பத்தாம் வகுப்பு-படிவம் மற்றும் மொழிப்பயிற்சிகள்

படிவம் மற்றும் மொழிப்பயிற்சிகள்

1. நூலக உறுப்பினர் படிவம்

                         விழுப்புரம்                                                 மாவட்ட நூலக ஆணைக்குழு

           மைய/கிளை/ஊர்ப்புற நூலகம்     மயிலம்                              

                                                 உறுப்பினர் சேர்க்கை அட்டை

                அட்டை எண்:  ———–                                           உறுப்பினர் எண்: ————-

1. பெயர்                                             :  முகிலன்

2.  தந்தை பெயர்                               :  எழிலரசன்

3.  பிறந்த தேதி                                 :  16.10.2005

4.  வயது                                             :  14

5.  படிப்பு                                           :  பத்தாம் வகுப்பு

6.  தொலைப்பேசி எண்                   :  8778115678

7.  அஞ்சல் முகவரி                           :  27, பாரதித் தெரு, குன்னம்,

               (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)   வானூர், விழுப்புரம் மாவட்டம்,  

                                                                    604304.

நான் மயிலம் நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 500/- சந்தா தொகை ரூ  200/- ஆக மொத்தம் ரூ 700/- ரொக்கமாகச் செலுத்துகிறேன்.

நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம்  :           மயிலம்,                                                                      தங்கள் உண்மையுள்ள

நாள்    :           14/11/2019.                                                                           நிறைமதி.

திரு/ திருமதி/ செல்வி/ செல்வன் முகிலன் அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

                                                                                                            பிணைப்பாளர் கையொப்பம்

அலுவலக முத்திரை                                                              (பதவி மற்றும் அலுவலகம்)

2. பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புதல்

  1. மாணவ / மாணவியின் பெயர்                          :  தமிழரசன்
  2. பாலினம்                                                              :  ஆண்
  3. பிறந்த தேதி                                                        :  16/10/2005
  4. தேசிய இனம்                                                      :  இந்தியன்
  5. பெற்றோர்/ பாதுகாவலர் பெயர்                      :  எழிலரசன்
  6. வீட்டு முகவரி                                                     :  278, பாரதித் தெரு, குன்னம்,

                                                                           வானூர், விழுப்புரம்.

  • தொலைப்பேசி/அலைப்பேசி எண்                   :  8778115678
  • பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்       :  482
  • தாய்மொழி                                                          :  தமிழ்
  • பயின்ற மொழிகள்                                             :  தமிழ்,ஆங்கிலம்.
  • தட்டச்சு                                                                :  இளநிலை தட்டச்சு ( ஆங்கிலம்)
  • கணினி                                                                 :  சான்றிதழ் படிப்பு  

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன்.  தங்கள்    

நிறுவனத்தில்   கணிப்பொறி உதவியாளர்  பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

                                                                                                                                    இப்படிக்கு,

                                                                                                                        தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                    நிறைமதி.

2.   மேல்நிலை வகுப்பு – சேர்க்கை விண்ணப்பம்

சேர்க்கை எண் :                    தேதி :                       வகுப்பும் பிரிவும்:    

  1. மாணவ / மாணவியின் பெயர்                                :   தமிழரசன்
  2. பிறந்த தேதி                                                              :   16/10/2005
  3. தேசிய இனம்                                                                        :   இந்தியன்
  4. பெற்றோர்/ பாதுகாவலர் பெயர்                            :   எழிலரசன்
  5. வீட்டு முகவரி                                                           :   278, பாரதித் தெரு, குன்னம்,

                                                                                             வானூர், விழுப்புரம்.

  • இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு                      :   பத்தாம் வகுப்பு ( 10 )
  • பயின்ற மொழி                                                         :   தமிழ்

8. இறுதியாகப் படித்த பள்ளியின்                              : அரசு உயர்நிலைப் பள்ளி, 

                                                                முகவரி                    குன்னம்.

9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்             :   482

தேர்வின் பெயர்பதிவெண் – ஆண்டுபாடம்மதிப்பெண்கள்
  பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு             142841      மார்ச்- 2019தமிழ்98
ஆங்கிலம்94
கணக்கு90
அறிவியல்100
சமூக அறிவியல்100
மொத்தம்482

10. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?    :   ஆம், இணைக்கப்பட்டுள்ளது.

  1.  தாய்மொழி                                                               :   தமிழ்
  2.  சேர விரும்பும் பாடப்பிரிவும்

          பயிற்று மொழியும்                                               :   கணிதம் – உயிரியல், தமிழ்

                                                                                                     நிறைமதி. 

                                                                                             மாணவ/மாணவியின் கையெழுத்து

4. தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப்   

    படிவம்

  1. மாணவ / மாணவியின் பெயர்                :   தமிழரசன்
  2. பாலினம்                                                    :   ஆண்
  3. பிறந்த தேதி                                              :   16/10/2005, 14
  4. தேசிய இனம்                                            :   இந்தியன்
  5. பெற்றோர்/ பாதுகாவலர் பெயர்                        :   எழிலரசன்
  6. இரத்த வகை                                             :   O+
  7. உயரம் மற்றும் எடை                              :   152 செ.மீ, 50 கி.கி.
  8. வீட்டு முகவரி                                           :   278, பாரதித் தெரு, குன்னம்,

    வானூர், விழுப்புரம்.

  • தொலைப்பேசி/அலைப்பேசி எண்         :   8778115678

10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு      :   பத்தாம் வகுப்பு ( 10 )

11. பள்ளியின் முகவரி                                                :   அரசு உயர்நிலைப் பள்ளி, 

                                                                              குன்னம்.

12. சேர விரும்பும் விளையாட்டு                   :   பூப்பந்து விளையாட்டு

       சேர்க்கை எண் :                                                                              நிறைமதி                   

       இடம்  : குன்னம்,                                                                மாணவரின் கையொப்பம்              

       நாள்    : 15/11/2019.

                                                                        பெற்றோர் / பாதுகாவலரின் கையொப்பம்

பகுபத உறுப்பிலக்கணம்

வ. எண்சொல்பிரித்தல்பகுதிசந்திவிகாரம்இடை நிலைசாரியைவிகுதி
1பொறித்தபொறி+த்+த்+அபொறித்      –த்      –   அ- பெயரெச்ச விகுதி
2உரைத்தஉரை+த்+த்+அஉரைத்      –  அ – பெயரெச்ச விகுதி
3வருகவா(வரு)+கவாவா – வரு க – வியங்கோள் விகுதி
4மலைந்துமலை+த்(ந்)+த்+உமலைத்த் (ந்)த் உ-வினையெச்ச விகுதி
5பொழிந்தபொழி+த்(ந்)+த்+அபொழித்த் (ந்)த் அ – பெயரெச்ச விகுதி
6கிளர்ந்தகிளர்+ த்(ந்)+த்+அகிளர்த்த் (ந்)த் அ – பெயரெச்ச  விகுதி
7தணிந்ததுதணி+த்(ந்)+த்+அ+துதணித்த் (ந்)த்து – ஒன்றன்பால்     வினைமுற்று  விகுதி
8பதிந்துபதி+த்(ந்)+த்+உபதித்த் (ந்)த்  உ- வினையெச்ச விகுதி
9மயங்கியமயங்கு+இ(ன்)+ய்+அ மயங்குய் – உ.மெ. சஇ(ன்) அ – பெயரெச்ச விகுதி
10அறியேன்அறி+ய்+(ஆ)+ஏன்அறிய் – உ.மெ. ச(ஆ) எ.ம.இ ஏன் – தன்மை ஒருமை     வி.மு.விகுதி
11ஒலித்ததுஒலி+த்+த்+அ+துஒலித்த் து – ஒன்றன்பால்        வி.மு.வி
12அமர்ந்தனன்அமர் + த்(ந்) + த் + அன் + அன்அமர்த்த் (ந்)த்அன் அன் – படர்க்கை  ஆண்பால் வினைமுற்று       விகுதி

பயிற்சிக்காக…..  தேர்வில் எழுதும் முறை

அமர்ந்தனன்   – அமர் + த்(ந்) + த் + அன் + அன்    

அமர்                – பகுதி

         த்                     – சந்தி

த்(ந்)                – த், ந் தாக திரிந்தது (விகாரப்பட்டது)

         த்                     – இறந்தகால இடைநிலை

         அன்                – சாரியை

         அன்                – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

சொற்பொருள்

சொல் பொருள் சொல்பொருள் சொல்பொருள்
துய்பது கற்பது, தருதல் மேவலால்பொருந்துதல், பெறுதல் அசைஇஇளைப்பாறி
மயலுறுத்து மயங்கச்செய் ப்ராண ரஸம்உயிர்வளி அல்கிதங்கி
லயத்துடன் சீராக அருகுறஅருகில் கடும்புசுற்றம்
நரலும் ஒலிக்கும் ஆரிஅருமை படுகர்பள்ளம்
வயிரியம் கூத்தர் வேவைவெந்தது இறடிதினை
பொம்மல் சோறு சுவடினும்சுட்டாலும் மாளாததீராத
மாயம் விளையாட்டு விசும்புவானம் ஊழியுகம்
சொல்பொருள் சொல்பொருள் சொல்பொருள்
ஊழ்முறை தண்பெயல்குளிர்ந்த மழை ஆர்தருபுவெள்ளத்தில் மூழ்கி கிடந்த
பீடுசிறப்பு ஈண்டிசெறிந்து திரண்டு கேள்வியினான்நூல் வல்லான்
கேண்மையினான்நட்பினன் தார்மாலை முடிதலை
முனிவுசினம் அகத்து உவகைமனமகிழ்ச்சி தமர்உறவினர்
நீபவனம்கடம்பவனம் மீனவர்பாண்டிய மன்னன் கவரிசாமரை
நுவன்றசொல்லிய என்னைஅசைச்சொல் பண்டிவயிறு
அசும்பியஒலி வீசுகிற முச்சிதலையுச்சிக் கொண்டை சுண்ணம்நறுமணப்பொடி
காடுகர்நெய்பவர் சாலியர்நெய்பவர் தூசுபட்டு
துகிர்பவளம் வெறுக்கைசெல்வம் நொடைவிலை
பாசவர்வெற்றிலை விற்பவர் ஓசுநர்எண்ணெய் விற்பவர் மண்ணுள் வினைஞர்ஓவியர்
மண்ணீட்டாளர்சிற்பி கிழிதுணி சேக்கைபடுக்கை
யாக்கைஉடல் பிணித்துகட்டி வாய்த்தபயனுள்ள
இளங்கூழ்இளம்பயிர் தயங்கிஅசைந்து காய்ந்தேன்வருந்தினேன்
கொம்புகிளை புழைதுளை கான்காடு
  தேம்பவாட அசும்புநிலம் உய்முறைவாழும் வழி
ஓர்ந்துநினைத்து கடிந்துவிலக்கி உவமணிமணமலர்
படலைமாலை துணர்மலர்கள் முகமன்விருந்தோம்பல் சொல்

1. விடைகேற்ற வினாக்கள் அமைக்க

  1. பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.

     பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று

     எது ?

  • நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தபட்டு வரும் கலையே தெருக்கூத்து.

     நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தபட்டு வரும் கலை எது ?

  • கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது

      கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது ?

  • பிள்ளை தமிழ் இரண்டு வகைப்படும்.

      பிள்ளை தமிழ் எத்தனை வகைப்படும்?

  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

கம்பராமாயணப் பாடல்கள் எந்தநயம் மிக்கவை?

  • 1948 ஆகஸ்டு எட்டாம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத் தக்கப் புனித நாளாகும்.

      இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத் தக்கப் புனிதநாள் எது?

  • இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் மார்ஷல் ஏ நேசமணி ஆவார்.

     இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் யார் ?

  • இராஜாஜி அவர்கள் தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.

     யார் தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தார்? (அல்லது)

     தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தவர் யார் ?

  • உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றபட்டனர்.

      யார் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றபட்டனர்?

10.  மெய்க்கீர்த்தி கல் இலக்கியமாய் அமைந்தது.

 எவை கல் இலக்கியமாய் அமைந்தது?

11முதலாம் இராசராசன் காலம் தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.     

 யாருடைய காலம் தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன?

12.  இளங்கோவடிகள் சேர மரபைச்சார்ந்தவர்.

இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர்?

(மனிதர்             –        ஒருமை – யார்? யாரை?, யாருக்கு? யாரால்?

                                   பன்மை – யாவர்? 

வலங்கு, பொருள் –      ஒருமை – எது? எதை? எதனை? எந்த?

பன்மை – எவை? யாவை? எவற்றை?

இடம் – எங்கு, காலம் – எப்போது, எண்ணிக்கை – எத்தனை, அளவு – எவ்வளவு,சுட்டு – எ)

வேற்றுமைத் தொகைவினைத்தொகைபண்புத்தொகைஎண்ணும்மைஉரிச்சொற்றொடர்தொழிற்பெயர்
கைத்தொழுது (3)உறுதுயர்மூதூர்காடனுக்கும் கபிலனக்கும்தடக்கைவியத்தல்
மெய்முறைவளர்வானம்நன்மொழிகுண்டலமும் குழைக்காதும் நோக்கல்
 காய்மணிசெந்தீவண்ணமும் சுண்ணமும் எழுதுதல்
 உய்முறை   உரைத்தல்
 செய்முறை   செப்பல்
 பயில் தொழில்   இருத்தல்
     வழங்கல்

2. இலக்கணக்குறிப்பு

சொல்லிசை அளபெடைசெய்யுளிசை அளபெடைஅடுக்குத்தொடர்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்வினையாலணையும்  பெயர்வியங்கோள் வினைமுற்று
அசைஇபரூஉக்ஊழ் ஊழ்வாராகேள்வியினான்ஆடுக
கெழீஇகுரூஉக்கன்    

காக்கென்று  – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

கணீர்           – கண்ணீர் என்பதன் இடைக்குறை

கைமுறை      – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

  1. உரைப்பத்தி வினாவிடை   ( பயிற்சிக்காக)
  2. தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண  உணவும் இருக்க

இடமும் கொடுத்து, அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.

அ. விருந்தினர் என்போர் யாவர்?

       முன்பின் அறியாத புதியவர்கள்.

ஆ. விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?

       விருந்தே புதுமை.

இ. இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான  தலைப்பு ஒன்று தருக.

                  விருந்து.

2.  தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது   

        வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப்   

போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு,

பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத்

தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்

மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.

அ) போரிலும் அறநெறிகளைப் பின்பற்றியவர் யார்?

       தமிழர்.

ஆ) போர் அறம் என்பது யாது?

      போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சீறார், முதியோர்       

      ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.

இ) இவ்வுரைப் பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

                    போர் அறம்.

 பாநயம் பாராட்டுக. 

1.  தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே!

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே!

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே!

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே!

          தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!

  • க. நமச்சிவாயர்.
                         பொருளடக்கம்
முன்னுரைதிரண்டகருத்து,        மையக்கருத்துதொடைநயங்கள்சொல்நயம்,              அணிநயம்சந்த நயம்                சுவை நயம்முடிவுரை

முன்னுரை

                     ”ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

                  உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே” – முதலிய பொருள்சுவை மிக்க    வரிகளை  உடைய இப்பாடலின் நயத்தினை இப்போது காண்போம்.

திரண்ட கருத்து                             செந்தமிழ் மொழியே!

தேனைக்காட்டிலும் இனிமையான செந்தமிழ் மொழியே!, தென்னாடாகிய தமிழ்நாடு முழுதும் தெரியுமாறு திகழும் தென்மொழியே!,  என் உடலைக் காட்டிலும் ஒளிர்கின்ற ஒளிபொருந்திய சிறப்புமிகு தமிழே!, நல்லுணர்வால் உணரப்படும் மொழியே!, வானைவிட ஓங்கிய வள்ளல் தன்மை பொருந்திய மொழியே!, மாந்தருக்கு இரு கண்களாகாக் கருதப்படும் மொழியே! என்றும் தனித்து நின்று அரசாலும் தனித்தமிழ் மொழியே! உன்னை வாழ்த்துகிறேன்.

மையக்கருத்து

          செந்தமிழ் மொழியின் சிறப்புகளை கா. நமச்சிவாயர் அழகாக எடுத்துரைக்கிறார்.

மோனைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும்.

அடி மோனை                சீர்மோனை
                                  –தேனினும் – தென்னாடு- திகழுந்தென்ளிர்வுறும்- ண்டமிழ் – ளிர்தமிழ்வானினும்- ண்டமிழ் – யங்குநன்தானனி- னித்தமிழ்

எதுகைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.

               அடி எதுகை               சீர் எதுகை
தேனினும்      ஊனினும்     வானினும்   தானிர்வினுக் – குர்வதாய்

இயைபுத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இறுதி எழுத்து அல்லது சொல்  ஒன்றி வருவது இயைபுத்தொடை   

   ஆகும்.

              அடி இயைபு             சீர் இயைபு
மொழியே என்னும் சொல்      அடியியைபாக வந்துள்ளது.மொழியே என்னும் சொல்    சீரியைபாகவும் வந்துள்ளது.

சொல்நயம்

         ஆசிரியர் இப்பாடலை எளிய, இனிய, கலைச்சொற்களைக் கொண்டு சொல்நயம் தோன்ற  

   எழுதியுள்ளார்.

அணி நயம்

         `ஆசிரியர் இப்பாடலை இயல்புநவிற்சி அணியால் அழகுற எழுதியுள்ளார்.

  சந்த நயம்

         பாவின் ஓசையும் தாளமுமே சந்தமாகும். அவ்வகையில் ஆசிரியர் இப்பாடலை     

   அகவலோசைத்  தோன்றும் படி சந்த நயதோடு எழுதியுள்ளார்.

சுவை நயம்

         ஆசிரியர் இப்பாடலைப் பெருமிதசுவைத் தோன்ற எழுதியுள்ளார்.

முடிவுரை

         ஆசிரியர் இப்பாடலை மோனை நயம், எதுகை நயம், இயைபு நயம், அணிநயம், சந்த நயம்,

   சுவை நயம் முதலிய நயங்கள் தோன்ற அழகுற பாடியுள்ளார்.

2.           நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறிபடைத்தோம்;

உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கங்கணும்

ஓட்டி மகிழ்வோம்;

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்வண் டு

பாடுவதும் வியப்போ?

திரண்ட கருத்து

இயற்கை

நிலவு, விண்மீன், காற்று ஆகியவற்றை ஒரு நேர்க்கோட்டில் வைத்து, அதன் அமுத அழகைக் குடித்ததுபோல கோலவெறி படைத்தோம். அங்கும் இங்கும் எங்குமாக உலவும் மனமென்னும் பறவையினை எங்கும் ஓட்டி மகிழ்வோம். இனிய பலாவின் சுளைகள் நிறைத்து வைக்கப்பட்ட வண்டியில் அதன் சுவையைப் ஒரு வண்டு பாடுவது வியப்போ?

மோனை நயம்

செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.

அடி மோனை                  சீர் மோனை

நிலாவையும்                         குலாவும்

நேர்ப்பட                               குழம்பைக்

குலாவும்                                குடித்தொரு

கோல                                   

எதுகை நயம்

செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.

அடி எதுகை                    சீர் எதுகை

நிலாவையும்                         வாத்து

குலாவும்                                மீனையும்

லாவும்                               

லாவின்      

இயைபு நயம்

செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு எனப்படும்.

அடி இயைபு                             சீர் இயைபு

படைத்தோம்                    நிலாவையும்

மகிழ்ந்வோம்                             மீனையும்

                                                      காற்றையும்

அணி நயம்

இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

3. ”கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்”

  • காளமேகப் புலவர்

முன்னுரை

      காளமேகப் புலவர் இரட்டுற மொழிவதில் வல்லவர். அவர் பாடிய இப்பாடலின் நயத்தினைக்  காண்போம்.

திரண்ட கருத்து

                                      காலந்தாழ்ந்த விருந்து

எப்போதும் தன் அலைகளால் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த  நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் (நாகைப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரம் என்ற ஊரில்)  சூரியன் மறைகின்ற மாலை நேரத்தில் அரிசி வரும். அந்த அரிசியைக் குத்தி உலையிலிடும்போது ஊரே உறங்கியிருக்கும். ஓர் அகப்பை அன்னத்தை இலையிலிட்டு உண்ண முற்படும்போது கிழக்கு வானில் விடியலை உணர்த்தும் வெள்ளி நட்சத்திரம் அழகாய்க் காட்சியளிக்கும்.

மையக்கருத்து

கடல் சூழ்ந்த  நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் வந்தவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்கள். அங்கு உணவுக்காகக் காத்திருந்து உணவு தயாராவதற்கு நேரமானதால் பசியால் வாடிய காளமேகப்புலவர், அச்சூழலை ஏளனம் செய்து பாடியது இப்பாடல்.  

மோனை

         அடிதோறும் சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும்.

அடி மோனை                சீர்மோனை
                                  –த்துகடல் – காத்தான்தன்த்தமிக்கும் – ரிசிவரும்லையிலிட – ரடங்கும்

எதுகைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.

               அடி எதுகை               சீர் எதுகை
த்துகடல் – அத்தமிக்கும்உலையிலிட – இலையிலிடகத்துகடல் – சத்திரத்தில் அத்தமிக்கும் – குத்தி

இயைபுத் தொடை

      அடிதோறும் சீர்தோறும் இறுதி எழுத்து அல்லது சொல்  ஒன்றி வருவது இயைபுத்தொடை ஆகும்.

              அடி இயைபு             சீர் இயைபு
                       –அத்தமிக்கும்  –  அரிசிவரும் (உம்)

சொல்நயம்

      ஆசிரியர் இப்பாடலை எளிய, இனிய, கலைச்சொற்களைக் கொண்டு சொல்நயம் தோன்ற எழுதியுள்ளார்.

அணி நயம்

         `ஆசிரியர் இப்பாடலை இயல்புநவிற்சி அணியால் அழகுற எழுதியுள்ளார்.

சந்த நயம்

      பாவின் ஓசையும் தாளமுமே சந்தமாகும். அவ்வகையில் ஆசிரியர் இப்பாடலைச் செப்பலோசைத் தோன்றும்படி சந்த நயத்தோடு எழுதியுள்ளார்.

சுவை நயம்

         ஆசிரியர் இப்பாடலை அவலச்சுவைத் தோன்ற எழுதியுள்ளார்.

முடிவுரை

      ஆசிரியர் இப்பாடலை மோனை நயம், எதுகை நயம், இயைபு நயம், அணிநயம், சந்த நயம், சுவை நயம் முதலிய நயங்கள் தோன்ற அழகுற பாடியுள்ளார்.

4.  கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்வகை கிடைத்த

         குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

         உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய்பூங் காற்றே

         மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

         ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

  • வள்ளலார்.

முன்னுரை

                ” ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

                   உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே  ” – முதலிய பொருள் சுவை மிக்க 

         வரிகளை உடைய இப்பாடலின் நயத்தினை இப்போது காண்போம்.

திரண்ட கருத்து                            

அருள் விளக்க மாலை

கோடையின் வெயிலில் (உலக வாழ்வில்) ஒதுங்க (இளைப்பாற) நிழல் கிடைக்காதா என்று மனம் ஏங்கும்போது கண்களுக்குக் குளிர்மரமாய் விளங்குபவனே!, அம்மரமே இலைகளுடன் வளமாய் அமைந்து தரும் குளிர்நிழலாய் அமைந்தவனே! , அம்மரத்தின் இனிப்பான  கனியாகவும்  விளங்குபவனே! குளிரும் நிழலும் கனியும் உண்டவனுக்கு மேலும் இனிமை சேர்க்க  ஓடையில் ஓடும் இனிமையான தண்ணீரே! உள்ளத்திற்கு மணம் வீசும் மலரே! வாழ்வில் வீசும் மெல்லிய பூங்காற்றே!  சிறுவயதில் என்னை மணந்த மணவாளனே!  நான் அணிவிக்கும் இந்த பாமாலையை ஏற்று அருள்வாயாக!

மையக்கருத்து

      இந்த பிறவியில் கிடந்து உழன்றுகொண்டிருக்கும் நமக்குக்  கிடைத்த குளிர்தரும் மரமாகவும் அம்மரத்தின் நிழலாகவும் கனியாகவும் விளங்கி, வாழ்க்கைக்குத் தேவையான நீராகவும்  பூவாகவும்  மணமாகவும் விளங்குபவன் இறைவன் என்று கூறுகிறார்.

மோனைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும்.

 அடி மோனை                                 சீர்மோனை
                                                                                                                                                             –கோடையிலே- கொள்ளும்வகை- கிடைத்த – குளிர்தருவே – கனிஊறுகின்றஊறுகின்ற- உகந்ததண்ணீர்மேடையிலே – மெல்லிய்பூங் – மென்காற்றில்ஆடையிலே- ஆடுகின்ற –அரசேஎன் -அலங்கல்அணிந்

எதுகைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.

               அடி எதுகை               சீர் எதுகை
கோடையிலே ஓடையிலே மேடையிலே ஆடையிலேஇளைப்பாறிக் – கொள்ளும்வகை –        குளிர்தருவே  

இயைபுத் தொடை

      அடிதோறும் சீர்தோறும் இறுதி எழுத்து அல்லது சொல்  ஒன்றி வருவது இயைபுத்தொடை ஆகும்.

              அடி இயைபு             சீர் இயைபு
கனியே (ஏ)    மலரே(ஏ)    பயனே(ஏ)    தருளே(ஏ)கோடையிலே – குளிர்தருவே- தருநிழலே- கனியேஓடையிலே – ணீரே- மலரேமேடையிலே – காற்றே – விளைசுகமே – பயனே ஆடையிலே – தருளே

சொல்நயம்

      ஆசிரியர் இப்பாடலை எளிய, இனிய, கலைச்சொற்களைக் கொண்டு சொல்நயம் தோன்ற    எழுதியுள்ளார்.

அணி நயம்

         `ஆசிரியர் இப்பாடலை உருவக அணித்தோன்ற அழகுற எழுதியுள்ளார்.

சந்த நயம்

      பாவின் ஓசையும் தாளமுமே சந்தமாகும். அவ்வகையில் ஆசிரியர் இப்பாடலை அகவலோசைத் தோன்றும் படி சந்தநயதோடு எழுதியுள்ளார்.

சுவை நயம்

         ஆசிரியர் இப்பாடலை உவகைச்சுவைத் தோன்ற அழகுற எழுதியுள்ளார்.

முடிவுரை

         வள்ளலார் இப்பாடலைப் பல்வேறு  நயமும் தோன்றும்படி அழகுறப் பாடியுள்ளார்.

5. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருபட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

                             – கண்ணதாசன்

முன்னுரை

            ’கவியரசு’, ’வணங்காமுடி’  முதலிய சிறப்புப்பெயர்களையுடைய, ‘சேரமான் காதலி’, ’அர்த்தமுள்ள இந்துமதம்’, ’இயேசு காவியம்’ முதலிய நூலகளை இயற்றிய, திரைப்படப் பாடகரும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பாளருமான கண்ணதாசன் எழுதிய இப்பாடலின் நயத்தினை இப்போது காண்போம்!

திரண்ட கருத்து

                                                       கவிஞன் ஓர் காலக்கணிதம்

அறிவிலும் மனதிலும் தோன்றுகின்ற சமுதாயச் சிக்கல்கள், மக்களின் எதிர்ப்பார்ப்புகள், தேவைகள், மக்களிடம் காணப்படுகின்ற மூடநம்பிக்கைகள்,  தவறான அரசியல் செயல்பாடுகள் முதலிய பாடுபொருள்களைக் கவிதையாகவும் பாடலாகவும் படைப்பதாலும் எக்காலத்தையும் எடுத்து இயம்புவதாலும் கவிஞனாகிய நான் ஓர் காலக்கணிதம்.

நான் படைக்கும் படைப்புகள் பொன்னைவிட விலை மிகுந்தது. இவ்வுலகில் ஆக்கல், அழித்தல், அளித்தல் முதலிய செயல்களைச் செய்வதாலும் சரி என்பதை எடுத்துரைப்பதாலும் தவறு என்பதை எதிர்ப்பதாலும் நானோர் புவியில் புகழுடைய தெய்வம்.

மையக்கருத்து

     கவிஞன் ஆக்கல், அழித்தல், அளித்தல் ஆகிய செயல்களைச் செய்வதாலும் எக்காலத்துக்கும் தேவையான கருத்துகளைக் கூறுவதாலும் கடவுளுக்கு நிகரானவன் ஆவான்.

மோனைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும்.

 அடி மோனை                                 சீர்மோனை
கவிஞன் – கருப்பொருள்புவியில் – பொன்னினும்இவைசரி – இவைதவஆக்கல் – அவனும்                                                                                                                                            கவிஞன் – கணிதம்புவியில் – புகழுடைபொன்னினும் – பொருளென்இவைசரி – இயம்புவதென்அளித்தல் – அழித்தல்அவனும் – அறிந்தவை

எதுகைத் தொடை

         அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.

               அடி எதுகை               சீர் எதுகை
கவிஞன் – புவியில்இவைசரி – இவைதவகருப்படு – பொருளை – உருப்படவிலைமிகு – செல்வம்அறிந்தவை – அறிக

இயைபுத் தொடை

      அடிதோறும் சீர்தோறும் இறுதி எழுத்து அல்லது சொல்  ஒன்றி வருவது இயைபுத்தொடை ஆகும்.

              அடி இயைபு             சீர் இயைபு
கணிதம் – தெய்வம் – செல்வம்  (அம்)ஆக்கல் – அளித்தல்  (அல்)

முரண் தொடை

      செய்யுளில் எதிரெதிர் பொருளைத் தரக்கூடிய   சொல்லோ சொற்றொடரோ வருவது முரண்தொடை ஆகும்.

              அடி முரண்             சீர் முரண்
சரி – தவறுஆக்கல் – அழித்தல் 

சொல்நயம்

      ஆசிரியர் இப்பாடலை எளிய, இனிய, கலைச்சொற்களைக் கொண்டு சொல்நயம் தோன்ற எழுதியுள்ளார்.

அணி நயம்

         `ஆசிரியர் இப்பாடலை இயல்பு நவிற்சி அணித்தோன்ற அழகுற எழுதியுள்ளார்.

சந்த நயம்

      பாவின் ஓசையும் தாளமுமே சந்தமாகும். அவ்வகையில் ஆசிரியர் இப்பாடலைத் தாளத்தோடு பாடும் வகையில் எழுதியுள்ளார்.

சுவை நயம்

         ஆசிரியர் இப்பாடலைப்  பெருமிதச்சுவைத் தோன்றும்படி  அழகுற எழுதியுள்ளார்.

முடிவுரை

         கவிஞர் கண்ணதாசன்,   இப்பாடலைப் பல்வேறு  நயமும் தோன்றும்படி அழகுறப் பாடியுள்ளார்.

Leave a Comment