Decision to increase income tax deduction to Rs.5 lakh

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக அதிகரிக்க முடிவு

     வரும்,2023 – 2024 நிதி யாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்த பட்ஜெட்டில், வருமான வரி தொடர்பான சில சலுகைகள் வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தற்போதைய நிலையில், இரண்டு வகையான வருமான வரி விதிப்பு முறை உள்ளது.முதல் வகையின்படி 2.5 லட்சம் ரூபாய் வரை யிலான வருவாய்க்கு முழு விலக்கு அளிக்கப் படுகிறது. இதன்பிறகு, வரிச் சலுகைகளை பெறலாம். இந்த வகையில் 2.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு கோர முடியும்.

    இரண்டாவது வகையின்படி, 5 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. அதே நேரத்தில் இந்த முறையில் வரிச் சலுகை கோர முடியாது. ஆனால், முதல் வகையில் உள்ளதை விட, இந்த வகையில் வரி சதவீதம் குறைவாகும். இந்நிலையில், 5 லட்சம் ரூபாய் வரை யிலான வருவாய்க்கு முழு வரி விலக்கு அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது தான் மீண்டு வருகின்றனர்.

    இந்த வரிச் சலுகை அளித்தால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; இது முதலீடுகளாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த வரிச் சலுகை அளிப்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து தகவல்கள் வருவதாக தெரிவிக்கின்றன.

Leave a Comment