இந்திய அஞ்சல் துறையில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் காப்பீடு திட்டம் – முழு விவரம் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக விபத்து காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அஞ்சல் துறை

இந்தியாவில் அஞ்சல் துறை மூலமாக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அந்த திட்டங்கள் மூலமாக பல நன்மைகளையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 399 மற்றும் ரூ. 396 பிரீமியம் தொகை செலுத்தி கணக்கு தொடங்கி பதிவு செய்தால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு பெறலாம். மேலும் இது குறித்து தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஜெ.சாருகேசி கூறுகையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் செய்திருக்கும் இந்த விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து மறுநாளே உயிரிழப்பு ஏற்பட்டால் கூட அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் காப்பீடு தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment