எட்டாம் வகுப்பு தமிழ் வினா-விடைத் தொகுப்பு இயல் -1

எட்டாம் வகுப்பு  தமிழ் வினா-விடைத் தொகுப்பு  இயல் -1

தமிழ்மொழி வாழ்த்து

மனப்பாடம்

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி       

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே!

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்————-.

    அ. வைப்பு         ஆ. கடல்            இ. பரவை          இ. ஆழி

2.         ”என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது—————.

    அ. என்+றென்றும்       ஆ. என்று+என்றும்      இ. என்றும்+என்றும்  இ. என்+என்றும்

3.         ’வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது—————.

    அ.வான+ மளந்தது          ஆ. வான்+ அளந்தது இ. வானம் + அளந்தது       ஈ. வான்+ மளந்தது

4.         அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைப்பது ————–.

    அ. அறிந்ததுஅனைத்தும்              ஆ. அறிந்தனைத்தும்  

    இ. அறிந்ததனைத்தும்               ஈ. அறிந்துனைத்தும்

5.         வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ————-.

    அ. வானம் அறிந்து              ஆ. வான் அறிந்த               இ. வானமறிந்த ஈ. வான்மறிந்த

தமிழ்மொழி வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

வாழ்க                          – வாழ்க

வாழிய               – வாழியவே!

வான                         – வாழியவே!

அனைத்தும்                – அளந்திடு

எங்கள்              – எங்கள்            -என்றென்றும்

தமிழ்மொழி          – தமிழ்மொழி!

தொல்லை            -தொல்லை

வாழ்க                – வாழ்க             – வாழ்க

தமிழ்மொழி!                – தமிழ்மொழி!     – தமிழ்மொழியே!

அறிந்த                 -அறிந்து

குறுவினா

 1. தமிழ் எங்குப் புகழ்கொண்டு வாழ்கிறது?

ஏழ்கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

 • தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

வான் அளவு  உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.

சிறுவினா

 1. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழ்கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு  ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க!தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வான் அளவு  உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க என்று பாரதியார் தமிழ்மொழியை வாழ்த்திக் கூறுகிறார்.

சிந்தனை வினா

பாரதியார் தமிழை வண்மொழி என்று அமைக்கக் காரணம் என்ன?

 • தமிழ்மொழி தன்னகத்தே தொன்மையான பல இலக்கண இலக்கியங்களைப் பெற்றுள்ளது.
 • திருக்குறள் முதலிய எண்ணிலடங்கா  இலக்கியங்களை பிற நாட்டார் மொழிபெயர்க்க  இடம் அளித்துள்ளது.
 • பல வேர்ச்சொற்களையும் உறவு பெயர்களையும் பிற மொழிகளுக்குக் கொடுத்து தாய்மொழியாக விளங்குகிறது.
 • எனவேதான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.

                                            தமிழ்மொழி மரபு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. பறவைகள் ———– பறந்து செல்கின்றன.

    அ. நிலத்தில்               ஆ. விசும்பில்             இ. மரத்தில்                இ. நீரில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர்————–.

    அ. மரபு             ஆ. பொழுது                       இ. வரவு            ஈ. தகவு

3. ‘இருதிணைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைபது—————-.

   அ. இரண்டு + திணை ஆ. இரு+திணை இ. இருவர்+திணை             ஈ. இருந்து+திணை

4. “ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது——————-.

    அ. ஐம்+பால்               ஆ. ஐந்து + பால்                இ. ஐம்பது + பால்                 ஈ. ஐ+பால்

குறுவினா

 1. உலகம் எவற்றால் ஆனது?

உலகம் நிலம், நீர், காற்று, ஆகாயம் , நெருப்பு ஆகிய் ஐம்பூதங்களின் கலவையால் ஆனது.

 • செய்யுள்களின் மரபை ஏன் மாற்றக்கூடாது?

நம் முன்னோர் திணை, பால் வேறுபாடுகள் அறிந்து,  சொற்களைப் பயன்படுத்துவதில் மரபுகளைப் பின்பற்றியுள்ளனர். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும். எனவே, மரபுகளை மாற்றக்கூடாது.

சிந்தனை வினா

 1. நம் முன்னோர் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள்கருதுகிறீர்கள்?

நாம் சொற்களைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை. சொற்களைத் தவறாகப் பயன்படுத்துதல் கூடாது என்பதற்காகவும் பொருள் மயக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்  மரபுகளைப் பின்பற்றிவுள்ளனர்.

                           தமிழ் வரிவடிவ வளர்ச்சி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. தமிழ் எழுத்துகள் இப்போது உள்ள நிலையான வடிவத்தினைப் பெற ————- காரணமாக அமைந்தது.

அ. ஓவியக்கலை         ஆ. இசைக்கலை இ. அச்சுக்கலை        ஈ. நுண்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ———- என அழைக்கப்படுகிறது.

    அ. கோட்டெழுத்து               ஆ. வட்டெழுத்து       இ. சித்திரை எழுத்து    ஈ.  ஓவிய எழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்———-.

    அ. பாரதிதாசன்           ஆ. தந்தை பெரியார்   இ. வ.உ.சி   ஈ. பெருஞ்சித்திரனார்.

கோடிட்ட இடத்தினை நிரப்புக.

 1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ————— என அழைக்கப்பட்டன.

(கண்ணெழுத்துகள்)

 • எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்——————-.

(வீரமாமுனிவர்)

குறுவினாக்கள்

 1. ஓவிய எழுத்து என்றால் என்ன?

தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

 • ஒலி எழுத்துநிலை என்றால் என்ன?

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர்.

 • ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் நேர்க்கோடுகளையும் புள்ளிபெறும் எழுத்துகளையும் எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை.

 • வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச்சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினைக் கூறுக.
 • எகர ஒகர் வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ எனவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழியிட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
 • அதுபோலவே ஏகார ஓகார உயிர்மெய் நெடிலெழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு (N), இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து  (N h) புதிய வரி வடிவத்தை அறிமுப்படுத்தினார்.

சிறுவினா

 1. எழுத்து சீர்திருத்தத்தின்  தேவை குறித்து எழுதுக.
 2. ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
 3. ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இட்டு எழுதும் இடங்களில் புள்ளி தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணரவேண்டிய நிலை இருந்தது.
 4. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே, எழுத்து சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
 5. தமிழெழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
 6. நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (h) பயன்படுத்தப்படுகிறது.
 7. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (i) பயன்படுத்தப்படுகிறது.
 8. ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது.
 9. குற்றியலுகர குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

நெடுவினா

 1. எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

எழுத்துகளின் தோற்றம்

 • மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும்         தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காக பாறைகளிலும் குகைச்         சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து      வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்
 • தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
 • அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதா மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர். இன்று  உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழெழுத்துகளின் தோற்றம்

 • காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பின்னரே தமிச் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
 • கல்வெட்டுகளிலும் கோயில்களிலும் செப்பேடுகளிலும் காணப்படும் வரிவடிவத்தில் வட்டெழுத்து, தமிழெழுத்து ஆகிய இரண்டையும் காணலாம்.  வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழெழுத்து ஆகும். கடைச்சங்க காலத்தில் தமிழெழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.

உருவ மாற்றம்

 • நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (h) பயன்படுத்தப்படுகிறது.
 • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (i) பயன்படுத்தப்படுகிறது.
 • ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது.
 • குற்றியலுகர குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

   எழுத்து சீர்திருத்தம்

 • ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
 • ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இட்டு எழுதும் இடங்களில் புள்ளி தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணரவேண்டிய நிலை இருந்தது.
 • இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே, எழுத்து சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

                        எழுத்துகளின்  பிறப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்————–.

அ. இ,ஈ             ஆ. உ,ஊ          இ. எ,ஏ              ஈ. அ,ஆ

2.         ஆய்த எழுத்து பிறக்கும் இடம்————.

    அ. மார்பு            ஆ.கழுத்து                  இ. தலை          ஈ. மூக்கு

3.         வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ————.

அ. தலை           ஆ, மார்பு           இ மூக்கு            இ கழுத்து

4.         நாவின் நுனு அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ——-.

அ. க்,ங்              ஆ. ச்,ஞ்             இ ட்,ண்            ஈ ப்,ம்

5. கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து————–.

அ. ம்                 ஆ. ப்                 இ. ய்                 ஈ. வ்

பொருத்துக

க்,ங்           – நாவின் இடை, அண்ணத்தின் இடை

ச்,ஞ்          – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

ட்,ண்         – நாவின் முதல், அண்ணத்தின் அடி

த்,ந்           – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

விடை:

க்,ங்         – நாவின் முதல், அண்ணத்தின் அடி

ச்,ஞ்        – நாவின் இடை, அண்ணத்தின் இடை

ட்,ண்              – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

த்,ந்         – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

சிறுவினா

 1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
 2. உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
 3.        மெய்யெழுத்துகள் எவற்றை இடமாகக்கொண்டு பிறக்கின்றன?
 4. வல்லின மெய்யெழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.
 5. மெல்லின் மெய்யெழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக்கொண்டு பிறக்கின்றன
 6. இடையின மெய்யெழுத்துகள் ஆறும் கழுத்தைஇடமாகக்கொண்டு பிறக்கின்றன
 7.        ழகர, லகர், ளகர் மெய்களின் முயற்சி பிறப்பு பற்றி எழுதுக.
 8. ழ்–மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கிறது.
 9. ல் – மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
 10. ள் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுவதால் பிறக்கிறது.

1 thought on “எட்டாம் வகுப்பு தமிழ் வினா-விடைத் தொகுப்பு இயல் -1”

Leave a Comment