தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இரண்டு கட்டமாக 6.10.2020 மற்றும் 9. 10.2020 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வேட்புமனுத்தாக்கல் 15.9.2021 துவங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்திட ஆணையம் முடிவு எடுத்துள்ளது.இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை Covid-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை 12.1.2010 அன்று காலை 8 மணிக்கு துவங்கும். 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 74 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1381 ஒன்றிய வார்டுகள், 2901 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டுகள், ஆகியவற்றுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலின்போது மக்கள் நான்கு பதவிகளுக்கு நேரடியாக வாக்களிப்பதால், நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும் என்றும் பழனி குமார் கூறினார். இதில் மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு ஆகிய பதவிகளுக்கு கட்சிகள் அடிப்படையிலும் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு பதவிகள் கட்சிகள் அடிப்படையில் இல்லாமலும் தேர்தல் நடைபெறுகிறது. நேரடியாக நடைபெறும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என்று மாநில தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஒன்றிய தலைவர்,  ஒன்றிய துணைத்தலைவர், கிராம ஊராட்சித் துணைத்தலைவர்,  ஆகிய பதவிகளுக்கு அக்டோபர் 22-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

முதல் கட்ட வாக்குப்பதிவு

முதல் கட்ட வாக்குப்பதிவில் அடங்கிய மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்

1 செங்கல்பட்டு

இலத்தூர்,புனித தோமையார்மலை,திருக்கழுக்குன்றம், திருப்போரூர்.

2 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.

3 விழுப்புரம்

செஞ்சி,கண்டமங்கலம், முகையூர்,ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி.

4. கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை.

5 வேலூர்

குடியாத்தம், கீவகுப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.

6 இராணிப்பேட்டை

ஆற்காடு, திமிரி, வாலாஜா.

7 திருப்பத்தூர்

சோலையார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர்.

8. திருநெல்வேலி

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,மானூர், பாளையங்கோட்டை,பாப்பாக்குடி

9 தென்காசி

ஆலங்குளம், கடையம்,கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அடங்கிய மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்

1 செங்கல்பட்டு

அச்சிறுபாக்கம், சித்தாமூர்,காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம்.

2 காஞ்சிபுரம்

குன்றத்தூர்,திருப்பெரும்புதூர்

3 விழுப்புரம்

காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம்,

4 கள்ளக்குறிச்சி

சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருகம்

5 வேலூர்

அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர்,

6 இராணிப்பேட்டை

அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர்,

7 திருப்பத்தூர்

ஆலங்காயம், மாதனூர்,

8 திருநெல்வேலி

களக்காடு,நான்குனேரி, இராதாபுரம்,வள்ளியூர்,

9 தென்காசி

கடையநல்லூர், குருவிகுளம்,சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி

Leave a Comment