பத்தாம் வகுப்பு இயல்-2 மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வினா-விடைகள்

பத்தாம் வகுப்பு இயல்-2 மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 
வினா-விடைகள்

இயல்- 2- ஒரு மதிப்பெண் வினா

1.    ”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

        உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் 

        இடம் பெற்றுள்ளநயங்கள் யாவை?

        உருவகம், எதுகை                        ஆ) மோனை, எதுகை

         இ) முரண், இயைபு                              ஈ) உவமை, எதுகை

2.   செய்தி  1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன்  15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

     செய்தி 2 – காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில்உள்ளது எனக்குப் பெருமையே.     

     செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல் கடந்து வாணிகம் 

செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

        ) செய்தி 1 மட்டும்சரி                 ஆ) செய்தி 1,2 ஆகியனசரி

இ) செய்தி 3 மட்டும்சரி                ஈ) செய்தி 1,3 ஆகியனசரி

3.பாடு இமிழ் பனிக்கடல்பருகிஎன்னும்முல்லைப்பாட்டுஉணர்த்தும்அறிவியல் செய்தி -------.

       ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்   ஆ)கடல்நீர்குளிர்ச்சியடைதல்

       இ) கடல்நீர்ஒலித்தல்                             ஈ) கடல்நீர்கொந்தளித்தல்

4. ’பெரியமீசைசிரித்தார்வண்ணச்சொல்லுக்கானதொகையின்வகை------

       வேற்றுமைத்தொகை                      ஆ)அன்மொழித்தொகை

இ) உம்மைத்தொகை                           ஈ) பண்புத்தொகை

5.   பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ. கொண்டல்          - 1. மேற்கு

ஆ. கோடை              - 2. தெற்கு

இ. வாடை                  - 3. கிழக்கு

ஈ. தென்றல்              - 4. வடக்கு

அ) 1,2,3,4,                  ஆ) 3,1,4,2               இ) 4,3,2,1                   ஈ) 3,4,1,2

 

இயல்- 2- குறுவினா

6. நமக்குஉயிர்காற்று

          காற்றுக்குவரம்மரம்

          மரங்களைவெட்டிஎறியாமல்

          நட்டுவளர்ப்போம் - இத்தொடர்களைப் போலவே   உலக காற்று நாள்விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்கள் எழுதுக.

v மாசடைந்த காற்று  உயிரைக் கொல்லும் என்பதை உணர்க!

v காற்று  மாசைக் குறைக்க, மரங்களை நட்டு வளர்க்க!

7. வசன கவிதை குறிப்பு தருக.

v யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

8. தண்ணீர்குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக;  தொடரில் அமைக்க.

v தண்ணீர் குடி - தண்ணீரைக்குடி 

நோயற்ற வாழ்வு வாழ  மிகுதியான தண்ணீரைக் குடி.

v தயிர்க்குடம்  -  தயிரை உடைய குடம்

என் வீட்டில் தயிரை உடைய குடத்தைப் பார்த்தேன்.

 

9.   பெற்றோர்வேலையிலிருந்துதிரும்பத்  தாமதமாகும் போது தம்பிக்கு நீங்கள்    

         கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

v தம்பி அழாமல் இரு!

v அம்மா கடைக்குச் சென்றுள்ளாள்.

v அம்மா விரைவாக வந்துவிடுவாள்.

v நாம் விளையாடலாம் வா!

10.             மாஅல் பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

v பொருள்  - திருமால்

v இலக்கணக்குறிப்பு  - செய்யுளிசை அளபெடை

 

இயல்- 2 – பகுபத உறுப்பிலக்கணம் தருக

11. பொறித்த          - பொறி+த்+த்+அ

பொறி             - பகுதி

த்                     - சந்தி

த்                     - இறந்தகால இடைநிலை

அ                    - பெயரெச்ச விகுதி

 

இயல்- 2 – மொழிப்பயிற்சி  வினாக்கள்

12. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

v இன்சொல்          - பண்புத்தொகை               - இன்சொல் கேட்டு மகிழ்ந்தேன்

v எழுகதிர்            - வினைத்தொகை               - எழுகதிர் செந்நிறத்தில் இருந்தது

v கீரி பாம்பு             -உம்மைத்தொகை                - கீரி பாம்பு சண்டையிடுவதைக் கண்டேன்

v பூங்குழல் வந்தாள்     - அன்மொழித்தொகை        - பூங்குழல் வந்தாள்

v மலை வாழ்வார்           -வேற்றுமைத்தொகை          - மலை வாழ்வார் இயற்கை உணவை உண்டு வாழ்வார்.

v முத்துப்பல்                   -உவமைத்தொகை               -  நிறைமதி முத்துப்பல் தெரிய அழகாய் சிரித்தாள். 

13. சொல்லைக் கண்டுபிடித்து புதிரை விடுவிக்க.

          (காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)

1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும்                    வாசனை   தரும்.  நறுமணம்

2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும். புதுமை

3. இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை. காற்று

4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும். விண்மீன்

5. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம். காடு

14.வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

    1.  அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

    அன்புச்செல்வன்        – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்  தொக்கத்தொகை

    (அல்லது) இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

    தொடுதிரை      – வினைத்தொகை

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.

  மோர்ப்பானை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை

  மோர் கொடுக்கவும் -இரண்டாம் வேற்றுமைத் தொகை

3     . வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

வெண்டைக்காய்ப்  -இருபெயரொட்டுப்பண்புத் தொகை

மோர்க்குழம்புக்கு       -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

4.    தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன.

தங்கமீன்கள்     - உவமைத்தொகை

தண்ணீர்த்தொட்டி- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்  

தொக்கத்தொகை (தொடரின் பொருள் அடிப்படையில்

இயல்- 2- கலைச்சொல்

1         Storm                                     -           புயல்

2        Land breeze              -           நிலக்காற்று

3        Tornado                                -           சூறாவளி

4        Sea breeze                             -           கடற்காற்று

5        Tempest                                -           பெருங்காற்று

6        Whirl wind                          -           சுழல் காற்று

இயல்- 2- அகராதியைக் கண்டு பொருள் எழுதுக

1.        அகன்சுடர்                 -           உயர்ந்த தீபம்

2.      கட்புள்                        -           விழித்திருக்கும் பறவை

3.      திருவில்                     -           வானவில்

4.      ஆர்கலி                      -           கடல், மழை, பவை

5.      கொடுவாய்                 -           ஆயுதங்களில் வளைந்த வாய்,  ஒரு வகை மீன் 


Post a Comment (0)
Previous Post Next Post