புதிய அளவீடு முறையால் மின் கட்டணம் உயருமா? தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்…

மத்திய அரசின் திருத்தங்களால் தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மின் கட்டண வசூலிப்பு முறை வீட்டு நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு மின்வாரியம் விளக்கமளித்துள்ளது

மின் கட்டண வசூலிப்பு குறித்த விதிகளில் மத்திய அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மாலை நேரங்களில் பீக் அவர்ஸ்(Peak Hours)எனப்படும் உச்ச காலங்களில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தவும், பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

மத்திய அரசின் அறிவிப்பு குறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஒழுங்குமுறை ஆணையத்திற்குத்தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய விதிகளின் படி பீக் அவர்ஸ் எனப்படும், உச்ச நேர கட்டணம் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், மத்திய அரசின் திருத்தங்களால் தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின்னர் அபராத தொகை வசூல் செய்வது குறித்து, விதிகள் வகுக்கப்படாததால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.

Leave a Comment