பத்தாம் வகுப்பு – தமிழ்-இயல் – 7  வினா – விடைத் தொகுப்பு

இயல் – 7

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு

         வேண்டும்.  மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

         ) திருப்பதியும் திருத்தணியும்    ஆ) திருத்தணியும் திருப்பதியும்  

         இ) திருப்பதியும் திருச்செந்தூரும்    ஈ) திருப்பரங்குன்றமும்   பழனியும்  

2.  சுதேசி கப்பல் நிறுவனத்தினை தொடங்கியவர்

அ) திரு.வி.க              ஆ) ம.பொ.சி             ) வ.உ.சி      ஈ) . ஈ. வெ.ரா

3. அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் —————–.

            )  கல்வி – கேள்வி                      ஆ)  துணிவு – பணிவு 

            இ) அறம்  – மறம்                               ஈ) படித்தல் 

4.  ம.பொ.சிவஞானம் தனது உயரிய சொத்தாகக் கருதியது——————- .

             அ) பதவி                   ஆ) பொருள்              ) நூல்கள்                          ஈ) பட்டம்

5.  தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது————— .     

            அ) திருக்குறள்                                  ஆ) புறநானூறு

            இ) கம்பராமாயணம்                        )  சிலப்பதிகாரம்

6. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்  காப்போம்”  என்று முழங்கியவர்—– .

அ)  விநாயகம்                                   ஆ)  ரஷித்

) ம.பொ.சிவஞானம்                             ஈ)  மங்கலக்கிழார் 

7.  தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியை துறந்தவர் —————

            அ) காமராஜர்      ) இராஜாஜி     இ) அண்ணா     ஈ)  எம்.ஜி. ஆர் 

8.  

9.  கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைய  பாடுபட்டவர்  —————-

            அ) ந.முத்துசாமி                                ) மார்ஷல்.ஏ.நேசமணி

            இ) மு.கருணாநிதி                             ஈ) எவரும் இல்லை

10. ம.பொ.சிவஞானத்தின் தன் வரலாற்று நூல்.

            ) எனது போராட்டம்                             ஆ) என் சரிதம்

            இ) எனது சரித்திரம்                           ஈ) என் போராட்டம்

11. சிலம்பு செல்வர் ——————

            அ)  இளங்கோவடிகல்          )  ம .பொ. சிவஞானம் 

இ)  சீத்தலைச்சாத்தனார்                 ஈ)   நச்சினார்க்கினியர்  

12. பொன் ஏர்  பூட்டும்  திங்கள் —————-

            அ)  ஆவணி              ஆ) ஆடி                      ) சித்திரை                        ஈ) தை  

13. கிராம  ஊழியன், பாரத மணி, பாரத தேவி    முதலிய  இதழ்களின்  ஆசிரியர்  ———-

            அ)  திரு.வி.க                                     )  கு.ப.ராஜகோபாலன் 

            இ)  அயோத்திதாசன்                       ஈ)   ஈ.வெ.ரா  

14. கல் இலக்கியமாய்  அமைவது  ——————–

            ) மெய்க்கீர்த்தி  ஆ) கல்வெட்டு      இ) செப்பேடு     ஈ) நடுகல்

15. “திருபுவனச் சக்கரவர்த்தி ”   என்ற பட்டம் சூடியவர் ————–

            அ)  முதலாம்  இராசராசன்              )  இரண்டாம் இராசராசன்

            இ) முதலாம் ராசேந்திரன்                ஈ)  இரண்டாம் ராசேந்திரன்

16. மூவேந்தர் பற்றிய  செய்திகளை கூறும் பெருங்காப்பியம்———-

            அ)  வளையாபதி      ஆ)  குண்டலகேசி      ) சிலப்பதிகாரம்    ஈ)  மணிமேகலை

17. சிலப்பதிகாரம்  ————— காண்டம் கொண்டது  

            )   3            ஆ)  6               இ) 2         ஈ) 4   

18. “அடிகள்  நீரே  அருளுக ”  என்றவர்  ————-

)  சீத்தலைச்  சாத்தனார்                      ஆ)  இளங்கோவடிகள் 

இ)  திருவள்ளுவர்                 ஈ)  சேக்கிழார்

19. ஒருதலைக்   காமம்  —————

அ)  பெருங்கதை   ஆ)  கைக்கிளை    இ) பெருந்திணை    ஈ)  எவையும் இல்லை

20. கல்வி , வீரம்  , செல்வம் , புகழ் , கருணை  முதலியவற்றைப்  போற்றிப்பாடுவது

            ——- திணை

அ) பொதுவியல்                    )  பாடாண்          இ) வெட்சி     ஈ) நொச்சி

21. கோட்டையைக் காத்தல் ——————– திணை .

            )  நொச்சி                         ஆ)  வஞ்சி                  இ) காஞ்சி                  ஈ)  தும்பை 

22. “கவிதை வாழ்க்கையின்  திறனாய்வு ” என்றவர் —————-

) ஆர்னால்டு        ஆ) எல்லிஸ்               இ) பாரதியார்           ஈ) பாரதிதாசன்   

23. புலவர்களால்  எழுதப்பட்டுக் கல்தச்சர்களால்  கல்லில் பொறிக்கப்பட்டவை  —–

            )  மெய்க்கீர்த்தி              ஆ)  நடுகல்                இ) செப்பேடு             ஈ)  ஓவியம் 

24.   காளைகளை  ஒட்டிக்  கடுகிச்செல்  முன்பு  ————–. இவ்வடியில் 

            அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன ?

            )  விரைந்து செல்                                    ஆ)  மெதுவாக செல் 

            இ) மறைந்து செல்                                         ஈ)  கூடிச்செல்

25. “மண்ணுள் வினைஞரும்  மண்ணீட்டு ஆளரும் ”  இவ்வடியில் அடிக்கோடிட்ட   

            சொல்லின்  பொருள் என்ன ?

 அ) சிற்பி                   ) ஓவியர்                           இ) நெய்பவர்    ஈ) எண்ணெய்விற்போர் 

26. ஐம்பெரும் காப்பியம்  முறைவைப்பு முறையை குறிப்பிடும் நூல் ————–

அ) திருத்தணிகையுலா  ஆ)  மூவருலா              இ) அந்தாதி      ஈ)  கலிங்கத்துப்பரணி

27. சரியான அகர வரிசையைத்  தேர்ந்தெடுக்க

அ)  உழவு , மண் , ஏர் , மாடு           ஆ)  மண் , மாடு ,  ஏர் ,  உழவு  

            ) உழவு , ஏர் , மண் , மாடு        ஈ)  ஏர் , உழவு , மாடு , மண்

28. “தன் நாட்டு  மக்களுக்கு  தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்”  என்னும்

         மெய்க்கீர்த்தி   தொடர் உணர்த்தும் பொருள்.  

அ) மேம்பட்ட நிர்வாக திறன் பெற்றவர் 

ஆ) மிகுந்த செல்வம் உடையவர்                   

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

) நெறியோடு நின்று காவல் காப்பவர்.

29.  இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி  போரிடுவதன் காரணம் ———- .

அ)  நாட்டை கைப்பற்றல்                 ஆ) ஆநிரை கவர்தல்

) வலிமையை நிலைநாட்டல்                 ஈ) கோட்டையை முற்றுகையிடல்

30.  ஆநிரை கவர்தல் —————— திணை

) வெட்சி               ஆ) கரந்தை               இ) நொச்சி                 ஈ) தும்பை

31.  வாகை என்பது ——————–   

            அ)  தோல்வி              ஆ) மாலை                 ) வெற்றி                           ஈ)   போர்

32.  மண்ணாசை கருதி போர் செய்தல் ———————- திணை

            )  வஞ்சி                            ஆ) காஞ்சி                 இ) தும்பை                 ஈ) பாடாண்

33. மெய்க்கீர்த்தி என்ற பெயர் ——————— காலத்தில் வந்தது

            அ) சேரன்                   ) சோழன்                         இ) பாண்டியன்         ஈ) பல்லவன்

34. அகலிகை, ஆத்ம சிந்தனை முதலிய  படைப்புகளுக்கு உரியவர்——–.

அ)  திரு.வி.க                                     )  கு.ப.ராஜகோபாலன் 

            இ)  அயோத்திதாசன்                       ஈ)   ஈ.வெ.ரா  

35. முதல்மழை விழுந்ததும் எனத்தொடங்கும் ஏர் புதிது பாடலை இயற்றியவர்——–.

அ)  திரு.வி.க                                     )  கு.ப.ராஜகோபாலன் 

            இ)  அயோத்திதாசன்                       ஈ)   ஈ.வெ.ரா  

36. ’சிந்தாமணியாம் திருக்குறள் படைத்தான் …’ என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள

நூல் ——–.

            அ)  வளையாபதி      ஆ)  குண்டலகேசி     

) திருத்தணிகையுலா   ஈ)  மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

37. திருமால் குன்றத்தின் வேறுப்பெயர்——-.

            )  அழகர் மலை               ஆ)  சுருளிமலை      இ) வேங்கைக்கானல்    ஈ)  கொடைக்கானல்

38. நெடுவேல் குன்றத்தின் வேறுப்பெயர்———.

            அ)  அழகர் மலை      )  சுருளிமலை      இ) வேங்கைக்கானல்    ஈ)  கொடைக்கானல்

39. இந்திரவிழா ஊரெடுத்தக் காதை இடம்பெற்றுள்ள காண்டம் எது?

அ) புகார் காண்டம்                                   ஆ)மதுரை காண்டம்

            இ) வஞ்சி காண்டம்                          ஈ) பாலக்காண்டம்

40. இளங்கோவடிகள் எம்மரபைச் சேர்ந்தவர்?

            )  சேரர்     ஆ)  சோழர்    இ) பாண்டியர்    ஈ)  பல்லவர்

41. சிலப்பதிகாரம்  ————— காதைகளைக்  கொண்டது.  

            )   30          ஆ)  10             இ) 13        ஈ) 7

42. கோவலனையும் கண்ணகியையும் இடைப்பட்ட வழியில் மதுரைக்கு

அழைத்துச்சென்றவர்  ——.

            அ)  அரவணடிகள்    ஆ)  இளங்கோவடிகள்  ) கவுந்தியடிகள்   ஈ)  செங்குட்டுவன்

43. சிலப்பதிகாரம் ———— நூல் வகையைச் சேர்ந்தது.

அ) ஐம்பெருங்காப்பியம்  ஆ)ஐஞ்சிறுங்காப்பியம் 

இ) சங்க இலக்கியம்             ஈ) பக்தி இலக்கியம்

44. முத்தமிழ் காப்பியம் , குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் காப்பியம்

எது?

அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை  இ) சீவக சிந்தாமணி ஈ) வளையாபதி

45. இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) சிலப்பதிகாரமும் மணிமேகலையும்          ஆ) மணிமேகலையும்  சீவக சிந்தாமணியும்

இ) சீவக சிந்தாமணியும் வளையாபதியும்  ஈ) வளையாபதியும் குண்டலகேசியும்

46. கரந்தை என்னும் புறத்திணை ————.

அ) ஆநிரைகளை கவர்தல்   ஆ) ஆநிரைகளை மீட்டல் 

இ) மதிலைக் காத்தல் ஈ) மதிலைச் சுற்றி வளைத்தல்

47. காஞ்சி என்னும் புறத்திணை ————.

அ) மண்ணாசைக் காரணமாக போர்த்தொடுப்பது 

ஆ) மண்ணைக் காப்பாற்ற எதிர்த்து போரிடுவது   

இ) மதிலைக் காத்தல்                       ஈ) மதிலைச் சுற்றி வளைத்தல்

48. மதில்  பற்றிய புறத்திணைகள் ———–.

அ) வெட்சி, கரந்தை             ஆ) வஞ்சி, காஞ்சி    

இ) நொச்சி, உழிஞை    ஈ) தும்பை, வாகை

49. எதிரி நாட்டு மதிலைச் சுற்றி வளைத்தல், உள்ளிருந்து தன் நாட்டு மதிலை காத்தல்

முறையே ———-, ————-  திணைகள் ஆகும்.

அ) வெட்சி, கரந்தை             ஆ) வஞ்சி, காஞ்சி    

இ) நொச்சி, உழிஞை    ஈ) உழிஞை, நொச்சி

50. வீரனைப் புகழ்ந்து பாடுவது ———- திணை.

அ) வெட்சி                 ஆ) வஞ்சி       இ) நொச்சி    ஈ) பாடாண்

51. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக்கொத்தாகப் பூக்கும் பூ  —— .

அ) வாகைப்பூ         ஆ) வஞ்சிப்பூ             இ) நொச்சிப்பூ         ஈ) பருத்திப்பூ

52. உழிஞைக் கொடியின் வேறுப்பெயர் ———.

அ) அவரை                ஆ)  தூதுவளை          இ) பாலைக்கொடி   ஈ) முடக்கொற்றான்

53. காஞ்சி என்பது ஒருவகை ———–.

அ) நெடுமரம்             ஆ) குறுமரம்                     இ) செடி       ஈ) கொடி

பாடலைப் படித்து  வினாக்களுக்கு விடையளிக்க.

1. ” வண்ணமும் சுண்ணமும்  தண்நறுஞ் சாந்தமும்

பூவும்  புகையும்  மேவிய விரையும்

பகர்வனர்  திரிதரு  நகரவீதியும் 

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர்  இருக்கையும் ” .

  1. இப்பாடலின் ஆசிரியர் யார்? 

அ)   கம்பர்                                         ஆ)இளங்கோவடிகள்

இ) கண்ணதாசன்                            ஈ) அதிவீரராம பாண்டியர்

  • இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?  

அ) காசிக்காண்டம்                         ஆ) கொய்யாக்கனி

 இ) சிலப்பதிகாரம்                          ஈ) கம்பராமாயணம்

  • வண்ணமும் சுண்ணமும் – இலக்கணம் தருக 

அ) எண்ணும்மை                            ஆ) வினைமுற்று

இ) பெயரெச்சம்                               ஈ) தொழிற்பெயர்

  • விரை என்பதன் பொருள்-

அ) மனம்                ஆ) மணம்              இ) உள்ளம்                ஈ) மேகம்

2.   ” முதல்மழை விழுந்ததும்  மேல்மண் பதமாகிவிட்டது

           வெள்ளி முளைத்திடுது  , விரைந்து போ நண்பா !

           காளைகளை ஓட்டிக் கடுகிச்செல்,  முன்பு!

           பொன் ஏர் தொழுது , புலன் வழிபட்டு

           மாட்டைப் பூட்டி  காட்டைக் கீறுவோம் ” .

  1. இப்பாடலின் ஆசிரியர் யார் ? 

அ)   கம்பர்                                         ஆ)கு.ப.ராஜகோபாலன்

இ) கண்ணதாசன்                            ஈ) அதிவீரராம பாண்டியர்

  • இப்பாடல் இடம்பெறும் நூல் ?

அ) காசிக்காண்டம்                         ஆ)கொய்யாக்கனி

இ) ஏர் புதிதா?                         ஈ) கம்பராமாயணம்

  • விளிச்சொல்லை எழுதுக.  

அ) விழுந்ததும்        ஆ) தொழுது      இ) நண்பா       ஈ) கடுகிச்செல்

  • “கடுகி ” பொருள் காண்க 

அ) மனம்                ஆ) விரைந்து                   இ) உள்ளம்    ஈ) மேகம்

3. “பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

           கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்

           தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

        மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்”

  1. இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

அ)கோடை வயல்                 ஆ) கண்ணதாசன் கவிதைகள் 

இ)சிலப்பதிகாரம்              ஈ) மீட்சி விண்ணப்பம்

  • பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

அ)பட்டினும் – பருத்தி      ஆ)பட்டினும் – கட்டு

இ)பகர்வனர் – திரிதரு         ஈ) பருத்தி – காருகர்

  • இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

அ)பட்டினும் – பருத்தி         ஆ)பட்டினும் – கட்டு

இ)பகர்வனர் – திரிதரு         ஈ) பருத்தி – காருகர்

  • இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

அ)பட்டு – மயிர்                     ஆ)தூசு – துகிர்

இ)முத்து – பவளம்                ஈ) ஆரம் – அகில்

குறுவினாக்கள்

1. பாசவர் , வாசவர்  , பல்நிண விலைஞர் , உமணர்– சிலப்பதிகாரம்  காட்டும்              

          இவ்வணிகர்கள் யாவர் ?

  • பாசவர்                             –   வெற்றிலை விற்பவர்
  • வாசவர்                            –   நறுமணம் விற்பவர்
  • பல்நிண விலைஞர்         –   பல வகை இறைச்சி விற்பவர்
  • உமணர்                            –   உப்பு விற்பவர்

2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது ?

  • மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகளைப் பலரும் எக்காலத்திலும் அறியவும் ,
  • அவர்களின் புகழ் அழியாமல் காப்பதற்கும் மெய்க்கீர்த்திகளைப் பாடினர்.

3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச்  சான்று

தருக.

  • வறுமையும் பசியும்  வாட்டியது. இருப்பினும், அறிவுப் பசி தூண்டியது.
  • எனவே, வயிற்றுப்  பசியோடு பழைய புத்தகம் வாங்கி படித்தார்.

4. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  • வெட்சி     – கரந்தை
  • வஞ்சி        – காஞ்சி
  • நொச்சி     – உழிஞை
  • தும்பை     – வாகை

கூடுதல் வினாக்கள்

32. ” உரைப்பாட்டு மடை ” – குறிப்பு எழுதுக

உரைநடையில் அமைந்திருக்கும் பாட்டு .

33. ஏழு சுரங்கள் யாவை ?

ஸ, ரி,  க,  ம,  ப,  த,  நி.

34. ஏழு இசைகள் யாவை ?

குரல்,  தாரம் , உழை , துத்தம்  ,  இளி  , கைக்கிளை  ,  விளரி

36. பொருள் தருக :

தால்            –  தாலாட்டு

உழுவை     –  புலி

அகவுதல்    –  ஒலித்தல்

ஏந்தெழில் –  மிகுந்த அழகு

அணிமை   –  அண்மை

33.   புறத்திணைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  • பன்னிரண்டு வகைப்படும். 
  • வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் , பொதுவியல்  , கைக்கிளை, பெருந்திணை.

——-

சிறுவினாக்கள்

1. அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக்      கைப்பற்ற  நினைக்கிறான். அப்போர்  நிகழ்வைப் புறப்பொருள்  வெண்பாமாலை கூறும்   

          இலக்கணத்தின் வழி விளக்குக.

  • புறத்திணைகள் –          வஞ்சித்திணை மற்றும்  காஞ்சித்திணை
  • அவந்தி நாட்டு மன்னன் மண்ணாசைக் கருதி, வஞ்சிப்பூவினைச் சூடி, போர் புரிய செல்வது வஞ்சித்திணை.                          
  • மருத நாட்டு மன்னன்,  தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு  காஞ்சிப் பூச்சூடி எதிர்த்துப் போரிடுவது காஞ்சித்திணை ஆகும்.
  • இவை இரண்டும் மண்ணாசைக் காரணமாக நடைபெறும் போர் ஆகும்.

2. ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம்’ இடம் சுட்டிப் பொருள்  தருக.

இடம்           : சிற்றகல் ஒளி (பாடத்தலைப்பு)

தொடர்       :தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம்’

பொருள் விளக்கம் :          

  • ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அதற்குத் தகுந்தாற்போலவே நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையமும் இடைக்கால ஏற்பாட்டினை அமைக்கும் சூழல் இருந்தது.
  • அந்நாள் முதல்வராக இருந்த இராஜாஜி, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.
  • இதைத் தடுக்க வேண்டி மாநகராட்சி தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் ஒன்றைக் கூட்டி, “ தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.

3. “முதல்மழை விழுந்ததும்” என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா கவிபாடுகிறார்?

  • மண் பதமாகிறது.
  • சூரியன் உதித்தது.
  • காளைகளை விரைவாக ஓட்டினர்.
  • மண்ணை உழுதனர்.     
  • நாற்று வளர்ந்தது.
  • கொழுவை நாட்டினர்.

4. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தினை எழுதுக.

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடையப் போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக்கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

              சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

                                                  மெய்க்கீர்த்தி

       பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி.  இது சோழர்காலத்தில் மிகுதியாகப் பாடப்பட்டது. இது மன்னருடைய வீரம் , ஆட்சிசிறப்பு, போர்செய்திகள் முதலிய வரலாற்றைக் கூறி, மன்னர் பரம்பரையையும் வாழ்த்தும். முதலில் கிடைக்கப்பெற்ற முதலாம் இராசராசனுடைய மெய்க்கீர்த்தியில் அவன்வரலாறு மட்டும் கூறப்பட்டாலும் அதன்பின்பு  பாடப்பட்ட மெய்க்கீர்த்திகளில் மன்னர் பரம்பரை முழுதும் விரித்துக் கூறப்பட்டுள்ளது.

உரைப்பத்தி வினா- விடை

         ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா  துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக    ஒப்பந்தம். இது கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அ) இப்பத்தியில் குறிப்பிடப்படும் அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?

              ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னா வில் அமைந்துள்ளது

ஆ) ‘முசிறி’ எந்நாட்டு துறைமுகம்?

              சேர நாட்டுத் துறைமுகம்

இ) அலெக்ஸாண்டிரியா துறைமுகம் எந்த நாட்டில் உள்ளது?

              எகிப்து நாடு

ஈ)  பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட வணிக ஒப்பந்தம் எந்த நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது?

                    கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது.

ஃ இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்களை மொழிவாரியாகப்பிரித்தனர்.    அப்போது, ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக        அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர். அச்சூழலில்        வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச்               செய்தவர் தமிழாசான் மங்கலங்கிழார் தமிழரசர் கழகம் சென்னையிலும், திருத்தணியிலும்           தமிழர் மாநாடு நடத்தியது. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களிலும் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது.

அ) இந்திய மாநிலங்கள் எப்பொழுது பிரிக்கப்பட்டது?

                இந்திய விடுதலைக்குப் பிறகு

ஆ) சித்தூர் மாவட்டத்தை எதனுடனும் இணைக்க விரும்பினர்?

                ஆந்திர மாநிலத்துடன்

இ) வடக்கெல்லைப் போராட்டம் தொடங்கிய இடங்கள்?

                சித்தூர், புத்தூர், திருத்தணி

ஈ)  வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்தது யார்?

                தமிழாசான் மங்கலங்கிழார்

நெடுவினாக்கள்

1. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக .

மகளிர் நாள்விழா

இடம்: பள்ளிக் கலையரங்கம்                                                          நாள்:08.03.2019. கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத்   

தலைவரின் நன்றியுரை.

அனைவருக்கும் வணக்கம்.

இன்று  08.03.2019 – திங்கள் கிழமை,

நேற்று நம் பள்ளியில் நடந்த மகளிர் நாள்விழா பற்றிய அறிக்கை

  • மகளிர் நாள் விழாவாகிய நேற்று, பள்ளி கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடியிருந்தனர்.
  • தலைமை ஆசிரியர் அ.க. செந்தில்முருகன் அவர்கள் வரவேற்றார்.
  • இதழாளர் கலையரசி சிறப்புரையாற்றினார்.  
  • சக ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
  • மாணவ தலைவர் நன்றியுரை வழங்கினார்.
  • நாட்டுப் பண்ணோடு நிகழ்வு இனிதாக நிறைவுற்றது.

       நன்றி.

2. பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின்  நயத்தை விளக்குக.

  • சோழன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகினறன; மக்கள் பிணிக்கப் படுவதில்லை.
  • நடனத்தின்போது சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன; மக்கள் எதற்காகவும் புலம்புவதில்லை.
  • சோழன் நாட்டில் எப்போதும் நீர் ஓடுவதால் ஓடைகள் மட்டுமே கலக்கம் அடைகின்றன; மக்கள் ஒருபோதும் கலங்குவதில்லை.
  • மாங்காய்கள் மட்டுமே வடுபடுகின்றன; மக்கள் வடுபடுவதில்லை.
  • மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன; மக்களின் உரிமைகள் சோழன் நாட்டில் பறிக்கப்படுவதில்லை.
  • இங்கு, காடுகள் மட்டுமே கொடியவனவாக இருக்கின்றன; மக்கள் கொடியவர்களாக இல்லை.
  • வண்டுகள் மட்டுமே கள் (தேன்) குடிக்கின்றன; மக்களிடத்தில் அப்பழக்கம் இல்லை.
  • மலை மூங்கில் மட்டுமே வெறுமையாய் உள்ளது; மக்களிடத்தில்  வெறுமை இல்லை.
  • இளமான்களின் கண்களில் மட்டுமே மருட்சி உள்ளது; மக்களிடத்தில் மருட்சி இல்லை.
  • குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து செல்கின்றன; மக்களிடத்தில் பிறழ்ச்சி இல்லை.
  • நெற்கதிர்கள் மட்டுமே வயலில் போராக எழுகின்றன; நாட்டில் போர் இல்லை.
  • புலவர்கள் பாட்டில் மட்டுமே பொருள் மறைந்திருக்கும்; மக்கள் ஒருபோதும் தம் பொருள்களை மறைப்பதில்லை.

3. சிலபதிக்கார மருவூர்ப்பார்க்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்      

          அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

  • பூ மற்றும் நறுமண பொருட்கள் விற்றனர்.
  • பட்டு,பருத்தி நூல் ,பவளம்.முத்து முதலியனவும் விற்றனர்.
  • தானியகடைகள் இருந்தன.
  • ஏழு இசைகளை இசைத்தனர்.
  • பாசவர் வெற்றிலை விற்றனர்.
  • பல்நிண விலைஞர் இறைச்சி விற்றனர்.
  • உமணர்கள் உப்பு விற்றனர்.
  • ஓசுநர் எண்ணெய் விற்றனர்.
  • ஓவியர்,சிற்பிகள் இருந்தனர்.
  • கைத்தொழில் பலரும் செய்தனர்.

இக்கால வணிக வளாகம்

  • தரைதளம் ,மேல்தளம்  போன்றவற்றில் வணிகம் செயல்படுகிறது
  • அங்காடிகளில் அனைத்து வகை பொருட்களும் விற்கின்றனர்.
  • இணையத்திலும் வணிகம் நடைபெறுகிறது.

ஒப்பீடு

  • இக்கால வணிகம் முற்கால வணிகத்தைவிட பொருட்களைத் தயாரிப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் மேம்பட்டுள்ளது.
  • ஆனால், வணிகத்தில் அறம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது.
  • மேலும், பொருட்களின் தூய்மையும் குறைந்துகொண்டே வருகிறது.

4. மங்கையராய்ப் பிறப்பதற்கே…

                              பொருளடக்கம்
முன்னுரைஎம்.எஸ். சுப்புலட்சுமிபாலசரசஸ்வதிராஜம் கிருச்ஷ்ணன்கிருஷ்ணாம்பாள் ஜெகந்நாதன் சின்னப்பிள்ளைமுடியுரை

முன்னுரை

     ”மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!” என்ற கவிமணியின் கூற்றுக்கு ஏற்ப சமுதாயத்திற்குத் தொண்டாற்றிய சாதனைப் பெண்மணிகள்  குறித்து விரிவாகக் காண்போம்!

எம்.எஸ்.சுப்புலட்சுமி

சமுதாயப் பணி  – பாடகர் (கர்நாடக இசைக் கலைஞர்)

சிறப்புகள்

  • தன் குறலால் ஹெலன் கெல்லர் மற்றும் காந்தியடிகளைச் சந்தித்தமை.
  • மீரா திரைப்படத்தில் நடித்தமை.
  • 1963, 1966 ஆம் ஆண்டுகள் முறையே இங்கிலாந்து மற்றும் ஐ.நா. அமைப்பில் பாடியமை.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராதி ஆகிய மொழிகளில் பாடியமை.

பெற்ற விருதுகள்

  • தாமரையணி விருது, மகசேசே விருது, இந்திய மாமணி விருது.

பாலசரஸ்வதி

சமுதாயப் பணி  – நடனக் கலைஞர் ( பரதம்)

சிறப்புகள்

  • மரபுசார் நாட்டியத்தை அறிமுகம் செய்தமை.
  • நாட்டுப் பண்ணுக்கு நடனம் ஆடி பெயர்பெற்றமை.
  • ஐரோப்பா, அமெரிக்கா முதலிய  நாடுகளில் தமிழ்க் கலையாம் பரதத்தை அறிமுகம் செய்தமை.

பெற்ற விருதுகள்

  • தாமரைச் செவ்வணி விருது (மத்திய அரசு)

ராஜம் கிருஷ்ணன்

சமுதாயப் பணி  – பெண் எழுத்தாளர்.

சிறப்புகள்

  • முதல் பெண் எழுத்தாளர்.
  • கதைகள், சிறுகதைகள், புதினம், கட்டுரைகள், குறுநாவல்கள், குழந்தை இலக்கியம், வரலாற்று நூல்கள் முதலியவற்றை எழுதியவர்.

புகழ்ப்பெற்ற புதினங்கள்

  • கரிப்பு மணிகள்   – உப்பளத் தொழிலாளர் வாழ்க்கை
  • குறிஞ்சித்தேன்                – நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்க்கை
  • அலைவாய்க்கரையில்   – மீனவர் வாழ்க்கை
  • சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர் – உழவர்களின் வாழ்க்கை
  • கூட்டுக்குஞ்சுகள்            – தீப்பெட்டித் தொழில் செய்யும் குழந்தைகளின் வாழ்க்கை
  • மண்ணகத்து பூந்துளிகள் – பெண் சிசுக்கொலை

பெற்ற விருதுகள்

  • சாகித்திய அகாதெமி ( வேருக்கு நீர் புதினத்திற்காக)

கிருஷ்ணாம்பாள் ஜெகந்நாதன்

சமுதாயப் பணி  – சமுதாய போராளி ( பெண் கல்வி, வேளாண் மக்கள்)

சிறப்புகள்

  • காந்தியடிகள் துவங்கிய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலியவற்றில் கலந்துகொண்டமை.
  • கணவருடன் சேர்ந்து பூதான இயக்கத்தில் பணிபுரிந்தமை.
  • “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” தொடங்கி உழுபவருக்கு உதவியமை.

பெற்ற விருதுகள்

  • தாமரைத் திரு விருது, வாழ்வுரிமை விருது( சுவீடன்), காந்தி அமைதி விருது ( சுவிட்சர்லாந்து)

சின்னப்பிள்ளை

சமுதாயப் பணி – சுய உதவிக்குழு அமைத்து பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைத்தமை.

சிறப்புகள்

  • ஆதரவற்ற பெண்கள், கணவனை இழந்தோர், ஏழைப்பெண்கள் ஆகியோருடன் இணைந்து “களஞ்சியம்” என்னும் சுய உதவிக்குழு ஆரம்பித்து பெண்களுக்காக உழைத்தமை.
  • சுனாமி வந்தபோது மீட்டமை.
  • முப்பது ஆண்டுகள் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டமை.

பெற்ற விருதுகள்

  • ஸ்திரி சக்தி புரஸ்கார் விருது, ஒளவை விருது, பொதிகை விருது, தாமைரைத் திரு விருது.

மொழிப்பயிற்சி

1. பின்வரும் தொடர்களுக்கு, பொருத்தமான தொடர் அமைக்க. (மொ.ஆ)

  • வரப்போகிறேன்              – நான் வரப்போகிறேன்.
  • கொஞ்சம் அதிகம்                        – கொஞ்சம் அதிகமாக உண்டேன்.
  • இல்லாமல் இருக்கிறது    – மனிதநேயம் இல்லாமல் இருக்கிறது.
  • முன்னுக்குப் பின்              – திருடன் முன்னுக்குப்பின் பேசுவான்.
  • மறக்க நினைக்கிறேன்    – தீயவற்றை மறக்க நினைக்கிறேன்.

2. தொகைச் சொற்களைப் பிரித்து எழுது. தமிழ் எண்ணுரு தருக.   (மொ.ஆ)

தொகைச்சொல்                    பிரித்தல்                                      தமிழ் எண்ணுரு

மூவேந்தர்                              மூன்று + வேந்தர்                              (3) மூன்று – ௩

                  நாற்றிசை                               நான்கு + திசை                                  (4) நான்கு – ௪

முத்தமிழ்                                மூன்று + தமிழ்                                  (3) மூன்று –    ௩       

                  இருதிணை                            இரண்டு + திணை                            (2) இரண்டு – ௨

                  முப்பால்                                 மூன்று + பால்                                    (3) மூன்று – ௩

                  ஐந்திணை                              ஐந்து + திணை                                  (5) ஐந்து – ௫

                  நானிலம்                                நான்கு + நிலம்                                  (4) நான்கு – ௪

                  அறுசுவை                              ஆறு + சுவை                                      (6) ஆறு – சு

                  பத்துப்பாட்டு                         பத்து + பாட்டு                                   (10) பத்து – ௧௦

                  எட்டுத்தொகை                     எட்டு + தொகை                                (8) எட்டு – ௮

                  பதினெண்                              பதின் + எட்டு            (10) பத்து – ௧௦, + (8) எட்டு – ௮   

3. மொழிபெயர்க்க. (மொ.ஆ)

 Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the     

      Marutham region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by  the ancient Tamil.

மருத நிலமும் விவசாயமும்

சங்க காலத்தமிழர் நிலத்தினை ஐவகையாகப் பிரித்தனர். அதில் மருதநிலமானாது விவசாயத்திற்கு ஏற்றதும் வளமானதும் ஆகும். இங்கு விவசாயிகள், விவசாயம் செய்ய சூரிய ஒளி, பருவ மழை , மண்வளம் ஆகியவற்றை நம்பி இருக்கின்றனர். இயற்கையின் இக்கூறுகளில் சங்ககாலத் தமிழர், சூரிய ஒளிக்கு முதன்மை கொடுத்தனர்.

4. கதையை உரையாடலாக மாற்றுக. (மொ.ஆ)

மகள் சொல்கிறாள் :-

அம்மா என்காதுக்கொரு தோடு – நீ

              அவசியம் வாங்கி வந்து போடு!

சும்மா இருக்க முடியாது – நான்

              சொல்லிவிட்டேன் உனக்கு  இப்போது!

தாய் சொல்கிறாள்:-

காதுக்குக் கம்மல் அழகன்று- நான்

              கழறுவதைக் கவனி நன்று

நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்

              நீகேட்டு வந்து காதில் அணிவாய்!

மகள் மேலும் சொல்கிறாள் :

கையிரண்டு வளையல் வீதம் – நீ

              கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!

பக்கியென் றென்னை யெல்லோரும் – என்

              பாடசாலையிற் சொல்ல நேரும்!

தாய் சொல்லும் சமாதானம்:

வாரா விருந்து வந்த களையில் – அவர்

              மகிழ உபசரித்தல் வளையல்!

ஆராவமுதே மதி துலங்கு – பெண்ணே

              அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு!

பின்னும் மகள் :

ஆபரணங்கள் இல்லை யானால் – என்னை

              யார் மதிப்பார் தெருவில் போனால்?

கோபமோ அம்மா இதைக் சொன்னால் – என்

              குறைத் தவிர்க்க முடியும்

அதற்குத் தாய்:

கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்

              கல்வைத்த, நகைதீராத  ரணம்!

கற்ற பெண்களை இந்த நாடு – தன்

              கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!

                                                  கல்வி அழகே அழகு

மகள் : அம்மா, என் காதுகளுக்கு ஒரு தோடு வாங்கிப்போடு; என்னால் வெறுங்காதோடு     

           இருக்க முடியாது.

தாய் : மகளே, நான் சொல்வதை உற்றுக்கேள்! சான்றோர்களின் சொற்களைப்  

பணிவாய்க் கேட்டு அதை காதில் போட்டுக்கொள் அதுதான் அழகு.

மகள்: அம்மா நீ, கடன்பட்டாவது என் கைகளுக்கு இரண்டு வளையல்கள் வீதம் வாங்கி

போடு. ஏனெனில் வெறுங்கையோடு இருந்தால் என்னை, என்பாடசாலையில்

உள்ளோர் பக்கி என்று சொல்வார்கள் .

தாய்:   விருந்தினராக ஒருவர் வீடுதேடி வந்தபோது அவருக்கு விருந்து உபசரிப்பதே

உன் கைகளுக்கு வளையல். பிறர் கூறும் வளையல்   ஆசை என்னும் பூட்டால்

போடும் கைவிலங்கே ஆகும். அது ஒருபோதும் அழகு சேர்க்காது.

மகள்:  நான் ஆபரணங்கள் அணிந்து கொண்டு செல்லாவிட்டால் தெருவில் செல்வோர்

ஒருவரும் என்னை மதிக்கமாட்டார்கள்;  கோவம் வேண்டாம் அம்மா; என் குறையினைப் போக்குங்கள் அம்மா!.

தாய்:   கற்பதே பெண்களுக்கு ஆபரணம். கல் பதித்த நகைகள் தீராத ரணம். கற்ற

பெண்களை இந்த நாடு அன்புடன் கண்களில் ஒற்றிக்கொள்ளும் .

5. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. (மொ.வி)

  ஊர்ப்பெயர்                      மரூஉ

   தஞ்சாவூர்                               – தஞ்சை

   திருச்சிராப்பள்ளி                  – திருச்சி

   திருநெல்வேலி                      – நெல்லை

   உதகமண்டலம்                     – உதகை

   கும்பகோணம்                       – குடந்தை

   சைதாப்பேட்டை                   – சைதை

   மயிலாப்பூர்                           – மயிலை

   புதுச்சேரி                                – புதுவை

   புதுக்கோட்டை                     – புதுகை

   கோயம்புத்தூர்                      – கோவை

   நாகப்பட்டினம்                      – நாகை

   மன்னார்குடி                          – மன்னை

6. கலைச்சொற்கள் (மொ.வி)

  • Consulate                         –           துணைத்தூதரகம்
  • Patent                                –           காப்புரிமை
  • Document                         –           ஆவணம்
  • Guild                                  –           வணிகக்குழு
  • Irrigation                            –           பாசனம்
  • Territory                             –           நிலப்பகுதி

7. அகராதியைக் கண்டு பொருள் எழுதுக.  (மொ.வி)

  • மிரியல்                              –           மிளகு
  • வருத்தணை                      –           பெருக்குதல்
  • அதசி                                  –           சணல்
  • துரிஞ்சில்                           –           வௌவால்

8. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

அழிப்பதா வீரம்?

மன்னனின் ஆட்சி அதிகாரத்திற்கு

முப்படையும் மோதி அழிகிறது.

உயிர்களைக் குடித்து உயிர்வளர்க்கும்

மன்னன்தன் மன்னாசையை நிறைவேற்ற

விண்ணுக்கும் மண்ணுக்கும் திரள்கிறது

வீரர் கூட்டம்.

ஆபத்தை மனித மனங்களில் விதைத்து

ஆயுதத்தில் அருவடை செய்வது

போர்குணம்.

அழிப்பதா வீரம்? ஆக்குவதே வீரம்!

புரியவைத்தது பண்டைய போர் நிகழ்வு!

9. காட்சியைக் கண்டு எழுதுக. (மொ.வி)

ஏர்ப்பிடிக்கும் கை

ஏர்ப்பிடிக்கும் கைகள்,

ஏற்றம் பெறும் கைகள்!

எவனுக்கும் வளையாமல்,

எருதைப்போல அஞ்சாமல்,

சொந்த காலில் நிற்க,

சொல்லித்தரும் கைகள்!

வறியோர்க்கு மட்டுமல்ல;

அறிவு வானில் பறப்பதற்கும்

வாரிக்கொடுக்கும் வள்ளல் கைகள்!

10. நூலோடு – ஆசிரியரைப் பொருத்தி எழுதுக. (நி.அ.த)   

      என் கதை                 –           நாமகக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

      வேருக்கு நீர்             –           ராஜம் கிருஷ்ணன்

      நாற்காலிக்காரர்      –           ந. முத்துசாமி

Leave a Comment