஆகிய இரண்டும் சரி   ஈ) கூற்று1 , 2 ஆகிய இரண்டும் தவறு

6. ஜெர்மன்மொழியில்  மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமாகப்பட்டு,   உள்  நாட்டு கவிஞர் போலவே கொண்டாடப்பட்டவர்——— ஆவார்.

அ) ஷேக்ஸ்பியர்   ஆ) கணமுத்தையா   இ) இரவீந்தரநாத் தாகூர்    ஈ) சா. கந்தசாமி

7. 18ஆம் நூற்றாண்டு வரை ———- மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

அ) ஆங்கிலம்                        ஆ) ஐரோப்பிய மொழிகள்    இ) லத்தீன்            ஈ) வடமொழி

8. இரவீந்தரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய நூல்———–.

அ) தொல்காப்பியம்             ஆ) கீதாஞ்சலி        இ) பெருங்கதை  ஈ) தண்டி

9. கீதாஞ்சலி என்னும் தம் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயத்தப்பின் இரவீந்தரநாத் தாகூர் பெற்ற விருது ——–.

அ) நோபல்              ஆ) சாகித்திய அகாதமி       இ) பத்மபூஷன்    ஈ) இந்தியமாமணி

10. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான வருவி எது?

அ) மனிதவளம்         ஆ) வருமானம்          இ) உலகமயமாக்கம்    ஈ) மின்னாற்றல்

11. ஜெர்மனியில் ஓராண்டில் பிற மொழிகளிலிருந்து ———— நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன.

அ) 1000                     ஆ)2000                     இ) 4000                     ஈ) 5000

2.   மொழிபெயர்த்தல் என்னும் தொடரை முதன்முதலில் குறிப்பிட்டவர்?

அ) தொல்காப்பியர்                       ஆ) தண்டி        இ) நன்னூலார்        ஈ) மணவை முஸ்தபா

3.   “சதம்” என்பதன் பொருள்.

அ) பத்து                     ஆ) நூறு                    இ) ஆயிரம்                ஈ) பத்தாயிரம்

4.  “சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை” என்று யார், யாரிடம் கூறினான்?

அ) கபிலரிடம் குசேலப் பாண்டியன்

ஆ) இடைக்காடனாரிடம் குசேல பாண்டியன்

இ) இறைவனிடம் குசேல பாண்டியன்

ஈ)  குசேல பாண்டியனிடம் இடைகாடனார்

5.   “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

            கற்றாரோடு ஏனை யவர்”            – இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள்.

அ. ஆற்றுநீர் பொருள்கோள்                                   ஆ) நேர் நிரல்நிறைப் பொருள்கோள்

இ) கொண்டுகூட்டு பொருள்கோள்                       ஈ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

6.   ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச்

            செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

7.   அருந்துணை என்பதைப் பிரித்தால் ……………..

அ) அருமை + துணை                    ஆ) அரு + துணை    

இ) அருந்து + உணை                       ஈ) அருமை + உணை

8.   “இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது ……. வினா.  

            “அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறுவது …… விடை.

அ) ஐயவினா, வினா எதிர்வினாதல் ஆ) அறிவினா, மறைவிடை

இ) அறியா வினா, சுட்டு விடை            ஈ) கொளல் வினா, இனமொழி விடை

9.   “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி, மருளை அகற்றி மதிக்கும் தெருளை” –

            என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்                    ஆ) அறிவியல்                       இ) கல்வி                  ஈ) இலக்கியம்

10. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ….  ஆவார். இடைக்காடனாரிடம் அன்பு

            வைத்தவர் ……. ஆவார்.

அ) அமைச்சர், மன்னன்                   ஆ) அமைச்சர், இறைவன்   

இ) இறைவன், மன்னன்                   ஈ) மன்னன், இறைவன்

11. மொழிபெயர்த்தல் என்னும் தொடரை மரபியலில் குறிப்பிட்டவர் —– .

அ) தொல்காப்பியர்                       ஆ) தண்டி        இ) நன்னூலார்        ஈ) மணவை முஸ்தபா

12.‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ – இத்தொடர் யாருடையக் கூற்று ஆகும்.

அ)பாரதியார்                      ஆ) தண்டி        இ) நன்னூலார்        ஈ) மணவை முஸ்தபா

13. ’மொகு சாஸ்டு’ – என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள் ———-.

அ)மறுக்கிறோம்       ஆ) தண்டிக்கிறோம்               

இ) பணிகிறோம்       ஈ) விடைதர  அவகாசம் வேண்டும்

14. இராகுல் சாங்கிருத்யாயன்  1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது

இந்தி மொழியில் எழுதிய நூல் ———

அ) கங்கையிலிருந்து குமரிவரை    ஆ) மும்பையிலிருந்து தானேவரை  

இ) வால்காவிலிருந்து கங்கைவரை      ஈ) வால்காவிலிருந்து குமரிவரை

15. ’பயன் கலை’ என்று என்று மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ——.

அ) கருத்துப் பகிர்வுக்கு உதவுவதால்   ஆ) மேடைப்பேச்சுக்கு உதவுவதால்           

இ) மொழிவளர்ச்சிக்கு உதவுவதால்          ஈ) புதிய இலக்கியம் உருவாக்குவதால்

16. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் இல்லாத தமிழ் இலக்கியம் இவற்றுள் எது?

அ)மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்          ஆ) சரளிப்புத்தகம்      

இ) புதுச்சேரியம்மன் பிள்ளைத்தமிழ்         ஈ) கவிராயன் கதை

17. நீதி வெண்பாவினை எழுதியவர்———–.

அ) செய்குத்தம்பி பாவலர்           ஆ) தண்டி        இ) நன்னூலார்        ஈ) மணவை முஸ்தபா

18. சதாவனம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்———–.

அ) செய்குத்தம்பி பாவலர்           ஆ) தண்டி        இ) நன்னூலார்        ஈ) மணவை முஸ்தபா

19. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்——.

அ) செய்குத்தம்பி பாவலர்           ஆ) உமறுபுலவர்  இ) நன்னூலார்    ஈ) மணவை முஸ்தபா

20. ஒரே நேரத்தில் ——– செயல்களைச் செய்பவரை சதாவதானி என்று குறிப்பிடுவர் .

அ) பத்து         ஆ) நூறு        இ) ஆயிரம்    ஈ) பதினெட்டு

21. திருவிளையாடற்புராணம் இயற்றிவர் ———— ஆவார்.

அ) செய்குத்தம்பி பாவலர்   ஆ) தண்டி        இ) நன்னூலார்        ஈ) பரஞ்சோதி முனிவர்

22. திருவிளையாடற்புராணத்தில் ——- காண்டங்களும் ———– காதைகளும் உள்ளன.

அ) 2,64          ஆ) 3,64      இ) 2, 30         ஈ) 3, 30

23. வேதாரண்யம் என்னும் ஊரின் மற்றுமொரு பெயர்———–.

அ) திருத்தணி            ஆ) திருப்பதி             இ) திருமறைக்காடு           ஈ) திருப்பெருந்துறை

24. பரஞ்சோதி முனிவர் ———– ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

அ) 15             ஆ) 16             இ) 17                        ஈ) 18

25. திருவிளையாடல் பற்றி கூறும் திருவிளையாடற்புராணம் தவிர்த்த மற்றுமொரு நூல் —

அ) மணிமேகலை     ஆ) சீவகசிந்தாமணி            இ) வளையாபதி  ஈ) சிலப்பதிகாரம்

26. அரசரின் முரசு கட்டிலில் உறங்கிய புலவர் மோசிக்கீரனார்க்கு கவரி வீசிய அரசன் —

அ) நெடுஞ்செழியன்                         ஆ) கரிகாலன்          

இ) பெருஞ்சேரல் இரும்பொறை           ஈ)செங்குட்டுவன்

27.  அரசரின் முரசு கட்டிலில் உறங்கிய புலவர் மோசிக்கீரனார்க்குக் கவரி வீசிய   

  பெருஞ்சேரல் இரும்பொறை பற்றிய செய்தியைக் கூறும் நூல்  ——–.

அ) புறநானூறு        ஆ) பதிற்றுப்பத்து     இ) பரிபாடல்  ஈ) சிலப்பதிகாரம்

28. ”மாசற விசித்த வார்புறு வள்பின்…” என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல் —–.

அ) புறநானூறு        ஆ) பதிற்றுப்பத்து     இ) பரிபாடல்  ஈ) சிலப்பதிகாரம்

29.  எட்டு விடைகளில் வெளிப்படை விடைகளின் எண்ணிக்கை —-.

அ) இரண்டு   ஆ) மூன்று     இ) நான்கு  ஈ) ஐந்து

30.  எட்டு விடைகளில் குறிப்பு  விடைகளின் எண்ணிக்கை —-.

அ) இரண்டு   ஆ) மூன்று     இ) நான்கு  ஈ) ஐந்து

31. பொருள்கோள் ———— வகைப்படும்.

அ) இரண்டு               ஆ) ஆறு         இ) நான்கு  ஈ) எட்டு

32. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” என்னும் வினாவுக்கு, ”இவ்வழியாகச் 

 செல்லுங்கள்” என்று கூறும் விடை———

அ) சுட்டு                 ஆ) மறை        இ) நேர்          ஈ) ஏவல்

33. ”எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, ”யார் எழுதி தருவார்கள்?” என்று

விடயளிப்பது ———– விடை.

அ) சுட்டு       ஆ) மறை        இ) வினா எதிர் வினாதல்           ஈ) ஏவல்

15. வினா எத்தனை வகைப்படும்?

அ) ஐந்து        ஆ) ஆறு     

இ) ஏழு           ஈ) எட்டு

16. விடை எத்தனை வகைப்படும்?

அ) ஐந்து        ஆ) ஆறு      

இ) ஏழு           ஈ) எட்டு

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

  1. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

மருத்துவதும் ஆவிக்கும் அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வி யென்றே போற்று

1. இப்பாடலின் ஆசிரியர்?

அ) செய்குதம்பிப் பாவலர்                                 ஆ) பரஞ்சோதி முனிவர்    

இ) கமலாலயன்                                            ஈ) பேயாழ்வார்

2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?

அ) பெரியத்திருமொழி                    ஆ) நீதிவெண்பா

இ) நாச்சியார் திருமொழி               ஈ) கூத்தராற்றுப்படை

3. இலக்கணக்குறிப்புத் தருக – அகற்றி

அ) பண்புத்தொகை                         ஆ) வினைத்தொகை 

இ) வினையெச்சம்                        ஈ) பெயரெச்சம்

4. பொருள் தருக – ஆவி

அ)உயிர்                                         ஆ) உடம்பு 

இ) புகை                                            ஈ) நூல்

5. மதிக்கும் தெருள் – வண்ணமிடப்பட்ட சொல்லுக்கான் இலக்கணக்குறிப்பு ?

அ) பண்புத்தொகை                         ஆ) வினைத்தொகை 

இ) வினையெச்சம்                           ஈ) பெயரெச்சம்

(பெருக்கி, திருத்தி,அகற்றி – வினையெச்சம்;போற்று – கட்டளைத்தொடர்;  )

குறுவினாக்கள்

1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால்

          பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் 

          தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு

          கேண்மையினான் யார்?

  • கழிந்த பெரும் கேள்வியினான்             :           குசேலப் பாண்டியன்
  • காதல்மிகு கேண்மையினான்               :           இடைக்காடனார்

2.   செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

  • கற்போம்! கற்போம்! கல்வியைக் கற்போம்!
  • அருளினைப் பெருக்கக் கல்வி கற்போம்!
  • அறிவினைத் திருத்தக் கல்வி கற்போம்!
  • மயக்கம் அகற்றக் கல்வி கற்போம்!

3. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக்

குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

  • விரும்பும் மொழி          :           இந்தி
  • காரணம்             :           இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் பேசப்படுகின்ற மொழி. பிற மாநிலங்களில் சென்று வேலை வாய்ப்பினைப் பெற வழிவகைச் செய்கிறது.

கூடுதல் வினாக்கள்

20. இடைக்காடனார் இறைவனிடம் சினந்து கூறியது யாது?

  • இடைக்காடனார் இறைவனிடம், பாண்டியன் என்னை இகழவில்லை.
  • சொல்லின் வடிவாக உன் இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் பார்வதி தேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான் என்று சினத்துடன் கூறினார்.

10.   வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  • வினா ஆறு வகைப்படும்.
  • அவை, அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்பனவாகும்.

11.   விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  • விடை எட்டு வகைப்படும்.
  • அவை, சுட்டு, மறை, நேர், ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என்பனவாகும்.

12.விடைகளின் வகைகளைக் விளக்குக.

சுட்டு விடைசுட்டிக்கூறும் விடை’கடைத்தெரு எங்குள்ளது?’ எனும் வினாவிற்கு, ’அங்குள்ளது எனச் சுட்டிக்கூறல்
மறைமறுத்துக்கூறும் விடை’கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்கு, ‘போகமாட்டேன்’ எனக் கூறல்.
நேர்உடன்பட்டுக் கூறும் விடை’கடைக்குப் போவாயா?’ என்னும் வினாவிற்கு  ‘போவேன் என்று கூறல்.
ஏவல்நீயே செய்  என்று கூறுதல்’இது செய்வாயா?’ என்ற வினாவிற்கு ‘நீயே செய்‘எனல்
வினா எதிர் வினாதல்வினாவிற்கு விடையாக மற்றொரு வினாவையே கூறல்’என்னுடன் வருவாயா?’ என்னும் வினாவிற்கு ’வராமல் இருப்பேனோ?’ என்று கூறல்.
உற்றது உரைத்தல்ஏற்கனவே நேர்ந்ததை விடையாகக் கூறல்’நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக், ‘கால் வலிக்கும்’ என்று கூறல்.
உறுவது கூறல்நிகழப்போவதைக் கூறல்’நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக், ‘கால் வலித்தது ’ என்று கூறல்.
இனமொழி  விடைவினாவிற்கு விடையாக இனமானதைக் கூறல்’உனக்குக் கவிதை எழுதத்தெரியுமா?’ என்ற வினாவிற்கு ‘ கட்டுரை எழுதத்தெரியும்’ என்று கூறல்.
  1. வினாவின் வகைகளைக் கூறுக.
அறி வினாதான் அறிந்த விடை பிறருக்கும் தெரிந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள வினவும் வினா’திருக்குறளை இயற்றியவர்  யார்’ என்று மாணவரிடம் ஆசிரியர் வினவுவது.  
அறியா வினாதான் அறியாத ஒன்றை அறிந்துகொள்ளும் பொருட்டு எழுப்பும் வினா’திருக்குறளை இயற்றியவர் யார்’ என்று ஆசிரியரிடம் மாணவன் வினவுவது.
ஐய வினாஐயம் நீங்கி தெளிவு பெற வினவும் வினா’அங்கு இருப்பது பாம்பா? கயிறா?’ என்று வினவுவது.
கொளல் வினாஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டு வினவும் வினா’ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுவது.
கொடை வினாபிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.’என்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இரண்டு படி உள்ளன. உன்னிடம்  இருக்கிறதா?’ என்று கொடுப்பதற்கு வினவுதல்
ஏவல் வினாஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினவுவது.’வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?’ என்று வினவுதல்.
  • 1.  பொருள்கோள் என்றால் என்ன?
  • பொருள்கோள் என்பது,செய்யுளில் உள்ள தொடர்களைப் பொருளுக்கு ஏற்றவகையில் இணைத்தோ, மாற்றியோ பொருள் கொள்வதாகும்.
  • 2.பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  • பொருள்கோள் எட்டு வகைப்படும்.
  • அவை, ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, பூட்டுவில், தாப்பிசை, அளைமறிபாப்பு, அடிமறிமாற்று, கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்பனவாகும்.
  • கல்வியின் சிறப்புகளாக கா. ப. செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுபவை யாவை?

அருளினைப் பெருக்கும்

அறிவைச் சீராக்கும்

 மயக்கம் அகற்றும்

அறிவுக்குத் தெளிவு தரும்

 உயிருக்கு அரிய துணையாக  இன்பத்தைச் சேர்க்கும்.

  1. சதாவதானம் என்றால் என்ன?

’சதம்’ என்றால் நூறு என்று பொருள்.

ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண் அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில்  நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.

  1. செய்குதம்பி பாவலர் – குறிப்பு வரைக.

பெயர் : செய்குதம்பி பாவலர்

ஊர்: கன்னியாகுமரிமாவட்டம் இடலாகுடி

சிறப்புகள்:

பதினைந்து வயதிலேயே கவிபாடும் திறமை.

‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்துவிளங்கியவர்

சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.

  1. திருவிளையாடற்புராணம் – குறிப்பு வரைக.

இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.

இது மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும் 64 படலங்களையும் உடையது.

  1. பரஞ்சோதி முனிவர் – குறிப்பு வரைக.

பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் பிறந்தவர்.

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

சிவபக்தி மிக்கவர்.

வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

———-

சிறுவினாக்கள்

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச்  

          செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றையாமையை எவ்வகையில்  

           எடுத்துரைப்பீர்கள்?

  • நம் வாழ்வின் ஏணிப்படியான கல்வியைக் கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  • நம் தாய்த் தந்தை படிக்காததால்தான் நாம் இந்த வறுமைக்கு ஆளாகியுள்ளோம். நாம் படித்துவிட்டால் இந்த வறுமை இருக்காது.
  • கல்வி கற்றால் மட்டுமே நம் வாழ்வில் வரும் பல துன்பங்களுக்குத் தீர்வு காண முடியும்.
  • இந்தப் படிப்பை முடித்துவிட்டால் அடுத்து வரும் படிப்புகளை நீ வேலைக்குச் சென்று கொண்டேகூட படிக்கலாம்.
  • எந்தச் சூழ்நிலையிலும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

2. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

  • இடைக்காடனார் பாடிய பாடலைக் குசேல பாண்டியன் அவமதித்தான்.
  • இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் வேண்டி முறையிட்டார்.
  • இறைவன் கடம்பவனக் கோவிலைவிட்டு வெளியேறி வையை ஆற்றின் தென்பக்கத்தில் கோவிலை உருவாக்கி, அங்கே எழுந்தருளினார்.
  • இதனை அறிந்த மன்னன் யான் என்ன குற்றம் செய்தேன் ஏன் இங்கு எழுந்தருளினீர் எனறு கேட்டு வருந்தினான்.
  • இறைவன், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றத்தைத்தவிர, வேறு எந்த குற்றமும் இல்லை என்றார்.
  • தன் தவற்றை உணர்ந்த பாண்டிய மன்னன், இடைக்காடனாருக்கு மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்திச் சிறப்புச் செய்தான்.

3. “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.” – இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

பயின்று வரும் பொருள்கோள் : ஆற்றுநீர் பொருள்கோள்

விளக்கம்: செய்யுள்,  தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல        

                நேராக நின்று பொருள் கொள்ளுமாறு அமைவது ‘ஆற்றுநீர்ப் பொருள்கோள்’   

                எனப்படும்.

சான்று : “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

  இன்மை புகுத்தி விடும்.”

பொருள்: முயன்றால் பலனுண்டு; முயலவில்லை என்றால் பலனில்லை என குறளில் வந்த   

எந்த ஒரு சொல்லும் முன்பின் மாறாமல் பொருள் கொள்வதால் இது ஆற்றுநீர்   

பொருள்கோள் எனப்பட்டது.

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள் விளக்குக.

விளக்கம்:

            பாடலின் தொடக்கம் முதல் முடியும்வரை ஆற்றின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீர் பொருள்கோள் ஆகும்.

சான்று:

            ’சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

            மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

            செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

            கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’

பொருத்தம்:

            மேற்கூறப்பட்டுள்ள சான்றில் நெற்பயிர் காய்த்த செய்தியினை ஆற்றின் போக்கைப் போல எவ்வித மாற்றமும் இல்லாமல் வரிசையாகக் கூறியுள்ளதால்  இப்பாடலில் ஆற்றுநீர் பொருள்கோள் பயின்று வந்துள்ளது.

  1. முறைநிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன?

விளக்கம்:

            செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் ‘ முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ எனப்படும்.

சான்று:

            ’அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

            பண்பும் பயனும் அது’

பொருத்தம்:

            இக்குறளில் அன்பு, அறன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்குரிய விளைவுகளான பண்பு, பயன் என்பதையும் அதே வரிசையில் நிறுத்திக் கூறியுள்ளதால் இக்குறளில் பயின்று வந்துள்ள பொருள்கோள்  முறை நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

  1. எதிர் நிரல்நிறை பொருள்கோள் என்றால் என்ன?

விளக்கம்:

            செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிரெதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் ‘எதிர்நிரல்நிறை பொருள்கோள்’ எனப்படும்.

சான்று:

            ’விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

            கற்றாரோடு ஏனை யவர்’

பொருத்தம்:

            இக்குறளில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்தி,  எழுவாய் ஏற்கும் பயனிலைகளான கற்றார், கல்லாதவர்(ஏனையவர்) என்ற சொற்களை எதிரெதிராகப் பொருள்கொள்ளும் வண்ணம் வரிசைப்படுதியுள்ளதால் இது எதிர்நிரல்நிறைப் பொருள்கோளுக்குச் சான்றாகும்.

  1. கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன?

விளக்கம்:

            ஒரு செய்யுளில் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றாற்போல் ஒன்றோடொன்று கூட்டி பொருள்கொள்ளுதல் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

சான்று:

            ’ஆலத்து மேல குவளை குளத்துள

            வாலின் நெடிய குரங்கு’

பொருத்தம்:

            மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை என்று பொருள்கொள்ளும் வண்ணம் வெவ்வேறு அடிகளில் உள்ள சொற்களை பொருளுக்கு ஏற்றாற்போல் பொருள் கொள்வதால்  இது கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்குச் சான்றாகும்.

உரைப்பத்தி வினா-விடை

        ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியேபேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு  அவரது மொழியில்  புரிந்து கொள்வார்.

       இப்பத்தியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

  1. ஐ.நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

2.மொழிபெயர்ப்பு என்றால் என்ன?

மொழிபெயர்ப்பு (translation)  என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது ஆகும்.

3. விளக்குவது’(Interpreting) என்றால் என்ன?

ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) எனப்படும்.

4.மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பார்?

மொழிபெயர்ப்பாளர்  பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் அமர்ந்திருப்பார்.

5.காதணிக் கேட்பி’ எதற்குப் பயன்படுகிறது?

அவையில் உள்ள பார்வையாளர், தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்  கொண்டு  அவரது மொழியில்  புரிந்து கொள்ள பயன்படுகிறது.

நெடுவினாக்கள்

4. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

  • பாண்டிய நாட்டை ஆண்ட குசேல பாண்டியன், கல்வியறிவு மிக்கவன் ‘ எனக் கற்றோர் கூறக் கேட்ட இடைக்காடனார், சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க தம் கவிதையை அப்பாண்டியன் முன் பாடிக்காட்டினார்.
  • மன்னன், சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலவரை அவமதித்தான்.
  • இடைக்காடனார், திருஆலவாயில் உறையும் இறைவன் முன் சென்று வணங்கி, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன் முன், சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவன் சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் என் புலமையை அவமதித்தான்.
  • அவன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவமாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும் அவமதித்தான் எனச் சினத்தோடு கூறினார்.
  • இவ்வாறு உரைத்த இடைக்காடனார் கூற்றிற்குச் செவிசாய்த்து, இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்த இறைவன், தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் வையை ஆற்றின் தெற்கே ஒரு திருக்கோயிலை உருவாக்கி அங்குச் சென்று தங்கினார்.                                                                                                                                                                                                                                                                  
  • இதனை அறிந்த மன்னன் யான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் இங்கு எழுந்தருளினீர் எனக் கேட்டு வருந்தினான்.
  • இறைவன், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றத்தைத் தவிர, வேறு எந்த குற்றமும் இல்லை என்றார்.
  • தன் தவற்றை உணர்ந்த பாண்டிய மன்னன், இடைக்காடனாருக்கு மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்திச் சிறப்புச் செய்தான்.

5. புதிய நம்பிக்கை

                பொருளடக்கம்
முன்னுரை
கதைமாந்தர்கள்
பருத்திக்காட்டில் மேரி
மேரியின் மனவருத்தம்
புதிய நம்பிக்கை
முடிவுரை

 முன்னுரை:

                  பருத்திக்காட்டில் வேலைசெய்யும் கருப்பர் இனத்தவராகிய பாட்ஸி, சாம்  இணையர் படிப்பறிவற்றவர்கள் ஆவார்கள். இவர்களின் குடும்பத்தில் முதல் கல்வியறிவு பெற்றவர் இளைய மகள் மேரியே ஆவாள். மேரி கல்வி கற்பதற்கான சூழல் ஏற்பட்ட நிகழ்வை இக்கதையில் காணலாம்.

      கதைமாந்தர்கள்

               சிறுமி மேரி, பாட்ஸி, சாம், மிஸ் வில்சன், வெள்ளையர் இனக்குழந்தை, கிராம மக்கள்

     பருத்திக்காட்டில் மேரி:

             பருத்திக் காட்டில் தன் பதினொரு வயதுவரை பருத்திப் பயிரிடும் பருவம், பருத்திச் செடி வளரும் விதம், அறுவடைக் காலம் முதலியவற்றை மட்டுமே அறிந்து வளர்ந்தவள் மேரி.  செடி வளர்ப்பதில் கவனத்தோடு இருக்கும் மேரி, அவ்வப்போது தன் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக இருப்பாள்.

மேரியின் மனவருத்தம்:

             ஒருநாள் தன் அம்மாவுடன் வெள்ளையர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அங்குள்ள குழந்தைகள் அவளை விளையாட அழைத்தனர். அவள், அவர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருள்களையும் தொட்டுப்பார்த்து மனம் மகிழ்ந்தாள். அவள் அதே முனைப்புடன் அருகிலிருந்த ஒரு புத்தகத்தைத்  தொட்டபோது  ஒரு குழந்தை, நீ அதை எடுக்கக்கூடாது; உன்னால் படிக்க முடியாது என்று கூறி, அப்புத்தகத்தைத் தட்டிவிட்டாள்.

புதிய நம்பிக்கை

             முதல் முறையாகத் தன் படிப்பு பற்றி, தன் பெற்றோரிடம்  பேசிய மேரி, அது கிடைப்பது அரிது என்று உணர்ந்தபோது மிகவும் மனவருத்தமுற்றாள். இருப்பினும் வெள்ளைக் குழந்தைக் கூறிய அச்சொற்களால் தன் இயல்பான செயல்பாடுகளைச் செய்யாமல் வருத்தத்தோடு இருந்தாள். ஒருநாள் மிஸ் வில்சன் என்ற ஆசிரியர் ஒருவர் பருத்திக்காட்டுக்கு வந்து மேரியைப் பள்ளிக்கு வரச்சொல்லி அழைத்தபோது மிகவும் மன மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று தன் படிப்பைக் கவனத்துடன் படித்து முடித்தாள். மீண்டும்  மிஸ் வில்சன் உதவியுடன் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தபோது அந்த ஊரே அவளை இரயில் நிலையம் வரைச் சென்று வழிஅனுப்பிவைத்தது.

முடிவுரை

                 தனக்கு படிப்பு கிடைக்காததன் பின்னணியை உணர்ந்த மேரி,  தன்னைப்போன்ற கருப்பர் இனத்து குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியைக் கட்டி, அவர்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கினாள்.

6. தமிழ் இலக்கியவளம் – கல்வி மொழி- பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்-    

          அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழக்குச் செழுமை – மேற்கண்ட

          குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

          என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

                        பொருளடக்கம்
முன்னுரைதமிழ் இலக்கியவளம்பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்கல்வி மொழிஅறிவியல் கருத்துகள்பிறதுறைக் கருத்துகள்தமிழக்குச் செழுமைமுடிவுரை

முன்னுரை

அறிவு என்பது  பொதுவுடைமை. அது இந்த மொழிக்கே உரியது என்று கூறிவிட முடியாது. அவ்வகையில் பலமொழிகளில் காணப்படுகின்ற அறிவுக்களஞ்சியங்களாகிய  இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அழகு சேர்ப்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்!

தமிழ் இலக்கியவளம்

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். அது இன்றளவும் செம்மையாக விளங்கி வருகிறது. அதற்கு அதன் இலக்கிய வளமே காரணமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் தொடங்கி  இக்கால இலக்கியங்கள் வரையில் தமிழில் எண்ணிக்கையில் அடங்கா இலக்கியங்கள் உள்ளன.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

ஒரு மொழியில் தோன்றிய இலக்கியங்கள் அம்மொழியில் மட்டும் இருந்துவிடின் சிறப்பில்லை. அவ்விலக்கியங்கள் பல்வேறு நாட்டு மக்களையும் சென்றடையும்போதுதான் மேலும் அது சிறப்படைகிறது. ஜெர்மன் மொழியில், மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமான ஷேக்ஸ்பியர் இந்நாட்டு படைப்பாளர்களைப் போலவே கொண்டாடப்படுகிறார். நேரடி மொழிபெயர்ப்பாக பிரெஞ்சு, ஜெர்மனி, அமெரிக்கா, லத்தீன் முதலான நாடுகளின்  நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.

கல்வி மொழி

மொழிபெயர்ப்பை ஒரு கல்வியாக ஆக்குவதன் மூலம், அனைத்து உலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும். பலத் துறைசார்ந்த  அறிவையும் தமிழ் மொழியின் சொல் வளத்தைக் கொண்டு மொழிபெயர்ப்பின் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும். மனிதவளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்பு தளத்தை விரிவாக்க முடியும். நாடு, இனம், மொழி எல்லைகளைக் கடந்து ஓர் உலக தன்மையைப் பெறமுடியும்.

அறிவியல் கருத்துகள்

ஒரு சிறு நாட்டில் உள்ள ஒருவர் ஒரு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பை நிகழ்த்துவார். அது மனித குலத்திற்கு அவசியமான ஒன்றாக மாறும். அது பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கும்போதுதான் எல்லோருக்கும் பயனளிக்கும். அவ்வகையில் இன்று மொழிபெயர்ப்பின் மூலம் எண்ணிலடங்கா அறிவியல் கருத்துக்கள்  தமிழ்மொழியில் காணப்படுகின்றன.

பிறதுறைக் கருத்துகள்

மொழிபெயர்ப்பு மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாக இருக்கிறது. காலத்தால், இடத்தால், மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது. இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியன வேற்று மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களிடமும் சென்றடைகிறது.

தமிழக்குச் செழுமை

தமிழ் இன்று செழுமையான மொழியாக இருபதற்குக் காரணம் அது கணினி மொழியாக உள்ளதும் மொழிப்பெயர்ப்புகள் மிகுதியாக உள்ளமையுமே ஆகும்.

முடிவுரை

இன்று மொழிபெயர்ப்புக் கலையானது செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்து நம் தமிழருக்கும் அது பெருமை சேர்க்கிறது.

மொழிப்பயிற்சி

1. மொழிபெயர்ப்பு (மொ.ஆ)

It gave Valluva the Great

For all the world to have;

And the fame rose sky high

Of our Tamil – Land

It made  a necklace of gems,

Named ‘The Lay of the Anklet’

Which grips enraptured hearts

In our Tamil – Land

  • The voice of Bharathi

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி

யாரம் படைத்த தமிழ்நாடு

  • பாரதியார்.
  • ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக.
யாழிசைIt’s like new lute music
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே. பாரதிதாசன்Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand – daughter Learning by rote the verses Of a didactic compilation. Translated by Kavignar Desini
  • Lute music  – யாழிசை                                 grand – daughter      – பேத்தி
  • Chamber    – அறை                                       rote                             – நெட்டுரு
  • to look up   – எட்டிப் பார்த்தேன்     didactic compilation           – நீதிநூல் திரட்டை

3. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.(மொ.ஆ)

  1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .

அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .

  • மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

பயனுள்ள மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

  • வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

துன்பம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

  • கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

வாழ்க்கைக் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

  • குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

வீட்டுப் பாடத்தைக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

4. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.(மொ.வி)

  1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல்  யாவும் அரசுக்கே சொந்தம் . நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில்  புதைத்தல்  நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.
  2. காட்டு விலங்குகளைச் சுடுதல்  தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல்  திருந்த உதவுகிறது.
  3. காற்றின் மெல்லிய தொடுதல்  பூக்கக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல்  பூக்கக்களை மாலையாக்குகிறது.
  4. பசுமையான காட்சியைக் காணுதல்  கண்ணுக்கு நல்லது.
  5. பொதுவாழ்வில் நடித்தல்  கூடாது. நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

5.  அட்டவணையில் விடுபட்டதை எழுதுக. (மொ.ஆ)

வேர்ச் சொல்எழுவாய்த்தொடர்பெயரெச்சத் தொடர்வினையெச்சத் தொடர்விளித்தொடர்வேற்றுமைத் தொடர்
ஓடுஅருணா ஓடினாள்ஓடிய அருணாஓடி வந்தாள்அருணா ஓடாதே!அருணாவிற்காக ஓடினாள்
சொல்அம்மா சொன்னார்சொன்ன அம்மாசொல்லிச் சென்றார்அம்மா, சொல்!கதையைச் சொன்னார்
தாஅரசர் தந்தார்தந்த அரசர்தந்து சென்றார்அரசே தருக!அரசர் கண்டேன்
பார்துளிர் பார்த்தாள்பார்த்த துளிர்பார்த்துச் சிரித்தாள்துளிரே, பார்!துளிருடன்  பார்த்தேன்
வாகுழந்தை வந்ததுவந்த குழந்தைவந்து சென்றதுகுழந்தையே வா!குழந்தை கண்டேன்

6. புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க.(மொ.வி)

தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

வீட்டுக்கு வருமுன்னே. வருவதைக் கூறுவேன் – நான் யார்?

விடை   – காகம்

7. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

வெட்டப்பட்ட மரத்தின் மீது அமர்ந்து

மரம் வளர்ப்பை  ஆய்வது

மனிதன் தலையில் கால் வைத்துக்கொண்டு

மனிதம் பேசுவதைப் போன்றது.

உன் வீட்டை அலங்கரிக்கும் மரச்சாமான்கள்

ஊமைகளாய் காட்சியளிக்கவில்லை;

உவமைகளாய் காட்சியளிக்கிறது!

எதிர்காலத்தில்

டைனோசர் போலவே மரங்களையும்

அட்டையில காணும் அவலம் வருமோ?

இப்படியே போனால் ஏலியன்ஸ் மட்டுமல்ல;

மரமும் வியப்புப்பொருளே!

8. அகராதியைக் காண்க. (மொ.வி)

மன்றல்                       –           திருமணம்,

அடிச்சுவடு                 –           காலடியின் அடையாளம்

அகராதி                     –           அகரமுதலி

தூவல்                         –           மழை, இறகு, பேனா, ஓவியம்

மருள்                          –           மயக்கம், வியப்பு

9. கலைச்சொல் அறிவோம் (நி.அ.த)

Emblem                     – சின்னம்

Thesis                        – ஆய்வேடு

Intellectual     – அறிவாளர்

Symbolism    – குறியீட்டியல்

10. பள்ளியிலும் வீட்டிலும் நான்… (நி.அ.த)

வரிசை எண்பள்ளியில் நான்வீட்டில் நான்
1நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்.வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்.
2உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்.பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்தினை முடிப்பேன்.
3பாடத்துடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்வேன்.அவ்வப்போது  விளையாடுவேன்.
4பிறரிடமுள்ள நல்லப் பண்புகளை மட்டும் கற்றுக்கொள்வேன்.பெற்றோர் சொல்லைக் கேட்டு நடப்பேன்.
5ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை முறையாகப் பயன்படுத்துவேன்.என் தம்பி, தங்கைக்குக் படிக்கக் கற்றுகொடுப்பேன்.
6எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதுடன் உதவிகளையும் செய்வேன்.சில நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பேன்.

கற்பவை கற்றபின்

1. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.

அ)”காமராசர் நகர் எங்கே இருக்கிறது? என்ற வினாவிற்கு “இந்த வழியாகச் செல்லுங்கள்” –என்று விடையளிப்பது

விடை: வினா வகை – அறியா வினா; விடை வகை – சுட்டு விடை

ஆ) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “ எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.

விடை: வினா வகை –  ஏவல் வினா;    விடை வகை- வினா எதிர் வினாதல் விடை

2. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.

பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? ( அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன். (நேர் விடை)

பாமகள்:  அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)

ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர்விடை). நீங்கள் கவியரங்கத்துக்கு  எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? (ஐய வினா)

பாமகள்: ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல்)

Leave a Comment