பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 துணைத்தேர்வுமுடிவுகள், நவ.9-ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தேர்வெழுதியோர், தங்களது தேர்வு முடிவை மதிப்பெண்பட்டியலாகவே நவ.9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் Www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் இதே வழிமுறையைப் பின்பற்றலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நவ.11, 12 ஆகிய இரண்டு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாளின் நகல் பெற ரூ.275 (பாடம் ஒவ்வொன்றுக்கும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செ லுத்த வேண்டும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலை இணையதனம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment