இயல் – 9
உரிய விடையினைத் தெரிவுசெய்து எழுதுக.
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன்
கருதுவது
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்
இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
3. ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக பெற்ற விருது
அ) குடியரசுத் தலைவர் விருது ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது ஈ) தாமரைத்திரு விருது.
4. ஜெயகாந்தனின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம்
அ) சுந்தர காண்டம் ஆ) பாரீசுக்குப் போ
இ) உன்னைப் போல் ஒருவன் ஈ) சில நேரங்களில் சில மனிதர்கள்
5. நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான
வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்று கூறியவர்
அ) அசோகமித்திரன் ஆ) கா. செல்லப்பன்
இ) சி.சு.செல்லப்பா ஈ) ம.பொ.சிவஞானம்
6. “ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு
வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்” என்று கூறியவர்
அ) அசோகமித்திரன் ஆ) கா. செல்லப்பன்
இ) ஜெயகாந்தன் ஈ) ம.பொ.சிவஞானம்
7. “எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே
கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின்
வாடையும் சேர்ந்து வரும்” என்று ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்
அ) அசோகமித்திரன் ஆ) கா. செல்லப்பன்
இ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஈ) ம.பொ.சிவஞானம்
8. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு
அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே என்று
கூறியவர்
அ) அசோகமித்திரன் ஆ) கா. செல்லப்பன்
இ) ஜெயகாந்தன் ஈ) ம.பொ.சிவஞானம்
9. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர்
அ) அசோகமித்திரன் ஆ) கா. செல்லப்பன்
இ) ஜெயகாந்தன் ஈ) ம.பொ.சிவஞானம்
10.ஜெயகாந்தன் தர்க்கத்திற்கு அப்பால் சிறுகதை அமைந்த தொகுப்பு
அ) குருபீடம் ஆ) யுகசந்தி இ) ஒருபிடி சோறு ஈ) உண்மை சுடும்
11.“இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்…” – இவ்வடிகளில் கற்காலம் என்பது
அ) தலைவிதி ஆ) பழைய காலம்
இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது
12. கவிஞர் நாகூர் ரூமியின் இயற்பெயர்
அ) முகமது நபி ஆ) அப்துல் ரகுமான்
இ) முகமது ரஃபி ஈ) சந்தா சாகிப்
13. கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்
அ) முகமது நபி ஆ) அப்துல் ரகுமான்
இ) சந்தா சாகிப் ஈ) முகமது ரஃபி
14. ———– மனச் சுமைகள் செங்கற்கள் அறியாது.
அ) தொழிலாளர் ஆ) முதலாலிகள் இ) சித்தாள் ஈ) மற்றவர்கள்
15. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று —— ,——— வேண்டினார்
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
16. கிறித்துவிற்கு முன் தோன்றியவர்
அ) யுதாசு ஆ) மத்தேயு இ) யோக்கோபு ஈ) திருமுழுக்கு யோவான்
17. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்
அ) யுதாசு ஆ) கருணையன் இ) யோக்கோபு ஈ) திருமுழுக்கு யோவான்
18. கருணையன் தாயார் யார்?
அ) எலிசபெத் ஆ) மரியன்னை இ) தூய மேரி ஈ) இலியா ராணி
19. வீரமா முனிவருக்கு இஸ்மத் சன்யாசி என்னும் பட்டத்தை வழங்கியவர் —–
அ) சந்தாசாகிப் ஆ) மத்தேயு இ) யோக்கோபு ஈ) திருமுழுக்கு யோவான்
20. இஸ்மத் சன்யாசி என்னும் சொல்லின் பொருள்
அ) அருளுடையவர் ஆ) முனிவர் இ) அன்பானவர் ஈ) தூய துறவி
21. வீரமாமுனிவரின் இயற்பெயர்
அ)திருமுழுக்கு யோவான் ஆ)கான்சுடான்சு ஜோசப் பெசுகி
இ)கருணையன் ஈ) யோக்கோபு
22. தமிழின் முதல் அகராதி
அ) பேரகராதி ஆ) சதுரகராதி
இ) கலைக்களஞ்சிய அகராதி ஈ) அகராதி நிகண்டு
23. அசும்பு – பொருள் கூறுக
அ) மலை ஆ) நிலம் இ) காடு ஈ) கிளை
24. இலக்கண குறிப்புத் தருக- காய்மணி
அ) பண்புத்தொகை ஆ) உம்மைத்தொகை
இ) வினைத்தொகை ஈ) உவமைத்தொகை
25. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
26. ——- க்கு அழகு செய்து சுவையை உண்டாக்கும் அணிகள்
அ) உரைநடை ஆ) செய்யுள் இ) இலக்கணம் ஈ) துணைப்பாடம்
27.இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
அ) தன்மையணி ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி ஈ) தற்குறிப்பேற்றயணி
28.தீவகம் என்னும் சொல்லின் பொருள்
அ) விளக்கு ஆ) நெருப்பு இ) காற்று ஈ) வெம்மை
29.ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு பொருந்தி
பொருள் தருவது
அ) தன்மையணி ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி ஈ) தற்குறிப்பேற்றயணி
30. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது
அ) தன்மையணி ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி ஈ) தற்குறிப்பேற்றயணி
31. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன்
உண்மையான இயல்புத்தன்மை அமையப் பாடுவது
அ) தன்மையணி ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி ஈ) தற்குறிப்பேற்றயணி
32. வீரமாமுனிவர் சந்தாசாகிப் என்ற மன்னனிடம் உரையாடுவதற்குக் கற்றுக்கொண்ட
மொழி ———–.
அ) தமிழ் ஆ) ஆங்கிலம் இ) தெலுங்கு ஈ) உருது
33. தேம்பா + அணி, தேன்+பா+அணி முறையே ———, ———— என்பது அதன்
பொருளாகும்.
அ) வாடாத மாலை, தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு
ஆ) தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு, வாடாத மாலை
இ) தேன் போன்ற அணிகலன் , வாடாத மாலை
ஈ) தேன் போன்ற அணிகலன் , தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு
34. தேம்பாவணி நூலின் ஆசிரியர்———.
அ) ஜி.யூ. போப், ஆ) உமறுப்புலவர் இ) தாயுமானவர் ஈ) வீரமாமுனிவர்
35. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் ———-.
அ) கிருத்து ஆ) சூசையப்பர் இ) நபிகள் நாயகம் ஈ) சிவன்
36. கீழ்காண்பவற்றுள் பொருந்தாதது எது?
அ) சூசையப்பர் ஆ) கிருத்து இ) யோசேப் ஈ) வளன்
37. தேம்பாவணி நூலின் காண்டம், படலம், காதை முறையே —–,—–,—- ஆகும்.
அ) 4, 36, 3615 ஆ) 3, 30, 3615 இ) 3, 36, 3615 ஈ) 3, 36, 3516
38. தேம்பாவணி படைக்கப்பெற்ற ஆண்டு ——- ஆம் நூற்றாண்டு.
அ) 15 ஆ) 16 இ) 17 ஈ) 18
39. கீழ்காண்பவற்றுள் பொருந்தாதது எது?
அ) தொன்னூல் விளக்கம் ஆ) பரமார்த்தக் குருகதைகள்
இ) தேம்பாவணி ஈ) இயேசு காவியம்
40. சிலை, மிசை, புள் இவற்றின் பொருள்கள் முறையே ——,——-,—— ஆகும்.
அ) வில், பறவை, மேலே ஆ) மேலே, பறவை, வில்
இ) வில், மேலே, பறவை ஈ) பறவை, மேலே, வில்
1. ’போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி, வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட’ என்ற செய்யுள் அடியில் பயின்றுவரும் அணி எது?
அ) தற்குறிப்பேற்ற அணி ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி ஈ) வஞ்சப்புகழ்ச்சி அணி
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
1. நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே
1. இப்பாடலின் ஆசிரியர்
அ)பாரதிதாசன் ஆ) கண்ணதாசன் இ) வீரமாமுனிவர் ஈ) முடியரசன்
2. இப்பாடல் இடம்பெற்ற நூல்
அ)கோடை வயல் ஆ) கண்ணதாசன் கவிதைகள்
இ)தேம்பாவணி ஈ) மீட்சி விண்ணப்பம்
3. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக
அ)நவமணி – தவமணி ஆ)நவமணி – நல்லறப்
இ)உவமணி – சுனைகள் ஈ)படலை –மார்பன்
4. பொருள் தருக : படலை
அ) துன்பம் ஆ) மாலை இ) மலர்கள் ஈ) வண்டு
குறுவினாக்கள்
1. ‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய
வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
- பணம், பட்டம், பதவி, பொருள் ஆகியவற்றால் மற்றவர்களை மதிக்காமல் வாழ்பவர்களைத் தலைக்கனம் பிடித்தவர்கள் என்கிறார்.
- ஆனால், எப்போதும் பசி, பட்டினி, வறுமை என்றிருக்கும் சித்தாள், தன் தலைகனத்தால் (தன் தலையில் சுமையைத் தூக்கிச் செல்வதால்) மட்டுமே வாழ்க்கையை நடத்துகிறான் என்று சித்தாளின் வாழ்வைப் பற்றி கூறுகிறார்.
2. தீவக அணியின் வகைகள் யாவை ?
- தீவக அணி மூன்று வகைப்படும்.
- அவையாவன: முதல்நிலைத் தீவகம் , இடைநிலைத் தீவகம் , கடைநிலைத் தீவகம்.
3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது ?
- இப்பாடலில் நிரல் நிறை அணி பயின்று வந்துள்ளது .
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
4. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் உண்டு. அதற்குரிய காரணமும் உண்டு
இத்தொடரை இரு தொடர்களாக்குக.
- நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
- நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.
5. “காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” உவமை உணர்த்தும் கருத்து
யாது ?
- இளம் பயிரானது வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே தூயமணி போன்று பெய்கின்ற மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்து விட்டது போல கருணையனாகிய நானும் என் தாயை இழந்து விடுகிறேன் .
கூடுதல் வினாக்கள்
44. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை ?
- குடியரசுத் தலைவர் விருது
- சாகித்ய அகாதெமி விருது
- சோவியத் நாட்டு விருது
- ஞானபீட விருது , தாமரைத்திரு விருது
45. ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு சிலவற்றை எழுதுக.
- குருபீடம் , யுகசந்தி , ஒரு பிடி சோறு , உண்மை சுடும்
46. ஜெயகாந்தனின் புதினங்கள் நான்கினை எழுதுக .
- பாரிசுக்கு போ , சுந்தரகாண்டம் , உன்னைப்போல் ஒருவன் , கங்கை எங்கே போகிறாள்.
48. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளை எழுதுக?
- நதியின் கால்கள் , ஏழாவது சுவை , சொல்லாத சொல் , “சித்தாளின் மனச்சுமைகள்.
35. தன்மை அணியின் வகைகளை எழுதுக.
- தன்மையணி நான்கு வகைப்படும்.
- பொருள் தன்மை அணி
- குணத் தன்மையணி
- சாதித் தன்மை அணி
- தொழிற் தன்மையணி
——-
சிறுவினாக்கள்
1. செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம்
கவிஞர் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய சித்தாளு என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்
கட்டடங்கள் உருவாவதற்குக் காரணமான சித்தாளின் மனச் சுமைகளைச்செங்கற்கள் அறிவதில்லை .
விளக்கம்
பல அடுக்குமாடி கட்டிடங்களை உருவாக்கி பிறருடைய கனவுகளை நனவாக்கும் சித்தாளின் சுமைகளைப் பற்றி எவரும் நினைப்பதில்லை. கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்த வேளை உணவு. அவர்களின் மனச்சுமையைச் செங்கற்களும் அறிவதில்லை மனிதர்களும் அறிவதில்லை என்று நாகூர் ரூமி சித்தாளின் வேதனையைப் புலப்படுத்துகிறார்.
2. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
- நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்.
- இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
- உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிவகைகளை அறியேன்.
- காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
3. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை
என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்
‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
தோல்வியை எதிர்ப்பார்க்கையில் தோல்வியும் வெற்றிதான் என்ற மனநிலையில் வாழ்க்கையைத் தீர்மானிக்ககூடிய ஒன்றிற்காக வெளியூர் சென்றபோது எண்ணத்திற்கு மாறாக வெற்றி கிடைத்தது அவனுக்கு.
வெற்றியைக் கொண்டாட எண்ணியபோது கையிலிருந்த ஒரு வெள்ளி நாணயம் அதற்கு உறுதுணையாக அமைந்தது. அதில் ஊருக்குப் போவதற்குப் பன்னிரண்டு அனாப் போக, மீதமுள்ள நான்கு அனாவில் இரண்டு அனாவில் காபி அருந்தியாகிவிட்டான்.
இரண்டு அனாவை என்ன செய்யலாம் என்று எண்ணியபோது தூரத்திலிருந்து ”கண்ணிரண்டும் தெரியாதவனுக்கு உதவி செய்யுங்கள்” என்னும் குறல் ஒலித்தது. அந்த இரண்டு அனாவையும் அவனுடைய ஈயப் பாத்திரத்தில் இட்டு தர்மம் செய்துவிட்டான்.
வீட்டிற்குப் புறப்படுவதற்காகப் பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் நின்று பன்னிரண்டு அனாவைக் கொடுத்து பயணச்சீட்டு கேட்டபோது கட்டணம் உயர்த்தப்பட்டதால் மேலும் ஒரு அனா தரும்படி கேட்டபோது என்ன செய்வது என்றே புரியாமல் திகைத்து நின்றுவிட்டான். முதியவரின் பாத்திரத்திலிருந்து நாம் போட்ட இரண்டு அனாவில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாமா என்று எண்ணியபோது, ”நாம் தர்மம் செய்துவிட்டோம் ; அவன் நம்மை வாழ்த்திவிட்டான்; இப்போது அந்த காசு எப்படி நம்முடையதாகும் என்று ஒருகணம் சிந்தித்து மறுகணம், ”அதில் ஒரு அனாவை எடுத்துக்கொண்டால் என்ன? வாழ்த்தியதற்கு ஒரு அனா போதாதா?” என்று உள்ளம் கூற, உடனே சென்று தயங்கியபடியே ஒரு அனாவை எடுத்தான். முதியவர் அதை கண்டுபிடித்து அவனை வைதார். அந்த இரண்டனா காசையும் கையிலிருந்த ஒரு அனாவைவும் சேர்த்து அந்த பாத்திரத்திலேயே போட்டுவிட்டு அடுத்த இரயில் நிலையம் வரையில் நடந்தே சென்றான்.
தமிழ்நாட்டில் ஒரு கோர விபத்து நடைபெற்றது. அது அவன் செல்லவிருந்த அந்த இரயிலில் ஏற்பட்ட விபத்துதான் அது. அந்த இரயிலில் அவன் செல்லாததால் விபத்திலிருந்து தப்பித்தான். அவன் செய்த தர்மம்கூட அவனைக் காத்திருக்கலாம். எனவே, தர்க்கத்திற்கு அப்பாலும் சில செயல்கள் நடைபெறத்தான் செய்கிறது.
உரைப்பத்தி வினா – விடை
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர். சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன்.
அ) ஜெயகாந்தன் எத்தகைய எழுத்தாளுமை மிக்கவர் ஆவார்?
ஆ) ஜெயகாந்தன் எதில் தனி முத்திரை பதித்தவர்?
இ) இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
நெடுவினாக்கள்
1. கருணையன் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்தம் பூக்கள் போன்ற உவமைகளாலும்
உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
- குழியினுள் மலர்ப்படுக்கை அமைத்து, உலகில் செம்மையான அறங்களைச் செய்து வாழ்ந்த தன் அன்னையின் உடலை அதில் வைத்து, மண் இட்டு மூடி, அதன்மேல் மலர்களையும் கண்ணீரையும் பொழிந்தான் கருணையன்.
- ”தாய், தன் வாயால் மணிபோல் கூறும் உண்மையான சொற்களை மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் மணிமாலைப் போல் அசைந்து வாழ்ந்த நான் இப்போது, தாயை இழந்ததால், இளம்பயிர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்வதுபோல வாடுகிறேன்.”
- ”பூத்துக்குலுங்கும் மரக்கிளையில் பறிக்கப்பட்ட மலரைப் போல் வாடியது என் மனம். தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பு தைத்த புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம். வழுக்குநிலத்தில் தனியாக விடப்பட்டு, வழித்தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்.”
- ”தாய் கூறியதை மட்டும் செய்து பழகியதால், உயிர்ப்பிழைக்கும் வழியையும், உடலுக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்ளும் வழிமுறையையும் அறியேன். இந்நிலையில் என்னை, என் தாய் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டாளே! ”
- மேற்கூறியவாரெல்லாம் கருணையன் வருந்தினான். அதைக் கேட்ட பூத்த மரங்களின் மணம் வீசும் தேன்மலர்களும், பூக்கள் மலர்ந்துள்ள சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டினங்களும் பல்வேறு இசைகளை இசைத்ததைப் போலக் கூச்சலிட்டன.
2. ஒருவன் இருக்கின்றான்
பொருளடக்கம் |
முன்னுரைகதைமாந்தர்கள்தங்கவேலுவைத் தேடிவந்த இளைஞனின் நிலைஆறுமுகத்தின் வருகைவீரப்பனின் அன்புமுடிவுரை |
முன்னுரை
கு. அழகிரிசாமி எழுதிய ’ஒருவன் இருக்கிறான்’ என்ற கதையில் வரும் வீரப்பன் என்பவன், ஒன்றும் இல்லாதவனும் உடல்நலகுறைபாடு உடையனுமாகிய தன் நண்பனுக்கு உதவியவிதம் குறித்து விரிவாகக் காண்போம்!
கதைமாந்தர்கள்
- குப்புசாமி
- ஆறுமுகம்
- வீரப்பன்
- தங்கவேலு மற்றும் அவர் மனைவி
- குப்புசாமியின் சித்தி மற்றும் சித்தப்பபா
தங்கவேலுவைத் தேடி வந்த இளைஞன்
தங்கவேலு வீட்டில் இல்லாத நிலையில் அவரைத் தேடி அழுக்கு ஆடையும் தாடியும் உடைய ஒரு இளைஞன் வந்தான். அடிவயிற்றில் கைவைத்துக்கொண்டிருந்த அவன் பார்ப்பதற்கு நோயாளி போலவே இருந்தான். பக்கத்து வீட்டுக்காரர் அவனிடம் இரவுதான் அவர் வருவார் என்று கூறினார். அவர் கூறியவாரே தங்கவேலு இரவுதான் வீட்டிற்கு வந்தார். வந்த அவர் அன்றிரவு அவனுக்கு உணவு கொடுத்து, உறங்குவதற்கு வெளியில் அனுப்பிவிட்டார் . அவனோ பக்கத்து வீட்டுக்காரரின் ஜன்னலுக்கு நேராக வந்து படுத்துக்கொண்டான். அது பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அவர் தன் தலைக்கு அருகில் படுத்துக்கொள்வது போல நினைத்து தன் மனைவியிடம், ”இவன் எப்போது போவான் என்று தெரியவில்லை” என்று அவனை வெறுப்பதுபோலக் கூறினார். அவர் மனைவியோ, ”அவனே பாவம் அவனை ஏன் வெறுக்கிறீர்கள்? அவன் நமக்கு என்ன செய்கிறான்? நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்னாவது? ” என்று கூறி அவன் நிலமைக்காக வருந்தினாள். விடிந்ததும் தங்கவேலு, பக்கத்துவீட்டுக்காரரிடம் சென்று, அவன் காஞ்சிபுரத்தில் உள்ள தன் மனைவின் அக்காள் மகன் என்றும், அவன் பெற்றோர் இறந்துவிட்டதால் மாமன் வீட்டில் இருந்தான் என்றும், சைக்கிள் கடையில் வேலை செய்யும் வரை தாய்மாமன் சோறுபோட்டதையும் வயிற்றுவலி வந்து கடையிலிருந்து நின்றதால் சோறுபோடாமல் துரத்தி விட்டதையும் கூறினார். அவர், அவனைப் பற்றி ஒவ்வொன்றாய் கூறும்போதும் அவனை வெறுப்பது போலவே பேசினார். தங்கவேலுவின் மனைவிக்கும் அவன் வருகையில் விருப்பமில்லை.
ஆறுமுகத்தின் வருகை
இரண்டு நாள்கள் இவ்வாறே சென்றன. மூன்றாவது நாள் தங்கவேலு, மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அப்போது குப்புசாமியைத் தேடி ஒருவன் காஞ்சிபுரத்திலிருந்து வந்தான். முதலில் குப்புசாமி யார் என்று தெரியாத நிலையில் வயிற்றுவலிக்காரன் என்று அறிந்த பின்னரே, அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதைப் பக்கத்துவீட்டுக்காரர் வந்தவனிடம் கூறினார். வந்தவன் குப்புச்சாமியின் நலத்தை விசாரித்த பின்னர், தான் உறவினர் ஒருவரைப் பார்க்க பட்டணத்துக்கு வந்ததையும், தன்னிடம் குப்புசாமியின் நண்பனாகிய வீரப்பன் குப்புசாமியைப் பார்த்துவிட்டு வரும்படி கூறியதையும் சொல்லி, வீரப்பன் கொடுத்த கடிதத்தையும் மூன்று ரூபாய் காசையும் கொடுத்து, தன்னிடமிருந்த ஒரு ரூபாய் காசையும் கொடுத்து தங்கவேலுவிடமோ குப்புச்சாமியிடமோ கொடுக்கும்படி கூறினான். பின்னர், தன் பையிலிருந்த நான்கு சாத்துகொடிகளுள் இரண்டை எடுத்து கொடுத்தான்.
வீரப்பனின் அன்பு
ஆறுமுகம் கொடுத்தக் கடிதத்தைப் பிரித்துப்பார்த்தார் பக்கத்துவீட்டுக்காரர். அதில் “என் உயிர் நண்பன் குப்புசாமிக்கு எழுதிக்கொண்டது. நீ இங்கிருந்து போனதிலிருந்து என்னுயிர் இங்கே இல்லை. எப்போதும் உன் ஞாபகமாகவே இருக்கிறேன். நீ விரைவாக குணமாகி வரவேண்டும். நான் இப்போது வேலை இல்லாமல் இருக்கிறேன்; அதனால், எனக்கு வருமானம் இல்லை. இந்த சூழலில் ஆறுமுகம் பாட்டணம் போவதாக என்னிடம் கூறினான். உடனே ஓடிச் சென்று மூன்று ரூபாயினைக் கடனாக வாங்கிவந்து அவனிடத்தில் கொடுத்து அனுப்பியுள்ளேன். நானே வரலாம் என்றால் அந்த மூன்று ரூபாயும் பேருந்து கட்டணத்திற்கே ஆகிவிடும். எனவே, அந்த மூன்று ரூபாயையும் உன் உடல்நலத்தைச் சரிசெய்வதற்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவனிடம் கொடுத்தனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள். வேறு யாரிடமாவது கடன்பெற்று விரைவில் உன்னை நான் நேரில் வந்து பார்க்கிறேன். நீ நலமாகி வந்தால்தான் நான் உண்ணும் உணவு, உணவாக இருக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தைப் படித்தப் பின்பு என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. உடனே நான் குப்புசாமியைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்குப் புறப்பட்டேன்.
முடிவுரை
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் நலனின் மீது அக்கறை கொள்ள ஒருவராவது இருப்பர். நாம் நிகழ்காலத்தில் சிறப்பாக வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்று தெரியாது. எனவே, வாழும்போது யாரையும் சிறுமைப் படுத்தாமல், அனைவருக்கும் நன்மை செய்து வாழவேண்டும்.
- ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
”அமுதம்” வார இதழ் வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்கள் அமுதம் வார இதழின் இந்த வார இதழ் – “ஜெயகாந்தன் சிறப்பு வார இதழ்” சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதை மன்னன் ஜெயகாந்தனின் பிறந்த நாளை ஒட்டி, அவரை சிறப்பிக்கும் விதமாக,அவரின் சுவாரசியமான வரலாறும், அவர் எழுதிய கதைகளின் சிறப்பம்சங்களும், அவரை பற்றி வாசகர் மற்றும் கலைத்துறையைச் சார்ந்தவர்களின் கருத்தும், இதில் இடம் பெறுகிறது. மேலும், அவர் படைத்த ’தர்க்கத்திற்கு அப்பால் ’என்ற சிறுகதையும் இடம்பெறுகிறது. மறவாமல் வாங்கிப் படித்திடுவீர்! ( இதழ் , 16.10.2020 அன்று வெளியாகும்) |
மொழிப்பயிற்சி
1. பொருத்தமான நிறுத்தற் குறியீகளை இடுக. (மொ.ஆ)
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி எனவும், வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
2. மொழிபெயர்க்க. (மொ.ஆ)
அ) Education is what remains after one has forgotten what one has learned in School.
– Albert Einstein
ஒருவன் பள்ளியில் கற்றவற்றுள் மறந்துவிட்டவைபோக எஞ்சியிருப்பதே கல்வியாகும்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஆ)Tomorrow is often the busiest day of the week. – Spanish proverb
வாரத்தின் நாள்களுள் நாளை என்பதே மிகவும் பரபரப்பான நாள். – ஸ்பானிஷ்
பழமொழி.
இ) It is during our darkest moments that we must focus to see light. – Aristotle
வாழ்வின் மிக இருண்ட தருணத்தில்தான் நாம் வெளிச்சத்தைக் காணக் கவனம்
செலுத்த வேண்டும். – அரிஸ்டாட்டில்.
ஈ) Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts.
– Winston Churchill.
வெற்றி என்பது இறுதி அன்று. தோல்வி என்பது அழிவு அன்று; தொடர்ந்து
முயலும் துணிவே சிறப்பானது. – வின்ஸ்டன் சர்ச்சில்.
3. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.(மொ.ஆ)
- தாமரை இலை நீர்போல
நண்பர்களுக்குள் இருக்கும் நட்பு, தாமரை இலை நீர்போல பட்டும் படாமலும் இருத்தல் கூடாது.
- மழைமுகம் காணாப் பயிர்போல
பெற்றோரை இழந்த குழந்தைகளின் வாழ்வு மழைமுகம் காணாப் பயிர்போல எப்போதும் வாடியிருக்கும்.
- கண்ணினைக் காக்கும் இமைப்போல
நம்மை எந்த வயதிலும் நம் பெற்றோர், கண்ணினைக் காக்கும் இமைப்போல நின்று காத்திடுவர்.
- சிலைமேல் எழுத்து போல
சிறுவயதில் கற்கும் கல்வி சிலைமேல் எழுத்துபோல மனதில் நிலைத்து நின்று நம்மை நெறிப்படுத்தும்.
4. பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.(மொ.ஆ)
கம்பனும் கண்டேத்தும் உமறுப்புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குத்தம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ.
புலவர் பெயர்கள்
கம்பன், உமறுப்புலவர், ஜவ்வாதுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயர், குணங்குடி மஸ்தான் சாகிபு, சேக்கிழார், செய்கு தம்பி பாவலர்.
5. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

இது ஆவணம் அன்று
கொடுக்கின்ற போது மடைமைத்தன்மையோடு இருந்தானாம்
அன்றைய பேகன்!
தெருவோர பிச்சைக்காரனுக்குச்
சொற்பகாசு கொடுப்பதையும் படம் (செல்பி) எடுத்து,
படம் காட்டுகிறான்
இன்றைய பேகன்!
வலக்கை கொடுப்பது இடக்கைக்குத்
தெரியாது காத்தமை அன்று!
விளம்பரத்திற்காகவே கொடுப்பது (கொடுப்பவர்) போல
நடிப்பது இன்று!
ஆவனப்படுத்த தானம் ஒன்றும்
செலவில்லை;
அது தர்மம்!
6. கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு
தமிழெண்களால் நிரப்புக. (மொ.வி)
ஞாயிறு | திங்கள் | செய்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |
௧ | ௨ | ௩ | ௪ | |||
௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧௦ | ௧௧ |
௧௨ | ௧௩ | ௧௪ | ௧௫ | ௧௬ | ௧௭ | ௧௮ |
௧௯ | ௨௦ | ௨௧ | ௨௨ | ௨௩ | ௨௪ | ௨௫ |
௨௬ | ௨௭ | ௨௮ | ௨௯ | ௩௦ | ௩௧ |
7. அகராதியில் காண்க. ((மொ.வி)
குணதரன் – நற்குணமுள்ளவன், முனிவன்,
செவ்வை – செம்மை, நேர்மை, மிகுதி, சிறந்த வழி, செப்பம், சரியான நிலை,
சிறப்பு
நகல் – படி, பிரதி (உண்மையின் பிரதி), மகிழ்ச்சி, நட்பு, ஏளனம்
பூட்கை – யானை, கொள்கை, வலிமை, மனவலிமை, சிங்கம், உறுதி
8. விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க. (மொ.வி)
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம், பிப்வரவரி 4.
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு ஊர்வலம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று நடத்தினார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.
சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு தொடர் அன்று. அது நாம் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை என்பதை வலியுறுத்தும் விதமாக “ ’சாலைப் பாதுகாப்பு’ –தொடர் அன்று அது தொடரும் வாழ்க்கை முறை” என்ற வாசகத்தை மாணவர்கள் முழங்கிச்சென்று பொதுமக்களிடம் விழிபுணர்வை ஏற்படுத்தினர்.
உயிகளைக் குடிக்கும் சாலை விபத்து நம் நாட்டில் சாலைவிபத்தால் மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் கணக்கானோர் உயிரிழக்கின்றனர். உலகில் ஆண்டுக்கு 1.25 மில்லியன் உயிரிழப்புகள் சாலை விபத்துகளால் ஏற்படுகிறது. |
போக்குவரத்துக் காவல்துறையினர் மாணவர்களுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி ஊர்வலத்தினை முடித்துவைத்தனர்.
9. கலைச்சொல் (நி.அ.த)
Humanism – மனிதநேயம்
Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
Cabinet – அமைச்சரவை
Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்