ஒன்பதாம் வகுப்பு வினா-விடைத் தொகுப்பு இயல் – 1

ஒன்பதாம் வகுப்பு       வினா-விடைத் தொகுப்பு      இயல் – 1

பலவுள்தெரிக.

  1. குழுவில்விடுபட்டவரிசையைத்தேர்ந்தெடுக்க.
குழு – 1குழு – 2குழு – 3குழு – 4
நாவாய்மரம்துறைதன்வினை
——————————————–——————————————

அ.  1-வங்கம்          2-மானு                 3-தாழிசை              4-பிறவினை

ஆ. 1- தாழிசை           2- மானு                    3- பிறவினை     4- வங்கம்

இ.   1. – பிறவினை     2- தாழிசை                3- மானு            4-வங்கம்

ஈ.    1- மானு              2-பிறவினை              3- வங்கம்          4-தாழிசை

2. தமிழ்விடுதூது —————- என்னும்இலக்கியவகையைச்சேர்ந்தது.

    அ. தொடர்நிலைச்செய்யுள்                    ஆ. புதுக்கவிதை

    இ. சிற்றிலக்கியம்                              ஈ. தனிப்பாடல்

3. விடுபட்டஇடத்திற்குப்பொருத்தமானவிடைவரிசையைக்குறிப்பிடுக.

    அ. —————–இனம்            ஆ. வண்ணம்

    இ. ——————குணம்         ஈ. வனப்பு

    1. மூன்று, நூறு, பத்து, எட்டு       2. எட்டு, நூறு, பத்து, மூன்று

    3. பத்து, நூறு, எட்டு, மூன்று  4. நூறு, பத்து, எட்டு, மூன்று

4.         காலம்பிறக்கும்முன்பிறந்தததுதமிழே!

    எந்தகாலமும்நிலையாய்இருப்பதும்தமிழே!-இவ்வடிகளில்பயின்றுவரும்நயங்கள்—

    அ. முரண், எதுகை, இரட்டைத்தொடை       ஆ. இயைபு, அளபெடை, செந்தொடை

    இ. மோனை, எதுகை, இயைபு                    ஈ. மோனை, முரண், அந்தாதி

5.        அழியாவனப்பு, ஒழியாவனப்பு,சிந்தாமணி – அடிக்கோடிட்டசொற்களுக்கு    இலக்கணக்குறிப்புதருக.

   அ. வேற்றுமைத்தொகை                       ஆ. ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்

    இ. பண்புத்தொகை                              ஈ. வினைத்தொகை

குறுவினாக்கள்

  1. நீங்கள்பேசும்மொழிஎந்தமொழிக்குடும்பத்தைச்சேர்ந்தது?
  2. நாங்கள்பேசும்மொழிதமிழ்,
  3. தமிழ், திராவிடமொழிக்குடும்பத்தைச்சேர்ந்தது.
  4. தமிழோவியம்கவிதையில்உங்களைமிகவும்ஈர்த்தஅடிகள்குறித்துஎழுத்துக.
  5. குறைகள்சொல்வதைவிட்டுவிட்டுப்புதுக்

கோலம்புனைந்துதமிழ்வளர்ப்பாய்!

  • தூயத்தமிழையாரும்பேசுவதில்லை; தமிழ்மொழிகல்விநிலையங்களில்கட்டாயமொழியாகஇல்லை.இதுபோன்றகுறைகளைச்சொல்லாமல்அவரவர்தாமேவிருப்பப்பட்டுதமிழைவளர்க்கவேண்டும்என்றுகூறுவதால்இவ்வடிகல்எனக்குமிகவும்விருப்பமானது.
  • கண்ணிஎன்பதன்விளக்கம்யாது?
  • இரண்டுஇரண்டுஅடிகளைக்கொண்டுஎதுகையால்தொடுக்கப்படும்செய்யுள்வகைகண்ணிஆகும்.
  • கணினிசார்ந்துநீங்கள்அறிந்தஎவையேனும்ஐந்துதமிழ்ச்சொற்களைஎழுதுக.
  • இணையம், தேடுபொறி, வலைப்பக்கம், உலாவி, தொடுதிரை
  • அகமாய்ப்புறமாய்இலக்கியங்கள் – அவை

அமைந்ததைச்சொல்லும்இலக்கணங்கள் – இலக்கியங்களின்பாடுபொருள்களாகஇவ்வடிகள்உணர்த்துவனயாவை?

  • அகஇலக்கியங்கள்
  • புறஇலக்கியங்கள்
  • செய்வினையைச்செயற்பாட்டுவினையாகமாற்றும்துணைவினைகள்இரண்டினைஎடுத்துக்காட்டுடன்எழுதுக.
  • பட்டது- ஓவியம்குமரனால்வரையப்பட்டது
  • ஆயிற்று – வீடுகட்டியாயிற்று
  • போனது – பணம்காணாமல்போனது.
  • வீணையோடுவந்தாள், கிளியேபேசு – தொடரின்வகையைச்சுட்டுக.
  • வீணையோடுவந்தாள் – வேற்றுமைத்தொடர்
  • கிளியேபேசு – கட்டளைத்தொடர்

சிறுவினா

  1. சங்கஇலக்கியத்தில்காணப்படும்கடற்கலனுக்குரியசொல்கிரேக்கமொழியில்எவ்வாறுமாற்றம்பெற்றுள்ளது?
  2. சங்கஇலக்கியத்தில்நாவாய், வங்கம், தோணி, கலம்போன்றபலவகையான கடற்கலன்கள்இயக்கப்பட்டதற்கானகுறிப்புகள்உள்ளன.
  3. உலகின்தொன்மையானமொழியாகவும்செவ்வியல்மொழிகளுள்ஒன்றாகவும்திகழ்வதுகிரேக்கமொழியாகும். இம்மொழியின்கடல்சார்ந்தசொற்களில்சங்கஇலக்கியசொற்களான எறிதிரை என்பதுஎறுதிரான்எனவும், கலன்என்பது கலவுகோய்எனவும், நீர்என்பதுநீரியோஸ்எனவும், நாவாய்என்பதுநாயுஎனவும், தோணிஎன்பதுதோணீஸ்என்வும்மாற்றம்பெற்றேவழங்கப்பட்டுள்ளது.
  4. திராவிடமொழிகளின்பிரிவுகள்யாவை? அவற்றுள்உங்களுக்குத்தெரிந்தமொழிகளின்சிறப்பியல்புகளைவிளக்குக.
  5. திராவிடமொழிகள்தென்திராவிடமொழிகள், நடுதிராவிடமொழிகள், வடதிராவிடமொழிகள்எனமூன்றாகவகைப்படுத்தப்பட்டுள்ளது.
  6. தமிழ், கன்னடம், மலையாளம்முதலியமொழிகள்தென்திராவிடமொழிக்குடும்பத்திலும், தெலுங்கு, கூயிமுதலியமொழிகள்நடுதிராவிடமொழிக்குடும்பத்திலும், குரூக், மால்தோ, பிராகுய்மொழிகள்வடதிராவடமொழிக்குடும்பத்திலும்அடங்கும்.
  7. இவற்றுள்எனக்குத்தெரிந்தமொழிதமிழ். தமிழ்தொன்மையும்இலக்கணஇலக்கியமும்உடையது.
  8. இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர்முதலியபலநாடுகளில்இன்றும்பேசப்பட்டுவருகிறது.
  9. திராவிடமொழிகளிலேயேபிறமொழித்தாக்கம்மிகவும்குறைந்ததாகக்கருதப்படுவதுதமிழேஆகும்.
  10. திராவிடமொழிகளுக்குத்தாய்மொழியாகத்திகழ்கிறது.
  11. இந்தியாவின்தொன்மையானகல்வெட்டுகளுள்பலதமிழிலேயேஉள்ளது.
  12. மூன்றுஎன்னும்எண்ணுப்பெயர்பிறதிராவிடமொழிகளில்எவ்வாறுஇடம்பெற்றுள்ளது?
  13. தமிழ்                 – மூன்று
  14. மலையாளம்                – மூணு
  15. தெலுங்கு           – மூடு
  16. கன்னடம்           – மூரு
  17. துளு                  – மூஜி
  18. காலந்தோறும்தமிழ்தன்னைஎவ்வாறுபுதுப்பித்துக்கொள்கிறது?
  19. பழங்காலத்தில்தமிழ்அகம்மற்றும்புறம்பற்றிப்பேசும்சங்கஇலக்கியங்களாகத்திகழ்ந்தது.  இவ்விலக்கியங்களைஎவ்வாறுபடைக்கவேண்டும்என்றுகூறும்இலக்கணங்களாகத்திகழ்ந்தது.
  20. பின்புதிருக்குறள், நாலடியார்முதலியநீதிஇலக்கியங்களாகியசங்கமருவியஇலக்கியங்களாகத்திகழ்ந்தது.
  21. அதன்பின்னர்காப்பியஇலக்கியங்களாகவும்பக்திஇலக்கியங்களாகவும்சித்தர்இலக்கியங்களாகவும்மாறிதற்போதுஇக்காலசூழலுக்குத்தகுந்தஇலக்காலஇலக்கியமாகவும்தன்னைப்புதுப்பித்துக்கொண்டுள்ளது.
  22. 5.  தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன்வேறுபடுத்திக்காட்டுக.
  23. எழுவாய்தானேஒருவினையைச் (செயலைச்) செய்தால்அதுதன்வினையாகும்.

அதாவது, செயலுக்கானபலன்எழுவாயைச்சேருமாயின்அதுதன்வினைஆகும்.

சான்று: பந்துஉருண்டது, நிறைமதிகற்றாள்.

  • எழுவாய்ஒருவினையைச்செய்யவைத்தால்அதுபிறவினைஆகும்.
  • அதாவது, செயலுக்கானபலன்எழுவாயைஅன்றிபிறரைச்சேர்ந்தால்அதுபிறவினைஆகும்,

சான்று: நிறைமதிகற்பித்தாள், 

செயல்பாடுகள்:

  1. வளரும்செல்வம் – உரையாடலில்குறிப்பிடப்படும்பிறமொழிச்சொற்களைத்தொகுத்துஅவற்றிற்குஇணையானதமிழ்ச்சொற்களைப்பட்டியலிடுக.
  2. புதுக்கோலம்புனைந்துதமிழ்வளர்ப்பாய் – உங்கள்பங்கினைக்குறிப்பிடுக.

கட்டுரை:

  1. தனக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கிய எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் “கால்முளைத்தக் கதைகள்” என்னும் புத்தகத்தின் கதையினைக் கூறி  நண்பனுக்குக் கடிதம் ஒன்று வரைக.

தனக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கிய எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் “கால்முளைத்தக் கதைகள்” என்னும் புத்தகத்தின் கதையினைக் கூறி  நண்பனுக்குக் கடிதம்

                                       குன்னம்,

16.08.2021.

அன்புள்ள நண்பனுக்கு,

                நான் இங்கு நலம். நீயும் உன் பெற்றோரும் நலமாக உள்ளீர்களா என அறிய ஆவல்! எனக்கு நீ பிறந்தநாள் பரிசாக வழங்கிய  எஸ் இராமக்கிருஷ்ணன் அவர்களின் கால்முளைத்தக் கதைகள் என்னும் புத்தகத்தினை நன்குப் படித்தேன். அப்புத்தகம் சிறுவர்கள் வாசித்தல் பயிற்சி பெறவும், கதைக் கூறுகின்ற திறனை வளர்த்துக்கொள்ளவும் ஏற்றாற்போல் எழுதப்பெற்றுள்ளது.

        இக்கதை முப்பது வகையான பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையினைக் கூறுவதாகவும் அவர்கள் கூறிய கதையின் பொருண்மையினை விளக்குவதாகவும் உள்ளது.

         இக்கதையில் வரும் பழங்குடி மக்கள் குகைகளில் தங்கி வாழ்ந்தார்கள். அக்குகைகளில் காணப்படுகின்ற ஒவ்வொரு பாறையிலும் ஒரு கதை இருப்பதாக நம்பி அவற்றை வழிபட்டனர். இருளைக் கண்டு அஞ்சினர். உலகம் எவ்வாறு தோன்றியது? நாகரிகம் எவ்வாறு வளர்ந்தது? முதலிய வினாக்களுக்கு விடை கூறுவது போல அமைந்த இப்புத்தகத்தினை எனக்கு பரிசாக வழங்கியமைக்கு நன்றி!

                                                                                 இப்படிக்கு,

                                                                         உன் அன்பு நண்பன்,

                                                                                 முகிலன்.  

உறைமேல் முகவரி:

         பெறுநர்

                 தமிழரசன்,

                 25, பாரதிதாசன் தெரு,

                 புதுவை.

  • பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் “உலகத்தாய்மொழி நாள்” (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் அமைக்க.

பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் “உலகத்தாய்மொழி நாள்” (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல்

                                                                         இடம்: பள்ளி வளாகம்

                                                                         நாள் : பிப்ரவரி 21

காலம்: மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து     – பள்ளி மாணவ மாணவியர்

வரவேற்புரை               – தமிழாசிரியர் அவர்கள்

தலைமையுரை            – தலைமையாசிரியர் அவர்கள்

சிறப்புரை                   – மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள்

கலைநிகழ்ச்சிகள்        – மாணவ மாணவியர்

பரிசு வழங்குதல்          – சிறப்பு விருந்தினர் அவர்கள்

நன்றியுரை                 – தலைமையாசிரியர் அவர்கள்

நாட்டுப்பண்                – மாணவ மாணவியர்

கற்பவை கற்றப்பின்

தொடர்களை மாற்றி உருவாக்குக.

  1. பதவியை விட்டு நீக்கினான் – தன்வினைத் தொடராக மாற்றுக.

விடை: பதவியை விட்டு நீங்கினான்

  • மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர் – பிறவினைத் தொடராக மாற்றுக.

விடை: திராவிட மொழி மொழியியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

  • உண்ணப்படும் தமிழ்த்தேனே – செய்வினைத்தொடராக மாற்றுக.

விடை: தமிழ்த்தேன் உண்ணப்படும்.

  • திராவிட மொழிகளை மூன்று மொழிக்குடும்பங்களாகப் பகுத்துள்ளனர். – செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக.

விடை: மூன்று மொழிக்குடும்பங்களாகத் திராவிட மொழிக்குடும்பம் பகுக்கப்பட்டுள்ளது.

  • நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

விடை: நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தார் (கற்பித்தார்)

சொற்களைத் தொடர்களாக மாற்றுக.

  1. மொழிபெயர்     – தன்வினை, பிறவினைத் தொடர்களாக மாற்றுக.

தன்வினைத்தொடர் : நான்  வேகமாக மொழிபெயர்த்தேன்.

பிறவினைத்தொடர்  : மாணவர்களுக்குத் திருக்குறளை மொழிபெயர்ப்பித்தான்.

  • பதிவுசெய்        –  செய்வினை, செயப்பாட்டு வினைத்தொடர்களாக மாற்றுக.

செய்வினைத்தொடர் : எழுத்தர் மாணவர்களின் விவரங்களைப் பள்ளி    

  பதிவேட்டில் பதிவுசெய்தார்.

செயப்பாட்டு வினைத்தொடர் : மாணவர்களின் விவரங்கள் பள்ளி பதிவேட்டில்

   எழுத்தரால் பதிவுசெய்யப்பட்டது.

  • பயன்படுத்து      – பிறவினை, காரணவினைத் தொடர்களாக மாற்றுக.

பிறவினைத்தொடர் : ஆசிரியர் கருவிகளைப் பயன்படுத்துவித்தார்.

காரணவினை : ஆசிரியர் கருவிகளைப் பயன்படுத்தவைத்தார்.

  • இயங்கு           – செய்வினை, செயப்பாட்டு வினைத்தொடர்களாக மாற்றுக.

செய்வினை     – வேகமாக இயங்கும் வாகனத்தைப் பார்த்தேன்.

செயப்பாட்டு வினை – வேகமாக இயங்கும் வாகனம் என்னால் பார்க்கப்பட்டது.

பொருத்தமான செயற்படு சொல்லை எழுதுக.

(தமிழிலக்கியங்களை, செவ்விலக்கியங்களை, நம்மை, வாழ்வியல் அறிவை)

  1. தமிழ் ——-கொண்டுள்ளது.           (செவ்விலக்கியங்களை)
  2. நாம் —— பயில வேண்டும்.             (தமிழிலக்கியங்களை)
  3. புத்தகங்கள் —— கொடுக்கின்றன.   (வாழ்வில் அறிவை)
  4. நல்ல நூலகள் ——-நல்வழிப்படுத்துகின்றன .   (நம்மை)

பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

  1. எல்லோருக்கும்  —– வணக்கம்.              (இனிய)
  2. அவன் ——– நண்பனான இருக்கிறான். (நல்ல)
  3. ——– ஓவியமாக வரைந்து வா.             (பெரிய)
  4. ——– விலங்கிடம் பழகாதே.                 (கொடிய)

பொருத்தமான வினையடைகளை எழுதுக.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

  1. ஊர்தி—– சென்றது.              (மெதுவாக)
  2. காலம் —– ஓடுகிறது.             (வேகமாக)
  3. சங்க இலக்கியங்கள் வாழ்க்கையை——— காட்டுகிறது. (அழகாக)
  4. இணையத்தளத்திலிருந்து தரவிறக்கியதை அனைவருக்கும் —-   காட்டு.  (பொதுவாக)

அடைப்புக்குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.

  1. நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)

விடை: இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர் யாவர்?

  • பாடினாள் (எழுவாய்த் தொடராக)

விடை: நிறைமதி பாடினாள்.

  • இசையின்றி அமையாது பாடல் (உடன்பாட்டுத்தொடராக)

விடை: பாடல் இசையோடு அமையும்.

  • நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)

விடை: நீ இதைச் செய்.

வேர்ச்சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

  1. தா ( அடுக்குத்தொடர், உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத்தொடர்)

அடுக்குத்தொடர்                  : தா தா

உடன்பாட்டு வினைத்தொடர்   : புத்தகத்தைத் தந்தான்.

பிறவினைத்தொடர்               : புத்தகத்தைத் தருவித்தான்.

  • கேள் ( எழுவாய்த்தொடர், உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத்தொடர்)

எழுவாய்த்தொடர்                 :  இசையைக் கேட்டேன்.

உடன்பாட்டு வினைத்தொடர்   :  சொல்பேச்சைக் கேட்டான்.

பிறவினைத்தொடர்               :  இசையைக் கேட்டுவித்தான்.

  • கொடு ( செய்தித்தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினைத்தொடர்)

செய்தித்தொடர்                          :  இன்று போலியோ சொட்டு குழந்தைகளுக்குக்  

   கொடுக்கப்பட்டது.

   கட்டளைத்தொடர்                :  உணவைக் கொடு.

   தெரிநிலை வினைத்தொடர்    :  அங்குச் சென்று கொடுத்தான்.

தமிழெண்களில் எழுதுக.

1. பன்னிரண்டு            -௧௨

2. பதின்மூன்று           – ௧௩

3. நாற்பத்து மூன்று      – ௪௩

4. எழுபத்தெட்டு          – ௭௮

5. தொண்ணூறு          – ௯௦

கலைச்சொல் அறிவோம்

1.  Morphone                        – உருபன்

2. Phoneme                         – ஒலியன்

3. Comparative Grammar        – ஒப்பிலக்கணம்

4. Lexicon                          – பேரகராதி

Leave a Comment