பத்தாம் வகுப்பு தமிழ் வினா-விடைத் தொகுப்பு இயல் – 1

பத்தாம் வகுப்பு தமிழ்   வினா-விடைத் தொகுப்பு   இயல் – 1

ரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.      

                                                                  அன்னை மொழியே

1.   சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்  சாம்பலும் தமிழ்மணந்து

      வேகவேண்டும்  என்று பாடியவர் ———– ஆவார் .

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           ஆ) க.சச்சிதானந்தன்

இ) பாரதியார்                                               ஈ) நப்பூதனார்

2.   பெருஞ்சித்திரனார்அவர்களின் இயற்பெயர் என்ன?

அ) துரைமாணிக்கம்                                        ஆ) கனகசபை

      இ) சுப்பையா                                                            ஈ) சுப்பிரமணி

3.   பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார்  அவர்களின் படைப்பு அல்ல?

அ) உலகியல் நூறு                                         ஆ) பாவியக்கொத்து

      இ) மாங்கனி                                                            ஈ) மகபுகுவஞ்சி

4.   பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார்  அவர்களின் படைப்பு அல்ல

அ) நூறாசிரியம்                                             ஆ) கனிச்சாறு

      இ) எண்சுவை எண்பது                                ஈ) குருஞ்சிதிட்டு

5.   தென்மொழி, தமிழ்சிட்டுஇதழ்களின்வாயிலாகத்தமிழுணர்வைஊட்டியவர்யார்?

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்      ஆ) க.சச்சிதானந்தன்

      இ) பாரதியார்                                               ஈ) நப்பூதனார்

6.   நாடும்மொழியும்நமதுஇருகண்கள்என்றுகூறியவர்யார்?

      அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           ஆ) க.சச்சிதானந்தன்

      இ) பாரதியார்                                           ஈ) நப்பூதனார்

7.   எந்தமிழ்நாஎன்பதைப்பிரித்தால்இவ்வாறுவரும்.——

அ) எந்+தமிழ்+நா                  ஆ) எந்த+தமிழ்+நா

இ) எம்+தமிழ்+நா                                      ஈ) எந்தம்+தமிழ்+நா

8. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை  ஆகிய நூல்களின் 

அடைமொழிகளின் முறையே——–,——,———,——— ஆகும்.

) நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்ஆ)ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்        இ)ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்ஈ)நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்,ஓங்கு

9.   பெருஞ்சித்திரனாரின்   தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையே

உள்ள பாடல்கள் ——,——- ஆகும்.

அ) அழகார்ந்த செந்தமிழே, செப்பரிய நின்பெருமை

ஆ) செப்பரிய நின்பெருமை, அழகார்ந்த செந்தமிழே

இ) முத்தமிழ் துய்ப்பதால், செப்பரிய நின்பெருமை

ஈ) முத்தமிழ் துய்ப்பதால், அழகார்ந்த செந்தமிழே

                           தமிழ்ச்சொல்வளம்

10. தட்டுஎன்பதற்குஇணையானத்தமிழ்ச்சொல் ———– ஆகும்.

அ) தட்டை                ஆ) கழி                       இ) அடி                       ஈ) கழை

11. திராவிடமொழிகளின்ஒப்பிலக்கணம்என்னும்நூலைஎழுதியவர் ———.

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           ஆ) ஜி.யூ. போப்

      இ) கால்டுவெல்                                           ஈ) வீரமாமுனிவர்

12. திராவிடமொழிகளின்அகராதிகளைஆராயும்போது,  ———வரிசை, தமிழ்மொழி

      அல்லாதபிறமொழிகளில்இல்லை.

அ) ஒருபொருள்பலசொல்             ஆ) பலபொருள்ஒருசொல்

      இ) ஒன்றொழிப்பொதுச்சொல்                    ஈ) ஓரெழுத்துஒருமொழி

13. சொல்லாராய்ச்சியில்பாவாணரும்வியந்தபெருமகனார்யார்?

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           ஆ) தமிழ்த்திருஇரா. இளங்குமனார்

      இ) க. அப்பாத்துரையார்                             ஈ) தமிழழகனார்

14. மொழிஞாயிறுஎன்றழைக்கப்படுபவர்யார்?

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           ஆ) தேவநேயப்பாவாணர்.

      இ) க. அப்பாத்துரையார்                             ஈ) தமிழழகனார்

15.          ’காய்ந்தஇலையும்காய்ந்ததோகையும்’ நிலத்துக்குநல்லஉரங்கள். –  இத்தொடரில்

அடிக்கோடிட்டபகுதிகுறிப்பிடுவது———

அ) இலையும்சருகும்                    ஆ)தோகையும்சண்டும்

இ) தாளும்ஓலையும்                         ஈ) சருகும்சண்டும்

16. வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டைஆகியவற்றைக்குறிக்கும்

     பயிர்வகை ———.

அ) குலைவகை       ஆ)மணிவகை       இ)கொழுந்துவகை   ஈ)இலைவகை

17. இந்திய மொழிகளிலிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் மொழி —–

அ) சமஸ்கிருதம்        ஆ) சீனம்        இ) தெலுங்கு             ஈ) தமிழ்

18. போர்ச்சுகீசு நாட்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பெட்ட கார்டிலா நூல் ——

எழுத்துருவில்  அச்சிடப்பட்டது.

அ) பாலி                     ஆ) பிராகிருதம்                     இ) வட்டெழுது          ஈ) ரோமன்

19. இவற்றுள் எது அடிவகையைக் குறிக்காத சொல் ஆகும்?

அ) தாள்               ஆ) தண்டு

இ) கோல்             ஈ) கோள்

20. இவற்றுள் எது அடிவகையைக் குறிக்காத சொல் ஆகும்?

அ) தட்டு             ஆ) கழை

இ) கழி                 ஈ) துளிர்

21. மரத்தின் அடியிலிருந்து பிரியும் மாபெரும் கிளை ——–.

அ) கவை                        ஆ) கொம்பு

இ) கிளை             ஈ) சினை

22. இவற்றுள் எது கிளைப்பிரிவை குறிக்காத சொல் ஆகும்?

அ) கொப்பு          ஆ) தோகை

இ) சினை             ஈ) இணுக்கு

23. தாவரத்தின் அடிவகையினைப் பொருத்துக.

  1. தாள்                –  நெட்டி, மிளகாய்  
  2. தண்டு             –  கம்பு, சோளம்
  3. கோல்             –  நெல், கேழ்வரகு 
  4. தூறு                –  கீரை, வாழை
  5. தட்டு               –  கம்பு, சோளம்
  6. கழி                  –  புளி, வேம்பு
  7. கழை               –  மூங்கிலின் அடி
  8. அடி                 –  கரும்பின் அடி

விடை:

  1. தாள்            –  நெல், கேழ்வரகு
  2. தண்டு                   –  கீரை, வாழை
  3. கோல்                   –  நெட்டி, மிளகாய்
  4. தூறு            –  குத்துச்செடி, புதர்
  5. தட்டு           –  கம்பு, சோளம்
  6. கழி             –  கரும்பின் அடி
  7. கழை           –  மூங்கிலின் அடி
  8. அடி             –  புளி, வேம்பு

24. தாவரத்தின் கிளையினைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக.

  1. அடி மரத்திலிருந்து பிரியும் மாபெரும் கிளை       – சினை
  2. கவையின் பிரிவு                                                       – போத்து
  3. கொம்பின் பிரிவு                                                       – இணுக்கு
  4. கிளையின் பிரிவு                                                      – கவை
  5. சினையின் பிரிவு                                                      – கொப்பு
  6. போத்தின் பிரிவு                                                       -குச்சு
  7. குச்சின் பிரிவு                                                            – கிளை

விடை

  1. அடி மரத்திலிருந்து பிரியும் மாபெரும் கிளை         – கவை
  2. கவையின் பிரிவு                                          – கொப்பு
  3. கொம்பின் பிரிவு                                         – கிளை
  4. கிளையின் பிரிவு                                         – சினை
  5. சினையின் பிரிவு                                         – போத்து
  6. போத்தின் பிரிவு                                          -குச்சு
  7. குச்சின் பிரிவு                                              – இணுக்கு

25. காய்ந்த அடி மற்றும் கிளைகளுக்கான பெயர்களை பொருத்துக.

  1. சுள்ளி                           – காய்ந்த குச்சு
  2. விறகு                           – காய்ந்த கொம்பும் அடியும்
  3. வெங்கழி                     – காய்ந்த குச்சு காய்ந்த கழி
  4. கட்டை                        – காய்ந்த சிறுகிளை

விடை

  1. சுள்ளி                      – காய்ந்த குச்சு
  2. விறகு                      – காய்ந்த சிறுகிளை
  3. வெங்கழி                 – காய்ந்த கழி
  4. கட்டை                              – காய்ந்த கொம்பும் அடியும்

26. இலை வகையினைக் குறிக்கும்  சொற்களை பொருத்துக

  1. இலை                            – காய்ந்த இலை
  2. தாள்                              – காய்ந்த தாளும் தோகையும்
  3. தோகை                                    – தென்னை, பனை
  4. ஓலை                             – சோளம் , கரும்பு
  5. சண்டு                            – நெல், புல்
  6. சருகு                              – புளி, வேம்பு

விடை

  1. இலை                      – புளி, வேம்பு
  2. தாள்                        – நெல், புல்
  3. தோகை                            – சோளம் , கரும்பு
  4. ஓலை                       – தென்னை, பனை
  5. சண்டு                      – காய்ந்த தாளும் தோகையும்
  6. சருகு                       – காய்ந்த இலை

27. கொழுந்து வகையினைக் குறிக்கும்  சொற்களை பொருத்துக.

  1. துளிர் (தளிர்)                – புளி, வேம்பு
  2. முறி(கொழுந்து)           – நெல்,புல்
  3. குருத்து                          – கரும்பின் நுனிப்பகுதி
  4. கொழுந்தாடை            – சோளம், கரும்பு, தென்னை, பனை

விடை

  1. துளிர் (தளிர்)                     – நெல்,புல்
  2. முறி(கொழுந்து)       – புளி, வேம்பு
  3. குருத்து                     சோளம், கரும்பு, தென்னை, பனை
  4. கொழுந்தாடை                   கரும்பின் நுனிப்பகுதி

28. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக.

  1. அரும்பு                           – பூவின் மலர்ந்த நிலை
  2. போது                             – மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
  3. மலர்                               – பூவின் தோற்றநிலை
  4. வீ                                    – பூ வாடின நிலை
  5. செம்மல்                         – பூ விரியத் தொடங்கும் நிலை

விடை

  1. அரும்பு                    – பூவின் தோற்றநிலை
  2. போது                    – பூ விரியத் தொடங்கும் நிலை
  3. மலர்                        – பூவின் மலர்ந்த நிலை
  4. வீ                            – மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
  5. செம்மல்                             – பூ வாடின நிலை

29. பிஞ்சு வகைகளைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக.

  1. பூம்பிஞ்சு                       – தென்னை, பனை
  2. பிஞ்சு                              – சிறு குரும்பை
  3. வடு                                 – முற்றாத தேங்காய்
  4. மூசு                                 – இளம்பாக்கு
  5. கவ்வை                          – இளநெல்
  6. குரும்பை                        – பூவோடு கூடிய பிஞ்சு
  7. முட்டுக்குரும்பை          – வாழைப்பிஞ்சு
  8. இளநீர்                           – மாம்பிஞ்சு
  9. நுழாய்                            – பலாப்பிஞ்சு
  10. கருக்கல்                         – எள்பிஞ்சு
  11. கச்சல்                             – இளம் காய்

விடை

  1. பூம்பிஞ்சு                            – பூவோடு கூடிய பிஞ்சு
  2. பிஞ்சு                       – இளம் காய்
  3. வடு                          – மாம்பிஞ்சு
  4. மூசு                          – பலாப்பிஞ்சு
  5. கவ்வை                     – எள்பிஞ்சு
  6. குரும்பை                            – தென்னை, பனை
  7. முட்டுக்குரும்பை       – சிறு குரும்பை
  8. இளநீர்                     – முற்றாத தேங்காய்
  9. நுழாய்                      – இளம்பாக்கு
  10. கருக்கல்                          – இளநெல்
  11. கச்சல்                    – வாழைப்பிஞ்சு

30. குலை வகைகளைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக.

  1. கொத்து                         – கேழ்வரகு, சோளம்
  2. குலை                              – நெல், தினை
  3. தாறு                                – வாழைத்தாற்றின் பகுதி
  4. கதிர்                                – அவரை, துவரை
  5. அலகு(குரல்)                  – கொடி முந்திரி
  6. சீப்பு                                – வாழைக்குலை

விடை

  1. கொத்து                              – அவரை, துவரை
  2. குலை                        – கொடி முந்திரி
  3. தாறு                         – வாழைக்குலை
  4. கதிர்                         – கேழ்வரகு, சோளம்
  5. அலகு(குரல்)             – நெல், தினை
  6. சீப்பு                         – வாழைத்தாற்றின் பகுதி

31. கெட்டுப்போன காய்கனிகளைக் குறிக்கும்  சொற்களைப் பொருத்துக.

  1. சூம்பல்                            – குளுகுளுத்து நாறிய பழம்
  2. சிவியல்                           – பதராய்ப் போன மிளகாய்
  3. சொத்தை                        – தென்னையில் கெட்ட காய்
  4. வெம்பல்                         – கோட்டான் அமர்ந்து கெட்ட காய்
  5. அளியல்                          – தேரை அமர்ந்து கெட்ட காய்
  6. அழுகல்                           – நுனியில் சுருங்கிய காய்
  7. சொண்டு                                    – சுருங்கிய பழம்
  8. ஒல்லிக்காய்                   – புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
  9. கோட்டான் காய்           – சூட்டினால் பழுத்த பழம்
  10. தேரைக்காய்                  – குளுகுளுத்த பழம்

விடை

  1. சூம்பல்                      – நுனியில் சுருங்கிய காய்
  2. சிவியல்                     – சுருங்கிய பழம்
  3. சொத்தை                  – புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
  4. வெம்பல்                             – சூட்டினால் பழுத்த பழம்
  5. அளியல்                     – குளுகுளுத்த பழம்
  6. அழுகல்                     – குளுகுளுத்து நாறிய பழம்
  7. சொண்டு                             – பதராய்ப் போன மிளகாய்
  8. ஒல்லிக்காய்              – தென்னையில் கெட்ட காய்
  9. கோட்டான் காய்      – கோட்டான் அமர்ந்து கெட்ட காய்
  10. தேரைக்காய்                   – தேரை அமர்ந்து கெட்ட காய்

32. பழத்தோல் வகையினைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக.

  1. தொலி                             – சுரையின் ஓடு
  2. தோல்                              – தேங்காய் நெற்றியின் மேற்பகுதி
  3. தோடு                             – நெல், கம்பின் மூடி
  4. ஓடு                                  – வரகு, கேழ்வரகின் உமி
  5. குடுக்கை                                    – மிக மெல்லியது
  6. மட்டை                           – திண்ணமானது
  7. உமி                                 – வன்மையானது
  8. கொம்பை                       – மிக வன்மையானது

விடை

  1. தொலி                      – மிக மெல்லியது
  2. தோல்                       – திண்ணமானது
  3. தோடு                       – வன்மையானது
  4. ஓடு                           – மிக வன்மையானது
  5. குடுக்கை                             – சுரையின் ஓடு
  6. மட்டை                     – தேங்காய் நெற்றியின் மேற்பகுதி
  7. உமி                          – நெல், கம்பின் மூடி
  8. கொம்பை                  – வரகு, கேழ்வரகின் உமி

33. மணி வகையினைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக

  1. கூலம்                              – புளி, காஞ்சிரை
  2. பயறு                               – வேம்பு, ஆமணக்கு
  3. கடலை                            – மா, பனை
  4. விதை                              – தென்னையின் வித்து
  5. காழ்                                 – அவரை, துவரை
  6. முத்து                               – அவரை, உளுந்து
  7. கொட்டை                      – வேர்க்கடலை, கொண்டைக்கடலை
  8. தேங்காய்                        – கத்தரி, மிளகாய்
  9. முதிரை                           – நெல், புல்

விடை

  1. கூலம்                        – நெல், புல்
  2. பயறு                        – அவரை, உளுந்து
  3. கடலை                      – வேர்க்கடலை, கொண்டைக்கடலை
  4. விதை                       – கத்தரி, மிளகாய்
  5. காழ்                          – புளி, காஞ்சிரை
  6. முத்து                        – வேம்பு, ஆமணக்கு
  7. கொட்டை                 – மா, பனை
  8. தேங்காய்                  – தென்னையின் வித்து
  9. முதிரை                      – அவரை, துவரை

34. இளம் பயிர் வகையினைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக

  1. நாற்று                             – நெல், சோளம்
  2. கன்று                              – விளாவின் இளநிலை
  3. குருத்து                            – பனையின் இளநிலை
  4. பிள்ளை                          – தென்னையின் இளநிலை
  5. குட்டி                               – நெல், கத்திரி
  6. மடலி      (வடலி)           – மா, புளி, வாழை
  7. பைங்கூழ்                       – வாழையின் இளநிலை

விடை

  1. நாற்று                       – நெல், கத்திரி
  2. கன்று                        – மா, புளி, வாழை
  3. குருத்து                      – வாழையின் இளநிலை
  4. பிள்ளை                    – தென்னையின் இளநிலை
  5. குட்டி                        – நெல், சோளம்
  6. மடலி(வடலி)           – விளாவின் இளநிலை
  7. பைங்கூழ்                  -பனையின் இளநிலை

                                                                  இரட்டுற மொழிதல்

35. மெத்தஅணிகலன்களாகதமிழழகனார்குறிப்பிடும்நூல் ———— ஆகும்.

அ) ஐஞ்சிறுகாப்பியங்கள்                            ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்

      இ) சங்கஇலக்கியம்                          ஈ) பக்திஇலக்கியம் 

36. தமிழழகனாரின்சிறப்புப்பெயர் ———– ஆகும்.

அ) கவிமணிஆ)மொழிஞாயிறு      இ) சந்தக்கவிமணிஈ) பாவலரேறு

37. சண்முகசுந்தரம்என்பதுயாருடையஇயற்பெயர்?

     அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           ஆ) தேவநேயப்பாவாணார்.

இ) க. அப்பாத்துரையார்                           ஈ) தமிழழகனார்

38.          ’மெத்தவணிகலன்’ என்னும்தொடரில்தமிழழகனார்குறிப்பிடுவது—–

அ) வணிககப்பல்களும்ஐம்பெரும்காப்பியங்களும்

) பெரும்வணிகமும்பெரும்கலன்களும்

இ) ஐம்பெரும்காப்பியங்களும்அணிகலன்களும்

ஈ) வணிககப்பல்களும்அணிகலன்களும்

39. தமிழழகனார் பாடிய சிற்றிலககியங்களின் எண்ணிக்கை ——–.

அ) 10             ஆ) 12                     இ) 18             ஈ) 96

                                                எழுத்து, சொல்

40.          சார்பெழுத்துகள் ————— வகைப்படும்

  அ) 2                ஆ) 10                             இ) 12                         ஈ) 18

41. உயிரளபெடை ————- வகைப்படும்.

     அ) 2               ஆ) 3                       இ) 5                            ஈ) 5

42. சூடு – இச்சொல் ———— தொழிற்பெயர்ஆகும்.

     அ) தொழிற்பெயர்                ஆ) முதனிலைத்தொழிற்பெயர்

இ) எதிர்மறைத்தொழிற்பெயர்                   ஈ) முதனிலைத்திரிந்ததொழிற்பெயர்

43.          இவற்றுள்முதனிலைத்தொழிற்பெயரைத்தெரிவுசெய்க.

     அ) கெடுதல்   ஆ) கெடு               இ) கேடு                     ஈ) செல்லாமை

44. செய்யுளில்ஓசைகுறையாதவிடத்தும்இனிமையானஓசைக்காகவரும்

அளபெடை ————— அளபெடைஆகும்.

     அ) இன்னிசை        ஆ) சொல்லிசை         இ) இசைநிறை          ஈ) ஒற்றளபெடை

45. அளபெடைஎன்பதற்கு ———— என்பதுபொருள்.

     அ) குறுகிஒலித்தல்               ஆ) நீண்டுஒலித்தல்

இ) திரிதல்                                                     ஈ) ஓசைமாறுபடாதுஒலித்தல்

46. மொழி ————– வகைப்படும்.

அ) 2    ஆ) 3                          இ) 4                            ஈ) 5

47. ஒற்றளபெடையாகவரும்எழுத்துகளின்எண்ணிக்கை ————-.

     அ) 8    ஆ) 9                           இ) 10                         ஈ) 11

48. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள்

அளபெடுத்தலை ——– என்பர்.

அ) செய்யுளிசை அளபெடை      ஆ) இன்னிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை            ஈ) ஒற்றளபெடை

49. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர்———-

     அ) இசைநிறை அளபெடை        ஆ) இன்னிசை அளபெடை

      இ) சொல்லிசை அளபெடை            ஈ) ஒற்றளபெடை

50. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத்  திரிந்து அளபெடுப்பது ——-.

      அ) இசைநிறை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை

      இ) சொல்லிசை அளபெடை        ஈ) ஒற்றளபெடை

51. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, மெய்யெழுத்துகள்

அளபெடுத்தலை ——– என்பர்.

      அ) செய்யுளிசை அளபெடை           ஆ) இன்னிசை அளபெடை

      இ) சொல்லிசை அளபெடை            ஈ) ஒற்றளபெடை

52. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது ———-

அ) தனிமொழி        ஆ) தொடர்மொழி    இ) பொதுமொழி  ஈ) மூவகை மொழி

53. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது—.

அ) தனிமொழி          ஆ) தொடர்மொழி இ) பொதுமொழி  ஈ) மூவகை மொழி

54. எட்டு, வேங்கை – இச்சொற்கள் ———-க்குச் சான்றுகள் ஆகும்.

அ) தனிமொழி          ஆ) தொடர்மொழி    இ) பொதுமொழி  ஈ) மூவகை மொழி

55. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ——– தொழிற்பெயர்.

அ) முதல்நிலைத் தொழிற்பெயர்  ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்

இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்  ஈ) வினையாலணையும் பெயர்

56. எதிர்மறைப்பொருளில் வரும் தொழிற்பெயர் ———–

      அ) முதல்நிலைத் தொழிற்பெயர்  ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்

இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

57.நடவாமை, கொல்லாமை – இச்சொற்களில் வரும் தொழிற்பெயர் ———-

      அ) முதல்நிலைத் தொழிற்பெயர்  ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்

இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

58. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் ————.

     அ) முதல்நிலைத் தொழிற்பெயர்  ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்

இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

59. தட்டு, உரை, அடி – இச்சொற்களில் வரும் தொழிற்பெயர் ———-

      அ) முதல்நிலைத் தொழிற்பெயர்  ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்

இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

60. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும்

வேரொரு பயனிலையைக் கொண்டு முடிவது ——–

      அ) தொழிற்பெயர்                            ஆ) பண்புப்பெயர்

இ) வினையாலணையும் பெயர் ஈ) சினைப்பெயர்

61. தொழிற்பெயர் ———– இடத்திற்கு மட்டும் உரியது.

அ) தன்மை                ஆ)முன்னிலை           இ) படர்க்கை          ஈ) மூவிடம்

62. ’கேட்டாவர்மகிழப்பாடியபாடல்இது’ – இத்தொடர்இடம்பெற்றுள்ள

     தொழிற்பெயரும்வினையாலணையும்பெயரும்முறையே—————-

     அ) பாடிய; கேட்டவர்                            ஆ)பாடல்; பாடிய

இ) கேட்டவர் ; பாடிய                                  ஈ) பாடல் ; கேட்டவர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க .

”அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!”

  1. இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?  

அ)கனிச்சாறு         ஆ)கொய்யாக்கனி   இ)சிலப்பதிகாரம்     ஈ) கம்பராமாயணம்

  • இப்பாடலின் ஆசிரியர் யார்?  

அ)கம்பர்        ஆ)இளங்கோவடிகள்     இ)கண்ணதாசன்  ஈ)பெருஞ்சித்திரனார்.

  • செந்தமிழே – இலக்கணக்குறிப்புத் தருக.  

அ)எண்ணும்மை       ஆ)வினைமுற்று        இ)பெயரெச்சம்         ஈ)பண்புத்தொகை

  • எந்தமிழ்நா – பிரித்து எழுதுக.  

அ)எந்+தமிழ்+நா                               ஆ) எந்தமிழ்+நா

இ) எம்+தமிழ்+நா                     ஈ) எம்+ தமிழ்நா

(செந்தமிழே ! உள்ளுயிரே! – விளிர்த்தொடர்;   செப்பரிய, முகிழ்த்த – பெயரெச்சம்)

  • பேரரசே – பிரித்து எழுதுக.

அ)பேர்+அரசே                      ஆ)பேர+ரசே

இ) பெரிய+அரசே               ஈ) பெருமை+ அரசே

  • நாட்டிடையில் – பிரித்து எழுதுக.

அ)நாடு+இடையில்             ஆ)நாட்டு+இடையில்

இ) நா+இடையில்               ஈ) நாட்டி+ டையில்

  • இன்னறும்  – இலக்கணக்குறிப்புத் தருக.  

அ)எண்ணும்மை       ஆ)வினைமுற்று        இ)பெயரெச்சம்         ஈ)பண்புத்தொகை

  •  முகிழ்த்த  – இலக்கணக்குறிப்புத் தருக.  

அ)எண்ணும்மை         ஆ)வினைமுற்று          இ)பெயரெச்சம்       ஈ)பண்புத்தொகை

  • எண்தொகையே – பிரித்து எழுதுக.  

அ)எண் + தொகையே                      ஆ)எண்தொகை + யே

இ)என்+ தொகையே                        ஈ)எட்டு + தொகையே

10. முன்னை – பொருள் தருக.

அ)புதுமை       ஆ)பழமை      இ)நன்மை       ஈ)தீமை

11. முந்தை – பொருள் தருக.

அ)புதுமை       ஆ)பழமை      இ)நன்மை       ஈ)தீமை

      12. முந்துற்றோம் – இலக்கணக்குறிப்பு தருக.

அ)தன்மை ஒருமை வினைமுற்று    ஆ) தன்மை பன்மை வினைமுற்று      

இ)ஆண்பால் வினைமுற்று             ஈ)வியங்கோள் வினைமுற்று

(மொழியே!,செந்தமிழே!, நறுங்கனியே!, பேரரசே!மகளே! , மாண்புகழே!,பாப்பத்தே!,  எண்தொகையே!,  நற்கணக்கே! மன்னுஞ்சிலம்பே!,  மணிமே கலைவடிவே!, – விளித்தொடர்)

குறுவினாக்கள்        –                              அன்னை மொழியே

1. மண்ணும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ

வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெரும் காப்பியங்களைத்  தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  • சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

                                                        இரட்டுற மொழிதல்

2. தற்காலஉரைநடையில்சிலேடைஅமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  • அக்காலத்தில் நம் முன்னோர், உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பழங்களை

உண்பதன் மூலம் பெற்றனர்.

  • ஆனால் இக்காலத்திலோ பழங்கள் (பழம்+கள்)

உண்பதன் மூலம் பெறுகின்றனர்.

                                                        (கூடுதல் வினாக்கள்)

3. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன? அல்லது சிலேடை அணி என்றால் என்ன?

ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.

இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

                                                        எழுத்து, சொல்

4. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.

  • வேம் +  கை = வேவுகின்ற கை – இது தொடர் மொழி. (ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வருவது)   (அல்லது)  வேங்கை பாய்ந்தது.
  • வேங்கை என்பது தனித்து நின்று மரத்தையும்,
  • வேங்கை என்னும் அதே சொல், வேம் +  கை என்று பிரிந்து நின்றுவேவுகின்ற கை என்ற பொருளையும் தருகிறது. எனவே, அது பொதுமொழி.
  • (அதாவது, ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அதே சொல் பிரிவு பட்டு நின்று வேறொரு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக வருவதுபொது மொழி ஆகும்.)

5. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள்உள்ளன.

ஒருசீப்பில் பலதாறு  வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.- மேற்கண்ட தொடர்களில் சரியான

தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான

காரணத்தை எழுதுக.

  • ஒரு தாற்றில் பல சீப்பு  வாழைப்பழங்கள் உள்ளன என்பது சரி.
  • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்பதும் சரி.  ஆனால்,
  • ஒரு சீப்பில் பல தாறு  வாழைப்பழங்கள் உள்ளன என்பது தவறு. ஏனெனில், தாறில்தான் சீப்பு இருக்கும். மாறாக சீப்பில் தாறு இருக்காது.

6.’உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ்’ – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி

அதன் இலக்கணம் தருக.

  • உடுப்பதூஉம், உண்பதூஉம் என்னும் சொற்கள் இன்னிசை அளபெடை சொற்கள் ஆகும்.
  • செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக உயிர்நெடிலெழுத்துகள் அளபெடுப்பது  இன்னிசை அளபெடை ஆகும்.

கூடுதல் வினாக்கள்

                                        (கூடுதல் வினாக்கள்)

  • சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவையாவன:

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுமரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்.

  • உயிரளபெடை என்றால் என்ன?
  • செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவுசெய்ய, உயிரெழுத்துகளுள் நெடிலெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.
  • இவை மொழிக்கு மூவிடத்திலும் வரும்.
  • உயிரளபெடையின் வகைகள் யாவை?
  • செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)
  • இன்னிசை அளபெடை
  • சொல்லிசை அளபெடை
  • செய்யுளிசை அளபெடை என்றால் என்ன?
  • செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவுசெய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை செய்யுளிசை அளபெடை என்பர்.
  • இதனை இசைநிறை அளபெடை என்றும் அழைப்பர்.
  • சான்று: ஓஒதல் வேண்டும்
  • இன்னிசை அளபெடை என்றால் என்ன?
  • செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிய ஓசைக்காகநெட்டெழுத்துகள் அளபெடுத்தலை இன்னிசை அளபெடை என்பர்.
  • சான்று: கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
  • சொல்லிசை அளபெடை என்றால் என்ன?
  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
  • சான்று: உரனசைஇ உள்ளம்
  • ஒற்றளபெடை என்றால் என்ன?
  • செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துக்களான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய்,ல்,ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
  • எங்ங்கிறைவன்
  • சொல் என்றால் என்ன?
  • ஓரெழுத்து தனித்தோ அல்லது பல எழுத்துகள் சேர்ந்தோபொருள் தருமாறி அமைவது  சொல் ஆகும்.
  • தை, கண், பெற்றேன்
  • மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  • மொழி மூவைப்படும்.
  • தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
  • தொழிற்பெயர் என்றால் என்ன?
  • ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
  • நடத்தல்
  • விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
  • வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதிபெற்ற தொழிற்பெயர் ஆகும்.
  • நட+தல்= நடத்தல்
  • முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?
  • வினையடி (பகுதி)  மட்டும் தொழிலை குறித்தால் அது முதனிலைத் தொழிற்பெயராகும்.
  • சுடு
  • முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன?
  • வினையடி (பகுதி)  திரிந்து  தொழிலை குறித்தால் அது முதனிலைத் திரிந்த தொழிற்பெயராகும்.
  • சூடு
  • எதிர்மறை தொழிற்பெயர் என்றால் என்ன?
  • எதிர்மறை பொருளில் வரும் தொழிற்பெயர் எதிர்மறைத் தொழிற்பெயராகும்.
  • கொல்லாமை
  • வினையாலணையும் பெயர் என்றால் என்ன?
  • ஒரு வினைமுற்றுச் சொல் வினையைக் குறிக்காமல் வினை செய்தவனைக் குறித்தால் அது வினையாலணையும் பெயர் ஆகும்.
  • வந்தவன்
  • தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
தொழிற்பெயர்வினையாலணையும் பெயர்
வினையைக் குறிக்கும்வினை செய்தவனைக் குறிக்கும்
காலம் காட்டாதுகாலம் காட்டும்
படர்க்கைக்கே உரியதுமூவிடத்திற்கும் உரியது
எ.கா: பாடுதல்எ.கா: பாடியவள்

சிறுவினாக்கள்                    அன்னை மொழியே

1. தமிழன்னையைவாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

  • அன்னை மொழியாகவும், அழகாய் அமைந்த செந்தமிழாகவும், பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனியாகவும்,
  •  கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசாகவும், பாண்டிய மன்னனின் மகளாகவும்,
  • திருக்குறளின் பெருமைக்கு உரியவளாகாவும், பத்துப்பாட்டாகவும், எட்டுத்தொகையாகவும், பதினெண்கீழ்க்கணக்காகவும்,நிலைத்த சிலப்பதிகாரமாகவும்,அழகான மணிமேகலையாகவும் உள்ளதால் தமிழே,
  • உன் பொங்கி எழும் நினைவுகளால் உன்னைத் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்று பாவலரேறு வாழ்த்துகிறார்.

                                                     இரட்டுற மொழிதல்

2. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

     தமிழ்

  • இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது. 
  • முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால்  வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது. 
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால்  காக்கப்பட்டது.

கடல்

  • முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது .
  • வெண்சங்கு, சலஞ்சலம்,  பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
  • அலைகளால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

                                                     எழுத்து, சொல்

3.  ‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது,

பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக  மாற்றி எழுதுக.

அறிந்தது                    – அறிதல் 

அறியாதது                 – அறியாமை

            புரிந்தது                      –  புரிதல்

புரியாதது                   – புரியாமை

தெரிந்தது                   – தெரிதல்

தெரியாதது                – தெரியாமை

பிறந்தது                     – பிறத்தல்

பிறவாதது                  – பிறவாமை.

4. ’புளியங்கன்று  ஆழமாக நடப்பட்டுள்ளது’. – இதுப்போல் இளம் பயிர் வகை ஐந்தின் 

     பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

கத்தரி நாற்று சந்தையில் விற்கக் கண்டேன்.

தென்னம்பிள்ளை வரிசையாக நடப்பட்டுள்ளது.

ஏரிக்கரையில்நட்ட பனை, மடலியை  விரித்து அழகாக அசைகிறது.

வாழைக்கன்று நட்டு வைத்தால் நம் வாழ்வும் வளரும்.

நெற்பைங்கூழ் மெல்ல வளர ஆரம்பித்துவிட்டது.

நெடுவினாக்கள்                                               (அன்னை மொழியே)

1.  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்பெருஞ்சித்திரனாரின்

          தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

  • சுந்தரனார், தாம் இயற்றிய மனோன்மணியத்தில்  கடலை ஆடையாக உடுத்திய பூமித்தாய், பாரத கண்டத்தை அழகியமுகமாகவும், தக்காணத்தை நெற்றியாகவும்,  தமிழகத்தை அந்த நெற்றியில்  வைத்த திலகமாகவும், அந்தத் திலகத்தின்  மணமாகத் தமிழையும்  உருவகப்படுத்திப் தமிழ்த்தாயின் சிறப்பைப் பாடியுள்ளார்.
  • பெருஞ்சித்திரனார் தமிழை,  கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நின்று, நிலைத்து மண்ணுலகம் போற்ற வாழும் பேரரசி என்கிறார். முன்னைக்கும்முன்னையாய்முகிழ்த்த தமிழ் என்றார்.
  • சுந்தரனார் அன்னைத் தமிழின் சீரிளமையைத்  திறம் வியந்து வாழ்த்துத்துகிறார்.
  • பெருஞ்சித்திரனாரோ தமிழை, முன்னும் நினைவால் முடிதாழ வணங்கி வாழ்த்துவதாகக் கூறுகிறார்.
  • இருவருமே தமிழ்த்தாயின் பெருமைகளைக்காலந்தோறும் உணர்ந்து போற்றியுள்ளனர். தமிழன்னைக்கு அணிகலன்களைப் பூட்டி அழகு  பார்த்துள்ளனர்.

                                                     தமிழ்ச்சொல் வளம்

2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்

          மன்றத்தில் பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக.

  • காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கு இடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவாயினும், தமிழ்மட்டும் அதில் தலைச்சிறந்தது.
  • தமிழ்சொல்வளத்தைப் பல துறைகளிலும் காணலாம். ஆயினும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
  • ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைத் தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி எனப் பல சொற்களில் தமிழர்கள் வழங்குகின்றனர். தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்குக் கவை, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு எனப் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • தாவரங்களின் வகைகளுக்கும் பிரிவுகளுக்கும் ஏற்ப இலை, தாள், தோகை, ஓலை என்று பெயரிட்டு வழங்கினர். காய்ந்த இலையை சருகு எனவும் காய்ந்த தாளையும் தோகையையும் சண்டு என்றும் வழங்கினர்.
  • மேலும், தாவரங்களின் நுனிப்பகுதியைத் துளிர், தளிர், முறி, கொழுந்து, குருத்து, கொழுந்தாடை என்னும் பெயர்களால்  வழங்கினர்.
  • பூவின் பல்வேறு நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் முதலிய பெயர்களால் வழங்கினர். பிஞ்சினை, பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, முட்டுக்குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல் முதலிய பெயர்களால் வழங்கினர். மேலும், குலைகளைக் கொத்து, குலை, தாறு, கதிர், அலகு, சீப்பு, குரல் முதலிய பெயரால் வழங்கினர்.
  • கெட்டுபோன காய்கனியைச் சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு முதலிய பெயர்களால் அழைப்பர். அதுபோலவே பழங்களின் மேல் தோலையும் தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்பை முதலிய பெயர்களால் அழைப்பர். மணி வகைகளை, கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை முதலிய பெயர்களால் அழைப்பர்.
  • தாவரத்தின் இளம் பயறு வகையினை நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, வடலி, பைங்கூழ் முதலிய பெயர்களால் அழைப்பர். இவ்வாறு ஒரு தாவத்திற்கு மட்டும் நாம் இவ்வளவு சொற்களைப் பயன்படுத்துகிறோம்.  இதைப்போலத்தான் பிறத்துறையிலும் நம் சொல்வளம் மலிந்துகிடக்கிறது.
  • உலகில் இன்று நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நடந்துகொண்டு வருகிறது. ஒன்றைப் புதிதாகக் கண்டுபிடித்து அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகின்றபோது நாம் அதற்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
  • ஏனெனில், ஒரு பொருளுக்கு எந்த நாடு பெயர் வைக்கிறதோ அதையே நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் காலப்போக்கில்  பிறமொழிச்சொற்களே தமிழில் மிஞ்சும் அவலம் ஏற்படும். 
  • ஆம். அன்று பயன்படுத்திய நாழி, ஆழக்கு, மரக்காள், படி முதலிய அளவைப் பயர்களுக்குப் மாற்றாக, இன்று நாம் கிலோ, கிராம் முதலிய பிறமொழி சொற்களைத்தானே பயன்படுத்துகிறோம். இதே நிலைமைதான் பின்னாளில் ஏற்படும். எனவே, நாள்தோறும் கண்டுபிடிக்கின்ற புதுப்புது பொருள்களுக்கு நாம் தமிழில் பெயர் சூட்டி  அதை பேச்சுவழக்கில் பயன்படுத்தினால் நம் சொல்வளமும் கூடும்; தாய்மொழியும் காப்பாற்றப்படும்.

3. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

          சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத்

          தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ்

          உரைநடையின்  சிறப்புப் பற்றி உரையாடுதல்.

உறவினர் மகள் (ஓவியா) :வணக்கம் மாமா!

முகிலன் :      வணக்கம் ஓவியா!

ஓவியா :      எனக்கு தமிழில்  பேச மட்டுமே தெரியும்; ஆனால், எழுதவோ

      படிக்கவோ தெரியாது. எனவே, எனக்கு நீங்கள் தமிழ் மொழியில்

      எழுதவும் படிக்கவும்  கற்றுத்தருகிறீர்களா?

முகிலன் :      கற்றுத்தருகிறேன் ஓவியா!  தமிழில் எழுதுவதும் படிப்பதும்  மிகவும்

            எளிமையானது. ஏனெனில் தமிழில் ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு     

            தனி எழுத்து உள்ளது. எனவே, எழுத்துகளைக் கற்றுக்கொண்டாலே     

            எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்வது எளிது.

ஓவியா   :      அப்படியா? மகிழ்ச்சி! ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்து உள்ளது

எனில்எழுத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அல்லவா?   எனவே, அதை   நான் கற்றுக்கொள்வதே சிரமமாக இருக்கும்போலிருக்கிறதே!

முகிலன்  :     இல்லை. தமிழில் முதலெழுத்து , சார்பெழுத்து என இருவகை எழுத்துகள்

            உள்ளன. அதில் முதலெழுத்துகள் மொத்தம்  முப்பது ஆகும். சார்பெழுத்து

            முதலெழுத்தைச் சார்ந்தே பிறக்குமாதலால் முதலெழுத்து முப்பதையும்  

            கற்றுக்கொண்டாலே சார்பெழுத்தை எளிதில் கற்றுகொள்ளலாம்.

ஓவியா    :    அப்படியா?

முகிலன்  :     ஆம் ஓவியா. தமிழில் எழுதுவதும் மிக எளிமையானதே. தமிழில் இக்காலத்தில் பேசுகின்ற வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டே எளிய நடையில்எழுதலாம். மேலும், உலகில் அன்றாடம் கண்டுபிடிக்கப்படுகின்ற ஒவ்வொருபொருளுக்கும் தமிழில் உடனடியாகப் பெயர் சூட்டப்பட்டு அது வழக்கில்வருகிறது. அதுமட்டுமல்லாமல் காலந்தோறும் ஏற்படுகின்ற புதுமையைஏற்றுக்கொண்டு நம் தமிழ் மொழி தன்னைப் புதுப்பித்தும் கொள்கிறது.   எனவே, தமிழில் எழுதுவது மிக எளிமையானதே!

ஓவியா    :    தமிழ், செய்யுள் வடிவில்தான் இருக்கும்  என்று கேள்விப்பட்டேனே!

முகிலன் :      பழங்காலத்தில் இலக்கியங்களும்இலக்கணங்களும் செய்யுள் வடிவில்தான்

இருந்தது. ஆனால் மக்கள் பேசியது என்னவோ உரையாடல் வடிவில்தான். அந்த உரையாடல்தான் காலப்போக்கில் உரைநடையாக வளர்ந்தது.  இன்று எழுதப்படுகின்ற கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆராய்ச்சிக்குறிப்பு,  ஆய்வுக்கட்டுரைகள், நாவல்கள் முதலிய அனைத்தும்உரைநடைவடிவில்தான் உள்ளது.

ஓவியா  :       இந்த உரைநடை வளர்ச்சிக்கு யாரெல்லாம் பாடுபட்டுள்ளனர் மாமா?

முகிலன் :      திரு.வி.க, மு.வ, பாரதியார் , அண்ணா, பெரியார், வீரமாமுனிவர்

            முதலியோர் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளனர் ஓவியா.

ஓவியா  :       தமிழில் தமிழிலக்கியங்கள் மட்டும்தானே இருக்கும் . அதைக்   கற்பதால்

            என்ன பயன்வரப் போகிறது?

முகிலன்:       உலக மொழியிலுள்ள தலைச்சிறந்த இலக்கியங்கள்,  கண்டுபிடிப்புகள்

அனைத்தும் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உரைநடை வடிவில்

உள்ளது. எனவே, தமிழ்க்கற்றுக்கொள்வதால் பல பயன்கள் உண்டு.

ஓவியா     :    உடனே கற்றுக்கொள்கிறேன் மாமா!

விடைக்கேற்ற வினாவினை அமைக்க.

      அ. ”நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்கிறார் மாகாக்கவி பாரதியார்.

                  விடை:”நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்றவர் யார்?

      ஆ. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவதுமொழி.

                  விடை:திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது எது?

உரைப்பத்தி வினா – விடை

”தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ளஒருபொருட்பலச்சொல் வரிசைகள் அவற்றில் இல்லாக் குறை எந்தத் தமிழறிஞர்க்கும்மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாகஉரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட    மொழிகளுக்கு உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள“ என்று திராவிட         மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் கால்டுவெல் அவர்கள்.

            அ)  தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளில் எவ்வரிசை சொற்கள் இல்லை?

                   ஒருபொருட்பலச்சொல் வரிசை

            ஆ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

            கால்டுவெல்

            இ)  இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

            தமிழ்ச்சொல் வளம்  (ஏற்புடைய விடை எதுவாயினும்)

மொழிப்பயிற்சி

1. வினைமுற்றுறை வினையாலணையும் பெயராக மாற்றிக் தொடர்களைஇணைத்து

          எழுதுக. (மொ.ஆ)

  • கலையரங்கத்தில் எனக்காக காத்து இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

      கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருந்தவரை அழைத்து வாருங்கள்.

  • ஊட்ட மிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்ட மிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

  • நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச்சந்தித்தவர் என் நண்பர்.

  • பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

2.  ந்தக் கவிதையில் வந்த பிழைகளைத்  திருத்துக.  (மொ. ஆ)

”தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

தேரும்  சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே”

”தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தோரும்  சிலப்பதி காரமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே”

3.  கீழ்க்காணும்சொற்களின்கூட்டப்பெயர்களைக்கண்டுபிடித்துஎழுதுக.(மொ.ஆ)

கல்                  – குவியல்        (கற்குவியல்)

பழம்               – குலை           (பழக்குலை)

புல்                  – கட்டு                        (புற்கட்டு)

ஆடு                – மந்தை          (ஆட்டுமந்தை)

4. மொழிபெயர்க்க. (மொ.ஆ)

அ) If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to

      him in his own language that goes to his heart –  Nelson Mandela

நீங்கள் ஒரு மொழியில் மனிதரிடம் பேசினால், அது அவரின் அறிவைச் சென்றடைவதால் அவர் புரிந்துகொள்வார். நீங்கள் அவருடைய சொந்த மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்தைத் தொடும். – நெல்சன் மண்டேலா.

ஆ)            Language is the road map of a culture. It tells  you where its people come from and

where they are going –  Rita Mae Brown

மொழி என்பது பண்பாட்டின் வழிகாட்டி. அது மக்கள் எங்கே இருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதைக் கூறும். – ரீட்டா மே பிரவுன்.

5.   தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு    \

            சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.(மொ.ஆ)

  1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல , இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

பாரில் வாழும் மாந்தரில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப்போல , இன்சொல் இருக்க வன்சொல் பேசித்துன்பப்படுகின்றனர்.

  • வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

வள்ளல் குமணன் ஏழ்மையால்  வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைஈந்து மங்காப் பெருமை பெற்றான்.

  • நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயிலைப் போலஇன்பம் கொண்டனர்.

  • சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

பூங்காவில்  பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

  • பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

போல் அமைதியும் வேங்கை போல் வலிமையும் வேழம் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

6. சொற்களைஇணைத்துப்புதியசொற்களைஉருவாக்குக.(மொ.வி)

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை,  வான்,  பூ).

பூவிலங்கு, தேன்மழை, தேன்பூ, விண்மழை, மணிமேகலை, வான்மழை, பூமழை, செய்தேன்.

7.  அகராதியைக் கண்டு பொருள் எழுதுக.(மொ.வி)

அடவி             –           காடு

அவல்                                     –           பள்ளம், விளைநிலம், குளம்

சுவல்                           –           மேட்டு நிலம்,தோள்,  கழுத்து

செறு                           –           வயல், பாத்தி,   செய்

பழனம்                       –           பொய்கை, மருத நிலம், சேற்று நிலம்,  பொது நிலம்

புறவு                           –           காடு, முல்லைநிலம், புறா, முல்லைக்கொடி

8. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

அறிவுப்பூட்டைத் திற          

உலகை உற்றுநோக்கும் போதும்

      சிந்திக்கும் போதும்

      அறிவுப்பூட்டைத் திறக்காத மனிதா!

      ஏட்டைப் புரட்டும்போதுமட்டும்

      ஏன் திறக்கிறாய் ?

      மூடப்பட்ட உன் அறிவுப்பூட்டு

      சுயச்சிந்தனையையும் அனுபவத்தையும் பெறத் தவறிவிட்டது!

      இவையிரண்டும்  இல்லாத ஏட்டுக்கல்வி

கலப்பை இல்லாத ஏர் போன்றது

என்பதை மட்டும் மறந்துவிடாதே!

9.  குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள்

     அமைக்க.  (மொ.வி)

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

  1. குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?
  2. அவ்வப்போது நினைவுக்கு வந்தும் எழுதி வைக்காத  கவிதைகள் , சுவைக்காத இளநீர்போல் ஆகுமன்றோ?
  3. காப்பியச் சுவையினைக் கம்பராமாயணத்தில் பெறலாமன்றோ?
  4. மனிதகுல மேன்மையை உணராதவரும் மனிதராவரோ?
  5. விடுமுறைநாள் இல்லாத வாரமும் மாணவர்களுக்குண்டோ?

10. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.  (மொ.வி)

  1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை    –        நான்கு                  –       
  2. எறும்பு தன் கையால் எண்சாண்           –        எட்டு                              –       
  3. ஐந்து சால்பு ஊன்றிய தூண்               –        ஐந்து                     –       
  4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி–         நான்கு, இரண்டு   –    
  5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி           –        ஆயிரம்                 –      ௧௦௦௦

தமிழெண்கள்    (1- ௧, 2- ௨, 3- ௩, 4-௪, 5- ௫, 6- ௬, 7- ௭, 8- ௮, 9- ௯, 0 – )

11.         கலைச்சொல் தருக.  (நி.அ.த)

Vowel                         –           உயிரெழுத்து

consonant                  –           மெய்யெழுத்து

Homo graph              –           ஒப்பெழுத்து

Monolingual              –           ஒரு மொழி

Conversation            –           உரையாடல்

Discussion                –           கலந்துரையாடல்

12.கொடுக்கப்பட்டுள்ள  தனிமொழிகளுடன் சொற்களை இணைத்து  தொடர்மொழிகளாக்குக.

(தேன், நூல், பை, மலர், வா)

  • தேன் இனிக்கும்.
  • நூல் வாங்கி வந்தேன்
  • பை எங்கே உள்ளது?
  • மலர் அழகாக மலர்ந்துள்ளது.
  • வா என்று அம்மா அழைத்தாள்.

13. வினை அடியை விகுதியுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

(காண், சிரி, படி, தடு)

  • காணுதல், காட்சி, காணல், காணாமை
  • சிரித்தல், சிரிக்காமை
  • படித்தல், படிக்காமை
  • தடுத்தல், தடுக்காமை

14. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன்: எங்கே செல்கிறாய்?(தொடர்மொழி)

தம்பி: கடைக்கு(தனிமொழி)

அண்ணன்: கடையில் எதற்கு வாங்குகிறாய்?(தொடர்மொழி)

தம்பி: வீட்டில் இருந்தது தீர்ந்துவிட்டது.(தொடர்மொழி)

அண்ணன்: எப்படி? (தனிமொழி)

தம்பி: அம்மா தவறி கீழே கொட்டிவிட்டார்கள். (தொடர்மொழி)

அண்ணன்: சரி, வாங்கி வா.(தொடர்மொழி)

தம்பி: சரி அண்ணா! (தொடர்மொழி)

15. மலை என்னைஅடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும்

கீழும் பார்ப்பேன்; சுற்றும் முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். – இத்தொடரில்

உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெய்தித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

அழைக்கும்    – அழைத்தல்,

ஏறுவேன்       – ஏறுதல்

அமர்வேன்     – அமர்தல்

பார்ப்பேன்     – பார்த்தல்

எய்தும்           – எய்துதல்

16. சுட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

தொழிற்பெயர்                                              _  கோறல்

முதனிலைத் தொழிற்பெயர்                                    _ சுட்டு, சொட்டு

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்           _  வழிபாடு, கேடு

பாநயம் பாராட்டுக. 

     தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே!

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே!

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே!

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே!

          தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!

  • க. நமச்சிவாயர்.

செந்தமிழ் மொழியே!

                         பொருளடக்கம்
முன்னுரைதிரண்டகருத்து,        மையக்கருத்துதொடைநயங்கள்சொல்நயம்,              அணிநயம்சந்த நயம்                சுவை நயம்முடிவுரை

முன்னுரை

                     ”ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

                  உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே” – முதலிய பொருள்சுவை மிக்க வரிகளை உடைய இப்பாடலின் நயத்தினை இப்போது காண்போம்.

திரண்ட கருத்து                            

                                                     செந்தமிழ் மொழியே!

தேனைக்காட்டிலும் இனிமையான செந்தமிழ் மொழியே!, தென்னாடாகிய தமிழ்நாடு முழுதும் தெரியுமாறு திகழும் தென்மொழியே!,  என் உடலைக் காட்டிலும் ஒளிர்கின்ற ஒளிபொருந்திய சிறப்புமிகு தமிழே!, நல்லுணர்வால் உணரப்படும் மொழியே!, வானைவிட ஓங்கிய வள்ளல் தன்மை பொருந்திய மொழியே!, மாந்தருக்கு இரு கண்களாகாக் கருதப்படும் மொழியே! என்றும் தனித்து நின்று அரசாலும் தனித்தமிழ் மொழியே! உன்னை வாழ்த்துகிறேன்.

மையக்கருத்து

         செந்தமிழ் மொழியின் சிறப்புகளை கா. நமச்சிவாயர் அழகாக எடுத்துரைக்கிறார்.

மோனைத்தொடை

         அடிதோறும் சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும்.

அடி மோனை                சீர்மோனை
                      –தேனினும் – தென்னாடு- திகழுந்தென்ளிர்வுறும்- ண்டமிழ் – ளிர்தமிழ்வானினும்- ண்டமிழ் – யங்குநன்தானனி- னித்தமிழ்

எதுகைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.

               அடி எதுகை               சீர் எதுகை
தேனினும்      ஊனினும்     வானினும்   தானிர்வினுக் – குர்வதாய்

இயைபுத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இறுதி எழுத்து அல்லது சொல்  ஒன்றி வருவது இயைபுத்தொடை

ஆகும்.

              அடி இயைபு             சீர் இயைபு
மொழியே என்னும் சொல்      அடியியைபாக வந்துள்ளது.மொழியே என்னும் சொல்    சீரியைபாகவும் வந்துள்ளது.

சொல்நயம்

         ஆசிரியர் இப்பாடலை எளிய, இனிய, கலைச்சொற்களைக் கொண்டு சொல்நயம் தோன்ற

எழுதியுள்ளார்.

அணி நயம்

         `ஆசிரியர் இப்பாடலை இயல்புநவிற்சி அணியால் அழகுற எழுதியுள்ளார்.

சந்த நயம்

         பாவின் ஓசையும் தாளமுமே சந்தமாகும். அவ்வகையில் ஆசிரியர் இப்பாடலை

அகவலோசைத் தோன்றும் படி சந்தநயதோடு எழுதியுள்ளார்.

சுவை நயம்

         ஆசிரியர் இப்பாடலைப் பெருமிதசுவைத் தோன்ற எழுதியுள்ளார்.

முடிவுரை

         ஆசிரியர் இப்பாடலை மோனை நயம், எதுகை நயம், இயைபு நயம், அணிநயம், சந்த நயம்,

சுவை நயம் முதலிய நயங்கள் தோன்ற அழகுற பாடியுள்ளார்.

கட்டுரை

     குமரிக்கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்த்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்குச்  பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து  சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப்புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.

                                      சான்றோர் வளர்த்த தமிழ்

                        பொருளடக்கம்
முன்னுரைபிள்ளைத்தமிழ்சதகம்பரணிகலம்பகம்உலாஅந்தாதிமுடிவுரை

முன்னுரை

அன்னை மொழியே! அழகாய் அமைந்த செந்தமிழே! என்றும் எழில்சேர் கன்னியாய் திகழும் உனக்குப் பேரிலக்கியத்துடன் சிற்றிலக்கியமும் படைத்தோர் பலர்! உமக்குப் பெருமை சேர்க்கும் அச்சிற்றிலக்கியங்களுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்!

பிள்ளைத்தமிழ்

            போற்றுவதற்குத் தகுதிவாய்ந்த கடவுளரையோ, மன்னரையோ, மக்களுள் சிலரையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, அவர்களைக் குழந்தையாகப் பாவித்து அவர்களின் மீது பத்து பருவங்கள் அமைத்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். தமிழில் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், பாவேந்தர் பிள்ளைத்தமிழ் முதலியன சிறந்த பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

சதகம்

            நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் ஆகும். திருச்சதகம், அறப்பளீசுவர சதகம் முதலிய சதகங்களைத் தமிழுக்குச் சமைத்துள்ளனர்.

பரணி

            போரிலே ஆயிரம் யானைப்படை வீரர்களைக் கொன்றவனுக்குப் பாடுவது பரணி ஆகும். இது தோற்ற நாட்டின் பெயராலோ மன்னனின் பெயராலோ பாடப்படும்.

பரணி இலக்கியங்களுள் கலிங்கத்துப்பரணி காலத்தால் முற்பட்டது.

கலம்பகம்

            கலம் + பகம் = கலம்பகம், (கலம் – பன்னிரண்டு; பகம் – ஆறு) பதினெட்டு உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது கலம்பகம் ஆகும். நந்திக்கலம்பகம் காலத்தால் முற்பட்டது.

உலா

            பவனி வரும் (உலா) பாட்டுடைத் தலைவனைப் பற்றியும் எழுவகை மகளிரும் அவன்மீது காதல் கொள்வதையும் பாடுவது உலா ஆகும். உலா பாடுவதில் ஒட்டக்கூத்தர் சிறந்தவர்.

அந்தாதி

            அந்தம் ஆதியாகத் தொடுப்பது அந்தாதி ஆகும். அதாவது, ஒரு பாடலின் ஒரு அடியின் இறுதி அடுத்த அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

முடிவுரை

            தமிழ்மொழியை அன்னையாகப் பாவித்து, அத்தமிழன்னைக்குப் பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து  சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் தமிழ்ச்சான்றோர்கள். அவ்வழியில் நாமும் சென்று தமிழ்ப்பயிரைப் பேணி வளர்ப்போம்!

மனப்பாடப்பகுதி

  1.                  அன்னை மொழியே   

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

                                      –  பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2.         அன்னை மொழியே

தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

                                      –  பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Leave a Comment