விட்டமின் டி குறைபாட்டை உணர்த்தும் இந்த 5 அறிகுறிகளில் அலட்சியம் காட்டாதீங்க…

வைட்டமின் டி குறைந்தால், நம் உடலுக்கு என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் சில..

வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையும் ஒரு விட்டமின் அகும். இது கால்சிஃபெரால் என்றும் அழைக்கப்படும். நம் உடலின் பல பாகங்கள் நன்றாக செயல்படுவதற்கு வைட்டமின் டி-யின் பங்கு மிகவும் முக்கியம்.

நம் உடலுக்கு மிகவும் தேவையான இரண்டு மினரல்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். இவற்றை நம் உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. மேலும் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கவும், தொற்று ஏற்படாமலும், வீக்கத்தை குறைக்கவும் வைட்டமின் டி உதவுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் எலும்புகளை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்திருப்பதே வைட்டமின் டி-யின் முக்கியமான பங்கு. இப்படி பல முக்கியமான பங்கை ஆற்றிவரும் வைட்டமின் டி குறைந்தால், நம் உடலுக்கு என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்:

தூக்கமின்மை :

கால்சிஃபெரால் – வைட்டமின் டி – குறைவாக இருந்தால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். இது எப்படி ஏற்படுகிறது என்றால், வைட்டமின் டி குறைவதன் காரணமாக மன அழுத்த ஹார்மோன் அல்லது கார்டிசோல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிகமான சோர்வு ஏற்படுகிறது. இதனால் நம் தூக்கம் பாதிக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் நாம் தூங்கும் நேரம் குறைகிறது, இரவில் துங்கும் போது அடிக்கடி விழித்துக் கொள்கிறோம்.

எலும்புகளில் வலி :

வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் மிகத் தீவிரமான பாதிப்பு என்றால் இதையே கூற வேண்டும். வைட்டமின் டி குறைவாக இருப்பதால் நம் எலும்புகளில் அடிக்கடி வலியும் ஏற்படும். தசைகள் பலவீனமாகும். எலும்பின் அடர்த்தி குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் வலுவில்லாத காரணத்தால் அடிக்கடி கிழே விழுவீர்கள். இதனால் காயம் ஏற்படும்.

அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்கள் :

வைட்டமின் டி குறைவாக இருந்தால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். நமது நோய் எதிர்ப்பு சக்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் விடமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு ஆஸ்துமா, சளி, வைரஸ் காய்ச்சல் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மன அழுத்தம் :

ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமான காரணம் வைட்டமின் டி குறைபாடு. வைட்டமின் டி மற்றும் மனநலம் தொடர்பாக குறைவான விழிப்புணர்வே நம்மிடம் இருக்கிறது. ஆகையால் தான் இவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பு குறித்து பலருக்கும் தெரிவதில்லை. மன அழுத்த அறிகுறிகளுக்கும் வைட்டமின் டி குறைபாட்டிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிகின்றன.

முடி உதிர்வு :

முடி வளர்ச்சிக்கும், அதன் அடர்த்திக்கும் விட்டமின் டி முக்கிய காரணமாக இருக்கிறது. உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். அதிகப்படியாக முடி உதிரும். அதேப்போல் புதிதாக எந்த முடியும் வளராது. ஆகையால் உடனே வைட்டமின் டி குறைபாட்டை போக்கும் மருந்துகளை சாப்பிடுங்கள்.

இதய நோய் :

நம் உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தீவிரமான ஆஸ்துமா நோய் வருவதற்கும், புற்றுநோய் வருவதற்கும் இந்த குறைபாடு காரணமாக இருக்கும். சில சமயங்களில் மனநலக் குறைபாடும் ஏற்படக் கூடும்.

கவனமாக இருக்க வேண்டியவர்கள் :

குடல் அழற்சி நோய் அல்லது குடலில் புண் இருப்பவர்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும். அதற்கு காரணம், வைட்டமின்களை குடலால் முழுமையாக கிரகித்துக் கொள்ள முடியாது. அதேப்போல் உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் வைட்டமின் டி குறைவாக இருக்கும். இரைப்பை அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கும் குறைவாக இருக்கும். ஆகவே இவர்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வைட்டமின் டி குறைபாட்டால் வரக் கூடிய நோய்கள் இவர்களை எளிதாக தாக்கும்

Leave a Comment