பத்தாம் வகுப்பு-அணி , அலகிடுதல் மற்றும் பா இலக்கணம்

அணி , அலகிடுதல் மற்றும் பா இலக்கணம்

1. தற்குறிப்பேற்ற அணி

       அணி விளக்கம்

                  இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக்

கூறுவது  தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

            சான்று        

“போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”

சான்றின் விளக்கம்  

உயரமான கோட்டையின்  மதிலின்மீது  இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம்:

                        கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது, மதிலின்

மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரை மாநகருக்குள் வரவேண்டாம்’எனத் தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார் ஆசிரியர். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

2.  தீவக அணியைச் சான்றுடன் விளக்குக .

விளக்கம்

தீவகம் – விளக்கு, அறையில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் வெளிச்சம் தருவது போல் ஓர் இடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் சென்று பொருள் தருவது தீவக அணி

சான்று

சேர்ந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர் 

ஏந்து தடந்தோள் இழிகுருதி – பாய்ந்து

திசைஅனைத்தும் வீரச் சிலைபொழிந்த அம்பும்

மிசை அனைத்தும் புல்குலமும் வீழ்ந்து

பொருள்

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்ததன; காரணமாக மன்னருடைய தோள்கள் சிவந்தன; திசைகள் சிவந்தன; அம்புகள் சிவந்தன; பறவைக் கூட்டங்கள் சிவந்தன.

அணிப் பொருத்தம்

‘சேந்தன’ என்ற சொல் பாடலின் அனைத்து சொல்லோடும் சேர்ந்து பொருள் தருவதால் தீவக அணி ஆயிற்று.

3.  நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும். (நிரல் – வரிசை, நிறை –  நிறுத்துதல்)

சான்று

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

பொருள்

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்

அணிப் பொருத்தம்

இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்று முறைபட பொருள்  கூறி உள்ளமையால்  நிரல் நிறை அணி ஆயிற்று.

4.  எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் அணி எது அதனைச் சான்றுடன் விளக்குக.  

அல்லது தன்மை நவிற்சி அணியை விளக்குக.

அணி வகை – தன்மையணி

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமைய பாடுவது தன்மை அணியாகும்

சான்று

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக்கோன்

கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்

பொருள்

உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

அணிப் பொருத்தம்

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சி அணி ஆயிற்று.

5. வஞ்சப்புகழ்சி அணி

விளக்கம்

செய்யுளில் ஒருவரை அல்லது ஒன்றனைப் புகழ்வது போல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும்  வஞ்சப்புகழ்சியணி ஆகும்.

சான்று

            தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

            மேவன செய்தொழுக லான்

சான்றின் விளக்கம்

           தாம் நினைத்த காரியத்தை முடிப்பதில் கயவர்கள், தேவர்களுக்கு

நிகரானவர்கள்.

பொருத்தம்

இக்குறளில், தாம் நினைத்த காரியத்தை முடிப்பதில் கயவர்கள், தேவர்களுக்கு  நிகரானவர்கள் என்று  புகழ்வது போலக் கூறி, கவர்கள் தீய செயலைச் செய்து கெட்டழிவார்கள் என்று நுட்பமாகப்  பழித்துள்ளதால், இஃது வஞ்சப்புகழ்சியணிக்கு சான்று ஆகும்.

6. சொற்பொருள் பின்வரு நிலையணி  விளக்கம்

செய்யுளில், சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

சான்று

            பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

            பொருளல்ல தில்லை பொருள்

சான்றின் விளக்கம்

           ஒரு பொருட்டாக மதிக்காதவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்வது

பொருட்செல்வமே ஆகும்.

பொருத்தம்

இக்குறளில் பொருள் என்னும் சொல் பொருள் என்னும் பொருளில் மீண்டும் மீண்டும் வருவதால்  இஃது  சொற்பொருள்   பின்வருநிலையணிக்குச் சான்று  ஆகும்.

7. உவமை அணி

          விளக்கம்

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக நின்று ஒப்புமைத் தோன்ற வருவது உவமையணி ஆகும்.

சான்று

                        வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

                        கோலொடு நின்றான் இரவு.

                        உவமை                     – வேலொடு நின்றான் இடுஎன்றது

                        உவமேயம்               – கோலொடு நின்றான் இரவு

                        உவம உருபு – போலும்

            சான்றின் விளக்கம்

                        ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன்  தன் அதிகாரத்தைக் கொண்டு  

வரிவிதிப்பது,  வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

            பொருத்தம்

இக்குறளில் உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக நின்று ஒப்புமைத் தோன்ற வருவதால் இதில் உவமையணி பயின்று வந்துள்ளது.

         பொதுத்தன்மை – கொடுங்கோன்மை

8. எடுத்துக்காட்டு உவமையணி

            விளக்கம்

                        உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம

உருபு மறைந்து  நின்று ஒப்புமைத் தோன்ற வருவது எடுத்துக்காட்டு

உவமையணி ஆகும்.

            சான்று

                        பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

                        கண்ணோட்டம் இல்லாத கண்

                        உவமை         – பண்என்னாம் பாடற் கியைபின்றேல்                

உவமேயம்   – கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்

            சான்றின் விளக்கம்

பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் எந்த பயனும் இல்லை. அதுபோல இரக்கம்  இல்லாவிட்டால் கண்களால் எந்த பயனும் இல்லை.

            பொருத்தம்

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு மறைந்து  நின்று ஒப்புமைத் தோன்ற வருவதால் இக்குறள்  எடுத்துக்காட்டு உவமையணிக்குச் சான்று  ஆகும்.

பொதுத்தன்மை – கண்ணோட்டம்

மெல்லக்கற்போருக்காக அணி

3 . தற்குறிப்பேற்ற அணி

  அணி விளக்கம்

    இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக்

கூறுவது  தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

   சான்று   

“போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”

அணிப்பொருத்தம்:

இப்பாடலில், இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதால் இது  தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

4. தீவக அணியைச் சான்றுடன் விளக்குக .

    விளக்கம்

தீவகம் – விளக்கு, அறையில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் வெளிச்சம் தருவது போல் ஓர் இடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் சென்று பொருள் தருவது தீவக அணி

சான்று

”சேர்ந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர் 

ஏந்து தடந்தோள் இழிகுருதி

——————————————————-”

அணிப் பொருத்தம்

ஓர் இடத்தில் நின்ற சொல் (‘சேந்தன’ )செய்யுளின் பல இடங்களிலும் சென்று பொருள் தருவதால் இது தீவக அணி ஆயிற்று.

5. நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும். (நிரல் – வரிசை, நிறை –  நிறுத்துதல்)

சான்று

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

அணிப் பொருத்தம்

இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வதால் இது  நிரல் நிறை அணி ஆயிற்று.

6. எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் அணி எது அதனைச் சான்றுடன் விளக்குக. அல்லது தன்மை நவிற்சி அணியை விளக்குக.

அணி வகை – தன்மையணி

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமைய பாடுவது தன்மை அணியாகும்

சான்று

”மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்

————————————————-”

அணிப் பொருத்தம்

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமைய பாடுவதால் இது தன்மை அணியாகும்.

7. வஞ்சப்புகழ்சி அணி

விளக்கம்

புகழ்வது போல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும்  வஞ்சப்புகழ்சியணி ஆகும்.

சான்று

          தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

          மேவன செய்தொழுக லான்

பொருத்தம்

          இக்குறள், புகழ்வது போல பழிப்பதால் இஃது வஞ்சப்புகழ்சியணி ஆகும்.

(மெல்லக் கற்போருக்கு  இவ்வாறே பயிற்சி அளிக்கலாம்)

அலகிடுதல்

நேரசை

      தனிக்குறில்                     – ம, தொ…                                       

    தனிக்குறில்+ஒற்று         – மல், கொள்…

      தனி நெடில்                      – தா, தீ, தை, தெள…

      தனி நெடில் + ஒற்று        – தீம், கான்…

நிரையசை

     இரு குறில் (குறிலிணை)            –  பல, கொல…

      இரு குறில் + ஒற்று                     – பலர், கொளல்

      குறில் நெடில் (குறில் + நெடில்)            – கலா, வினா…

      குறில் நெடில்  + ஒற்று                – கலாம், விளாம்…

கவனிக்க.

      இரு நெடில் இணைந்து வராது (நெடிலும் நெடிலும்)

      நெடில் குறில் இணைந்து வராது (நெடிலடுத்து குறில்)

      ஒவ்வொருமுறையும் பிரிக்கும்போதும் நிரையசைக்கான சூத்திரத்தையே பயன்படுத்த வேண்டும்.

தேர்வில் எழுதிம் முறை      

குறள்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அலகிடுதல்

எண்          சீர்       அசைவாய்பாடு
1எப்/பொருள்நேர்+நிரைகூவிளம்
2எத்/தன்/மைத்நேர்+நேர்+நேர்தேமாங்காய்
3தா/யினும்நேர்+நிரைகூவிளம்
4அப்/பொருள்நேர்+நிரைகூவிளம்
5மெய்ப்/பொருள்நேர்+நிரைகூவிளம்
6காண்/பநேர்+நேர்தேமா
7தறி/வு  நிரை+நேர் (நிரைபு)பிறப்பு

முடிவு

            இக்குறளின் பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிந்துள்ளது.

பாவின் பொதுவிலக்கணம்
  1. வெண்பா  பொதுவிலக்கணம்
  2. அமைவு              – ஈற்றடி முச்சீராகவும் ஏனையடி நாற்சீராகவும் வரும்.
  3. சீர்                        – ஆசிரிய உரிச்சீர் (மாச்சீர், விளச்சீர்), காய்ச்சீர். ( பிறச்சீர் கலவாது)
  4. தளை                   – இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை. (வேற்றுத்தளை

                                கலவாது)

  • ஓசை                    – செப்பலோசை
  • அடி                     – அளவடி (நேரடி)
  • அடிவரையறை  – இரண்டடி சிறுமை , பன்னிரண்டடி பெருமை
  • சிறப்பு                 – ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கனுள்

   ஏதேனும் ஒன்றில் முடியும்.

  • ஆசிரியப்பா  பொதுவிலக்கணம்
  • அமைவு              – ஈற்றயலடி முச்சீராகவும் ஏனையடி நாற்சீராகவும் வரும்.
  • சீர்                        – ஆசிரிய உரிச்சீர் (மாச்சீர், விளச்சீர்), காய்ச்சீர். 
  • தளை                   – நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை   

             (பிறத்தளைகள்  கலந்து வரும். ஆனால், வஞ்சித்தளைகள் மட்டும் வாரா)

  • ஓசை                    – அகவலோசை
  • அடி                     – அளவடி (நேரடி)
  • அடிவரையறை  – மூன்றடி சிறுமை , பாடுவோனின் உள்ளக் குறிப்பு பெருமை
  • சிறப்பு                 – ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.         

Leave a Comment