பத்தாம் வகுப்பு இயல்-1 மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வினா-விடைகள்

பத்தாம் வகுப்பு இயல்-1 மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 

வினா-விடைகள்

      இயல்- 1- ஒரு மதிப்பெண் வினா

1.    மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது --------- ஆகும்.

      அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்

      ஆ) பெரும்வணிகமும் பெரும் கலன்களும்

       இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்                                     ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும் 

2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்நிலத்துக்கு நல்ல உரங்கள். –  இத்தொடரில்

      அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---------

      ) இலையும்சருகும்                               ஆ) தோகையும்சண்டும்

      இ) தாளும்ஓலையும்                                ஈ) சருகும்சண்டும்

3.  எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------

      அ) எந்+தமிழ்+நா                                    ஆ) எந்த+தமிழ்+நா

      இ) எம்+தமிழ்+நா                                   ஈ) எந்தம்+தமிழ்+நா

4.   ’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடர் இடம் 

பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே----------------

) பாடிய; கேட்டவர்                                      ஆ)பாடல்; பாடிய

இ) கேட்டவர் ; பாடிய                                      ஈ) பாடல் ; கேட்டவர்

5.   வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

   ) குலைவகை   ஆ) மணிவகை   இ) கொழுந்துவகைஈ) இலைவகை

 

இயல்- 1- குறு வினா

6.   வேங்கை என்பதைத்  தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும்  வேறுபடுத்துக.

v தனிமொழி        - வேங்கை = வேங்கை மரம்

v தொடர்மொழி  - வேங்கை - வேம் +  கை = வேவுகின்ற கை

v தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக வருவதனால் பொதுமொழி.

7. மண்ணும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ   வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள  ஐம்பெரும் காப்பியங்களைத்  தவிர   

   எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

v சீவக சிந்தாமணி

v வளையாபதி

v குண்டலகேசி

 

8.  ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன.

ஒருசீப்பில் பலதாறு  வாழைப் பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன.- மேற்கண்ட தொடர்களில் சரியான    தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான        காரணத்தை எழுதுக.

சரியான  தொடர்கள்

v ஒரு தாற்றில் பல சீப்பு  வாழைப்பழங்கள் உள்ளன

v ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன

பிழையான தொடர்

v ஒரு சீப்பில் பல தாறு  வாழைப்பழங்கள் உள்ளன

பிழைக்கான  காரணம்

v தாற்றில்தான் சீப்பு இருக்கும். மாறாக சீப்பில் தாறு இருக்காது.

9. ’உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

     வடுக்காண் வற்றாகும் கீழ்’ - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச்     சுட்டி அதன் இலக்கணம் தருக.

v உடுப்பதூஉம், உண்பதூஉம் - இன்னிசை அளபெடை.

v செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக உயிர்நெடிலெழுத்துகள் அளபெடுப்பது  இன்னிசை அளபெடை.

10. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

v அக்காலத்தில் பழங்கள் மூலம் ஆற்றலைப் பெற்றனர்.

v இக்காலத்தில் பழங்கள் (பழம்+கள்) மூலம் ஆற்றலைப் பெறுகின்றனர்.

இயல்- 1- மொழிப்பயிற்சி  வினாக்கள்

11.    சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத்  திருத்துக. 

                ”தேணிலே ஊரிய செந்தமிழின் - சுவை

                தேரும்  சிலப்பதி காறமதை

                ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம்

                ஓதி யுனர்ந்தின் புருவோமே”

விடை

”தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேரும்  சிலப்பதி காமதை

          ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

12.கீழ்க்காணும்சொற்களின்கூட்டப்பெயர்களைக்கண்டுபிடித்துஎழுதுக.

கல்                  - குவியல்       (கற்குவியல்)

பழம்                - குலை           (பழக்குலை)

புல்                  - கட்டு            (புற்கட்டு)

ஆடு                - மந்தை         (ஆட்டுமந்தை)

13. வினைமுற்றுறை வினையாலணையும் பெயராக மாற்றிக் தொடர்களைஇணைத்து எழுதுக.

v கலையரங்கத்தில் எனக்காக காத்து இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

              கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருந்தவரை அழைத்து வாருங்கள்.

v  ஊட்ட மிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்ட மிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

v  நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச்சந்தித்தவர்என் நண்பர்.

v  பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

14.   சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை,  வான்,  பூ).

 பூவிலங்கு, தேன்மழை, தேன்பூ, விண்மழை, மணிமேகலை, வான்மழை, பூமழை, செய்தேன்.

15. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

1.     நாற்றிசையும் செல்லாத நாடில்லை    - நான்கு                -

2.    எறும்பு தன் கையால் எண்சாண்           - எட்டு                    -

3.    ஐந்து சால்பு ஊன்றிய தூண்                    -ஐந்து                     -

4.    நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி-நான்கு, இரண்டு   -

5.    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

    மானவனுக்கு வகுப்பது பரணி                - ஆயிரம்                 - ௧௦௦௦

                                (தமிழெண்கள்    (1- ௧, 2- ௨, 3- ௩, 4-௪, 5- ௫, 6- ௬, 7- ௭, 8- ௮, 9- ௯, 0 - ௦)

16. கொடுக்கப்பட்டுள்ள  தனிமொழிகளுடன் சொற்களை இணைத்து              தொடர்மொழிகளாக்குக.

(தேன், நூல், பை, மலர், வா)

v தேன் இனிக்கும்.

v நூல் வாங்கி வந்தேன்

v பை எங்கே உள்ளது?

v மலர் அழகாக மலர்ந்துள்ளது.

v வா என்று அம்மா அழைத்தாள்.

17.              வினை அடியை விகுதியுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

(காண், சிரி, படி, தடு)

v காணுதல், காட்சி, காணல், காணாமை

v சிரித்தல், சிரிக்காமை

v படித்தல், படிக்காமை

v தடுத்தல், தடுக்காமை

18. மலை  என்னை அடிக்கடி  அழைக்கும்.  மலைமீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றும் முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.  –          இத்தொடரில் உள்ள  வினைமுற்றுகளைத்  தனியே  எடுத்தெய்தித்   தொழிற்பெயர்களாக  மாற்றுக.

          வினைமுற்று        -  தொழிற்பெயர்

v அழைக்கும்               - அழைத்தல்,

v ஏறுவேன்                  - ஏறுதல்

v அமர்வேன்                - அமர்தல்

v பார்ப்பேன்                  - பார்த்தல்

v எய்தும்                       - எய்துதல்

19.   சுட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களைவகைப்படுத்துக.

v தொழிற்பெயர்                                               -  கோறல்

v முதனிலைத் தொழிற்பெயர்                       - சுட்டு, சொட்டு

v முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்           - வழிபாடு, கேடு

இயல்- 1- கலைச்சொல்

  1.        Vowel                                    -           உயிரெழுத்து

  2.      consonant                             -           மெய்யெழுத்து

  3.      Homo graph                        -           ஒப்பெழுத்து

  4.      Monolingual                        -           ஒரு மொழி

  5.      Conversation                       -           உரையாடல்

6.      Discussion                           -           கலந்துரையாடல்

இயல்- 1- அகராதியைக் கண்டு பொருள் எழுதுக

 1.     அடவி                          -   காடு

 2.    அவல்                           -   பள்ளம், விளைநிலம், குளம்

 3.      சுவல்                          -   மேட்டு நிலம்,தோள்,  கழுத்து

 4.      செறு                           -   வயல், பாத்தி,   செய்

 5.      ழனம்                       -   பொய்கை, மருத நிலம், சேற்று நிலம்,  பொது நிலம் 

 6. புறவு                              - காடு, முல்லைநிலம், புறா, முல்லைக்கொடி 

Post a Comment (0)
Previous Post Next Post