HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024

2023-2024 ஆம் ஆண்டிற்கான வருமான வரிப்படிவத்தினை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து காணலாம். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024) கீழே கொடுக்கப்பட்டுள்ள வருமான வரிப்படிவத்தினை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் வருமான வரிப்படிவத்தை 2 நிமிடங்களில் எளிதாக நீங்களே தயார் செய்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வருமான வரி EXCEL படிவத்தில் மொத்தம் 7 EXCEL தாள்கள் இருக்கும்.

HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024

  1. IT METHOD
  2. ENTRY PAGE
  3. PAGE 1
  4. PAGE 2
  5. PAGE 3
  6. PAGE 4 BILL DRAWN
  7. PAGE 2 (NEW METHOD)

OLD METHOD , NEW METHOD என்ற இரண்டு முறைகளைப் பின்பற்றி வருமான வரி செலுத்த முடியும், மற்ற படிவங்களிலும் உள்ள அனைத்துத் தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்த பின்னரே இந்த பக்கத்திற்குச் செல்லுதல் வேண்டும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

இந்த வருமான வரி EXCEL படிவத்தில் அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள கலங்களில் மட்டுமே உங்களது அனைத்துத் தரவுகளையும் உள்ளீடு செய்ய வேண்டும். இனி இந்த ஆண்டிற்கான INCOME TAX FORM ஐ எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதைப் பற்றி காண்போம். முதலில் இரண்டாவது Sheet இல் உள்ள ENTRY PAGE ஐ OPEN செய்யவும். அதில் உள்ள NAME, DESIGNATION, GPF/TPF/CPS No, OFFICE, AADHAAR NO, PAN NO, ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து BASIC PAY என்ற இடத்தில் MAR-2023 முதல் FEB-2023 வரை உள்ள கலங்களில் ஒவ்வொரு மாதத்திற்கான உங்களது BASIC PAY வை உள்ளீடு செய்ய வேண்டும். உங்களுடைய ஆண்டு ஊதிய உயர்வு எந்த மாதத்திலோ அந்த மாதத்திற்கான BASIC PAY வையும் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். ஆண்டு ஊதிய உயர்வை உள்ளீடு செய்தவுடன் அடுத்து வரக்கூடிய மாதங்களுக்கான BASIC PAY தானாகவே பதிவாகி விடும் நீங்கள் பதிவு செய்யத் தேவை இல்லை. (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து உள்ள GRADE PAY என்ற கலத்தில் எந்த தகவலையும் உள்ளீடு செய்ய வேண்டாம். ஏனென்றால் 7 th PAY COMMISSION க்குப் பிறகு GRADE PAY முறை பின்பற்றப்படுவதில்லை. GRADE PAY என்ற அனைத்து களங்களிலும் 0 என்று இருக்கும் அதில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்.(HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து PP என்ற கலத்தில் Personal Pay வாங்கக்கூடியவர்களாக இருப்பின் அந்த கலத்தில் உங்களது Personal Pay வை பதிவு செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த கலத்தினை பூர்த்தி செய்ய வேண்டாம்.

அடுத்து HRA, CCA, HILL ALLOWANCE என்ற கலத்தில் MAR-2023 முதல் FEB-2023 வரை ஒவ்வொரு மாதத்திற்குரிய உங்களுடைய HRA,CCA,HILL ALLOWANCE ஐ பதிவு செய்ய வேண்டும். உங்களுடைய ஆண்டு ஊதிய உயர்வின் போது HRA வில் மாற்றம் இருப்பின் அதனை பதிவு செய்ய வேண்டும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து D.A 1 மற்றும் D.A 2 என்ற கலத்தில் உங்களது இரண்டு அகவிலைப் படி நிலுவை ஊதியத்தின் GROSS AMOUNT ஐ பதிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் GROSS AMOUNT இல் இருந்து CPS பிடித்தம் செய்யப்படும். NET AMOUNT ஐ பதிவு செய்ய வேண்டாம். NET AMOUNT ஐ பதிவு செய்தால் NET AMOUNT இல் இருந்து CPS பிடித்தம் செய்யப்பட்டு தவறாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து BONUS என்ற கலத்தில் BONUS பெற்றிருப்பின் அந்த முழு தொகையையும் பதிவு செய்ய வேண்டும். C மற்றும் D பிரிவு ஊழியர்கள் மட்டுமே BONUS பெற்றிருப்பார்கள். பின்னர் தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற வேறு ஏதேனும் நிலுவைத் தொகை பெற்று இருப்பின் அதனை Arr 1, Arr 2 என்ற கலத்தில் பதிவு செய்ய வேண்டும். அடுத்து Professional Tax Paid என்ற கலத்தில் இரண்டு முறை செலுத்திய தொழில்வரியின் மொத்த தொகையையும் பதிவு செய்ய வேண்டும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து House Building Advance (HBA) Interest என்ற இடத்தில் Housing Loan பெற்று இருந்தால் Housing Loan உடைய Interest ஐ மட்டும் பதிவு செய்ய வேண்டும். Principal தொகையை U/s 80 C பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும், Housing Loan Principal தொகையை இங்கு பதிவு செய்ய கூடாது. (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

இதற்கு அருகில் உள்ள கலத்தில் ஒரு தொகை காண்பிக்கும் அது உங்களுடைய 12 மாத HRA வினுடைய மொத்த தொகை ஆகும் அதனை Delete செய்யக் கூடாது. Housing Loan பெற்று இருப்பின் இந்த இடத்தில் 0 என்று பதிவு செய்ய வேண்டும், ஏனென்றால் Housing Loan Interest மற்றும் Principal ஐ காண்பிக்கும் போது HRA காண்பிக்கக் கூடாது.

பின்னர் U/s 80 C என்ற கலத்தில் Housing Loan Principal, Tuition Fees, LIC, செல்வ மகள், PPF, Insurance, போன்ற 80 C பிரிவின் கீழ் வருமான வரிப்பிடித்தங்களுக்கான தொகையை பதிவு செய்ய வேண்டும். இந்த இடத்தில் CPS,FBF,SPF,PLI போன்ற ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடியவற்றை பதிவு செய்ய வேண்டாம், அது தானாகவே Page 4 Bill Drawn இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. CPS,FBF,SPF,PLI ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் Page 4 Bill Drawn பக்கத்திற்குச் சென்று தேவையானவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம். 80 C பிரிவின் கீழ் அதிகபட்சமாக 150000 வரை பிடித்தம் செய்து கொள்ளலாம். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து IT ADVANCE PAID என்ற கலத்தில் MAR-2023 முதல் FEB-2023 வரை ஒவ்வொரு மாதத்திலும் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பெற்ற IT மற்றும் Cess தொகையை பதிவு செய்ய வேண்டும். IT ADVANCE PAID என்ற இடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் செலுத்திய IT தொகையையும் Cess என்ற இடத்தில் IT தொகையின் 4 சதவிகித Cess தொகையையும் பதிவு செய்ய வேண்டும். இதுவரை IT ADVANCE எதுவும் செலுத்தவில்லை என்றால் IT மற்றும் Cess ஆகிய இரண்டு இடத்தில் உள்ள அனைத்து கலங்களிலும் 0 என்று பதிவு செய்யவும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து உள்ள CPS ARREAR IF ANY என்ற கலத்தில் எதுவும் பதிவு செய்ய வேண்டாம். அதில் 0 என்று இருக்கும் அதனை மாற்றம் செய்ய வேண்டாம்.

அடுத்து PLI என்ற கலத்தில் MAR-2023 முதல் FEB-2023 வரை ஒவ்வொரு மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையோ அல்லது நீங்களே அஞ்சலகத்தில் மாதந்தோறும் கட்டக்கூடிய தொகையையோ இங்கு பதிவு செய்ய வேண்டும். இங்கு பதிவு செய்யும்போது PLI என்ற கலத்தில் மாதந்தோறும் கட்டக்கூடிய PLI தொகையையும் SERVICE TAX என்ற கலத்தில் அதற்குரிய SERVICE TAX தொகையையும் பதிவு செய்ய வேண்டும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

மேற்கூறப்பெற்ற அனைத்துத் தகவல்களையும் சரியாக பதிவு செய்துவிட்டு ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். சரிபார்த்து விட்டு Save செய்து கொள்ளவும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

பின்னர் கீழே உள்ள CLICK என்ற பட்டனை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்தவுடன் Page 4 Bill Drawn பக்கத்திற்குச் செல்லும்.

அங்கு MAR-2023 முதல் FEB-2023 வரை நீங்கள் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில் உங்களுடைய ஊதியத்தின் முழுமையான தகவல்கள் காண்பிக்கும், ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும், பெரும்பாலும் அனைத்தும் சரியாக இருக்கும், ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் மாற்றம் செய்து கொள்ளலாம், மாற்றம் செய்யும் பொழுது வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கலங்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும், நீல நிற கலங்களில் எதனையும் மாற்றம் செய்யக் கூடாது. அதில் CLICK செய்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள Formula மாறிவிடும், அனைத்தும் தவறாகி விடும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

  1. Page 4 Bill Drawn பக்கத்தில் சில மாற்றங்கள் தேவைப்படின் செய்து கொள்ளலாம்.
  2. GPF இல் உள்ளவர்களுக்கு GPF/CPS என்ற கலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் GPF தொகையை பதிவு செய்யவும்.
  3. சிலருக்கு SPF தொகையில் மாற்றம் இருந்தால் அதனையும் மாற்றம் செய்து கொள்ளவும்,
  4. ஏதேனும் Arrear தொகையை ENTRY PAGE இல் பதிவு செய்து இருந்தால் அது இங்கு Arr.1 , Arr.2 என்ற கலத்தில் காண்பிக்கும், அந்த Arrear தொகையும் அதற்கான CPS Arrear தொகையும் காண்பிக்கும், அதனையும் சரிபார்த்துக் கொள்ளவும், GPF இல் உள்ளவர்களுக்கான Arrear ஆக இருப்பின் CPS என்ற கலத்தில் CPS Arrear தொகை காண்பிக்கும் அங்கு 0 என்று பதிவு செய்து விடவும்,
  5. சிலருக்கு NHIS பிடித்தம் செய்யப்படாமல் இருக்கலாம் அவர்களுக்கு NHIS என்ற கலத்தில் அனைத்து மாதங்களுக்கும் 0 என்று பதிவு செய்யவும், அனைத்தையும் சரிபார்த்து விட்டு மீண்டும் ஒருமுறை Save செய்து கொள்ளவும்.

அடுத்து கீழே உள்ள PAGE 1 பக்கத்திற்குச் செல்லவும்,

முதல் கலத்தில் இந்த ஆண்டிற்கான உங்களுடைய மொத்த ஆண்டு வருமாத் தொகை காண்பிக்கும், இங்கு மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து HRA, Professional Tax, Housing Loan Interest, STANDARD DEDUCTION ஆகியவை கழிக்கப்பெற்று கலம் 7 இல் மீதத் தொகை காண்பிக்கும்.

பின்னர் U/s 80C என்ற கலத்தில் ENTRY PAGE இல் பதிவு செய்த Housing Loan Principal, Tuition Fees, LIC, செல்வ மகள், PPF, Insurance, ஆகிய அனைத்தும் இங்கு காண்பிக்கும், மேலும் ஏதேனும் சேர்க்க விரும்பினால் இங்கு உள்ள U/s 80C கலத்தில் TYPE செய்து பதிவு செய்து கொள்ளவும். (சான்றாக SBI LIFE INSURENC ஐ சேர்க்க விரும்பினால் Others என்ற கலத்தில் SBI LIFE INSURENC என்று TYPE செய்து விட்டு அதற்கு நேரே உள்ள கலத்தில் அதற்கான தொகையை பதிவு செய்யவும்).80 C பிரிவின் கீழ் அதிகபட்சமாக 150000 வரை பிடித்தம் செய்து கொள்ளலாம்.

பின்னர் 80 CCD(1B) என்ற பிரிவின் கீழ் U/s 80C இல் 150000 மேல் செல்லும் பொழுது CPS தொகை 50000 பிடித்தம் செய்யப்பெற்று இருக்கும், அதற்கு அடுத்து மருத்துவ காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பெற்று இறுதியில் மீதத் தொகை காண்பிக்கும்.(HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

அடுத்து கீழே உள்ள PAGE 2 என்ற பக்கத்திற்குச் செல்லவும்,

இந்த பக்கத்தில் பழைய முறைப்படி (OLD METHOD) உங்களுக்கான வருமான வரி கணக்கீடு செய்யப்பெற்று செலுத்த வேண்டிய மொத்த தொகை இறுதியில் காண்பிக்கும்.

அடுத்து கீழே உள்ள PAGE 2 (NEW METHOD) என்ற பக்கத்திற்குச் செல்லவும்,

இந்த பக்கத்தில் புதிய முறைப்படி (NEW METHOD) உங்களுக்கான வருமான வரி கணக்கீடு செய்யப்பெற்று செலுத்த வேண்டிய மொத்த தொகை இறுதியில் காண்பிக்கும், இரண்டு முறைகளில் எந்த முறையில் உங்களுக்கு வருமான வரி குறைவாக உள்ளதோ அந்த முறையைப் பின்பற்றி வருமான வரியைச் செலுத்தலாம். குறிப்பாக மொத்த ஆண்டு வருமானம் 12 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு புதிய முறை பொருத்தமாக இருக்கும், மொத்த ஆண்டு வருமானம் 10 முதல் 15 இலட்சம் உள்ளவர்களில் Housing Loan Interest 2 இலட்சம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பழைய முறை பொருத்தமானதாக இருக்கும், (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

இரண்டு முறையையும் ஒப்பிட்டு பார்ப்பதற்கு IT METHOD என்ற பக்கத்திற்குச் சென்று VERIFY OLD METHOD மற்றும் VERIFY NEW METHOD ஆகிய இரண்டையும் தேர்வு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்,

இரண்டு முறைகளில் எந்த முறையில் உங்களுக்கு வருமான வரி குறைவாக உள்ளதோ அந்த முறையைப் பின்பற்றி வருமான வரியைச் செலுத்தலாம்.

வருமான வரி செலுத்துவதில் பழைய முறையைத் தேர்வு செய்தால் PAGE 3 பக்கத்திற்குச் சென்று PLI, LIC, TUTION FEES ஆகியற்றிற்கு கேட்கப்பெற்றுள்ள தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்

வருமான வரி செலுத்துவதில் பழைய முறையைத் தேர்வு செய்தால் PAGE 1, PAGE 2, PAGE 3, PAGE 4 BILL DRAWN ஆகிய நான்கு பக்கங்களை PRINT எடுத்துக் கொள்ளவும், வருமான வரி செலுத்துவதில் புதிய முறையைத் தேர்வு செய்தால் PAGE 1, PAGE 2(NEW METHOD) , PAGE 3, PAGE 4 BILL DRAWN ஆகிய நான்கு பக்கங்களை PRINT எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும். (HOW TO CREATE INCOME TAX FORM 2023-2024)

INCOME TAX FORM 2023-2024 – DOWNLOAD

Leave a Comment