சுந்தர் பிச்சை போட்ட பிள்ளையார் சுழி.. OnePlus முதல் Motorola வரை.. இந்த 5 போன்களும் இந்தியாவை கலக்க போகுது!

கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) அறிமுகமான பின்னர் ஃபோல்டபிள் போன்களின் (Foldable Phone) மீது மக்களுக்கு இருந்த சந்தேகங்கள் குறைந்து விட்டது மற்றும் மடங்கக்கூடிய டிஸ்பிளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களின் மீதான ஆர்வம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம்

இதன் விளைவாகவே, ஒப்போ (Oppo) மற்றும் (Tecno) போன்ற பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஃபோல்டபிள் போன்கள் மற்றும் ஃபிளிப் போன்கள் (Flip Phone) சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளன. அப்படியாக, ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முதல் மடக்ககூடிய ஸ்மார்ட்போன் உட்பட கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ள 5 ஃபோல்டபிள் போன்களின் பட்டியல் இதோ:

01. மோட்டோரோலா ரேஸர் 40 (Motorola Razr 40): மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஃபோல்டபிள் போன் ஆனது ஏற்கனவே அமேசான் மற்றும் மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விரிவான அம்சங்கள் வருகிரியா ஜூன் 22 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5 இன்ச் கவர் டிஸ்ப்ளேவுடன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஃபோல்டபிள் பிஓஎல்இடி பேனலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட், 64 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 4200mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.

02. மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra): இது ரேஸர் 40 உடன் ஒப்பிடும் போது சற்றே மேம்படுத்தப்பட்ட எடிஷன் ஆகும். இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3.6-இன்ச் பிஓஎல்இடி கவர் டிஸ்ப்ளேவுடன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வரலாம்.

இதுதவிர்த்து மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 13எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உடனான 12எம்பி மெயின் கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 3800mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

03. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5): சாம்சங் அதன் இஸட் ஃபிளிப் 5-யின் கவர் டிஸ்பிளேவை 3.4-இன்ச் ஆக மேம்படுத்தலாம். மேலும் இது இந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் இடம்பெற்ற ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறலாம். மேலும் இது டூயல் 12எம்பி கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.

04. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5): ஃபிளிப் போனை போலவே புதிய ஃபோல்ட்டிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறலாம். இது 7.6 இன்ச் மடிக்கக்கூடிய அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் 6.2 இன்ச் அமோஎல்இடி கவர் பேனலை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 12எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10எம்பி டெலிஃபோட்டோ கேமரா உடனான 50எம்பி மெயின் கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில், கவர் டிஸ்பிளேவில் 12எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம். சாம்சங்கின் புதிய ஃபிளிப் மற்றும் ஃபோல்ட் போன்கள் ஆனது அடுத்த மாதம் நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம்.

05. ஒன்பிளஸ் ஃபோல்ட் (OnePlus Fold): ஒன்பிளஸும் கூட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. லீக்ஸ் தகவலின்படி ஒன்பிளஸ் ஃபோல்ட் ஆனது இந்தாண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இது கண்டிப்பாக சாம்சங், மோட்டோவின் ஃபோல்டபிள் போன்களுக்கு கடும் போட்டியாக இருக்குமென்பதால் சந்தேகமே வேண்டாம்.

Leave a Comment