தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை-2021 – 2022 -அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் – 641 003 பட்டயப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2021 – 2022  (ADMISSION TO DIPLOMA IN AGRICULTURE / HORTICULTURE / AGRICULTURAL ENGINEERING) வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 படிப்புக்காலம் 

2 ஆண்டுகள்’ (4 semesters/ நான்கு பருவங்கள்) 

பட்டயப்படிப்பில் சேருவதற்கான தகுதி

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பன்னிரெண்டாம் (+2) வகுப்பில், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 

வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க பன்னிரெண்டாம் (+2) வகுப்பில், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் கணிதம் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 

தொழிற் கல்விப் பாடப்பிரிவில், உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். . 

தகுதிகளை அறிந்து கொள்ள பட்டயப்படிப்பிற்கான தகவல் கையேட்டினை (2021-2022) படிக்கவும்.  

பட்டயப்படிப்பு (Diploma) வழங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்வி நிலையங்கள் 

1.வேளாண் கல்வி நிலையம், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர்-621 712, திருச்சி மாவட்டம்,

2.வேளாண் கல்வி நிலையம், தேசிய பயறு ஆராய்ச்சி நிலையம், வம்பன் – 622 303. புதுக்கோட்டை மாவட்டம், (தமிழ் வழிக்கல்வி) தோட்டக்கலை :

3. தோட்டக்கலை கல்வி நிலையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை -629 161. கன்னியாகுமரி மாவட்டம்,

வேளாண்மை பொறியியல் : 1.வேளாண் கல்வி நிலையம்,

வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர்-621712, திருச்சி மாவட்டம்,

(இணைப்பு (அரசு) கல்வி நிலையங்கள் தோட்டக்கலை :

 1.தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தளி – 635118, கிருஷ்ணகிரி மாவட்டம்,

2.காய்கறி மகத்துவ மையம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம் – 624 004.

3.தமிழ் நாடு தோட்டக்க லை மேலாண்மை நிறுவனம், மாதவரம் – 600 0.51, திருவள்ளுவர் மாவட்டம்.

இணைப்பு (தனியார்) கல்வி நிலையங்கள் வேளாண்மை :

1. இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, கோவை, (ஆண்கள் மட்டும்) |

2. சகாயத்தோட்டம் வேளாண் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சி நிலையம், தக்கோலம், வேலூர் மாவட்டம்,

3. வானவராயர் வேளாண் கல்வி நிலையம், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்,

4. ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி, கலவை, இராணிப்பேட்டை மாவட்டம்,

5.பி.ஜி.பி. வேளாண் கல்லூரி, நாமக்கல்,

6. அரவிந்தர் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, திருவண்ணாமலை மாவட்டம், தொலைபேசி

7.ராகா வேளாண் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சி நிலையம், கோவில்பட்டி, தொலைபேசி எண் 04632-220612.8.

8. எம் , ஐ.டி. வேளாண்மை பட்டயக்கல்லூரி, வெள்ளாளப்பட்டி அஞ்சல், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்,

9. தோட்டக்கலை : 1.ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரி, கலவை, இராணிப்பேட்டை மாவட்டம்,

10.எம்.ஐ.டி. தோட்டக்கலை பட்டயக்கல்லூரி, வெள்ளாளப்பட்டி அஞ்சல், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்,

பயிற்று மொழி

மேற்கூறிய அனைத்து வேளாண் கல்வி நிலையங்களில் (வம்பன் தவிர) ஆங்கிலம் பயிற்று மொழியாக (English Medium) பயிற்றுவிக்கப்படுகிறது. வேளாண் கல்வி நிலையம், வம்பனில் மட்டும் தமிழ் பயிற்று மொழியாக (Tamil | Medium) பயிற்றுவிக்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை :

 விண்ண ப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (https://tnau.ac.in/diplomaadmission/) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக (online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இணையதள மூலம் விண்ண ப்பம் தொடங்கும் நாள் – 01/10/2021 

 விண்ணப்பிக்க கடைசி நாள் – 08/11/2021  

 தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நாள் – 15/11/2021 

Leave a Comment