10-தமிழ்-புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்-மதிப்பீட்டு செயல்பாடு 4,5,6-வினா விடை

4. பழமொழிகள் , மரபுத்தொடர்கள், செய்யுள்  அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்

1. பழமொழிக்கான பொருள் எழுதுக.                            

     1. ஊருடன் ஒத்து வாழ்.

     தான் வாழும் சமூக மக்களுடனும் அவர்களுடைய பழக்க வழக்கங்களுடனும் இணக்கமாக வாழ்தல்  வேண்டும்

2. பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

     அ) பதறாத காரியம் சிதறாது.

     பதறாக காரியம் சிதறாது என்பதற்கேற்ப எழிலன் முதல் முறை அரசுத் தேர்வு எழுதியபோதிலும் பதற்றமில்லாமல் தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்றான்.

     ஆ) ஒரு கை தட்டினால் ஓசை வராது.

    கொரோனாவை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

3. பழமொழியை நிறைவு செய்க.

   அ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து

   ஆ) சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

   இ) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

4. மரபுத்தொடர்களுக்கான பொருளை எழுதுக.

அ) எட்டாக்கனி – அரிதான செயல்

ஆ) உடும்புப் பிடி – மாறாப்பற்று

இ) கிணற்றுத் தவளை – உலகியல் அறிவின்மை

5. மரபுத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

     அ) ஆகாயத்தாமரை – கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது ஆகாயத்தாமரை போன்றுள்ளது.

     ஆ) முதலைக் கண்ணீர் – கயல்விழி தன் தோழி அடித்துவிட்டதாக முதலைக் கண்ணீர் வடித்தாள்.

6. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

     அ) வீட்டின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

        வீட்டின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

        ஆ) கயல் பானைசெய்யக் கற்றுக்கொண்டாள்.

         கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்

7. செய்யுள் தொடர்கள் உணர்த்தும் பொருளை எழுதுக.

     அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம்-18).

           உணவைக் கொடுத்தவர் உயிர் கொடுத்தவருக்குச் சமம்

     ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம்-189).

            அனைவரும் உண்பது நாழி அளவு , உடுப்பது மேலாடை அரையாடை என இரண்டாகும்.

          இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்- 192).

           அனைவருக்கும் உலகம் முழுதும் சொந்த ஊராகும். இவ்வுலக மக்கள் அனைவரும் உறவினர் ஆவர்.

5. எச்சம் 

1. ‘எழுதிய கவிதை’ என்ற சொல், நிகழ்காலம், எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்  என்பதை எழுதுக.  
எழுதிய கவிதை இறந்தகாலப் பெயரெச்சம்
எழுதுகின்ற கவிதைநிகழ்காலப் பெயரெச்சம் 
எழுதும் கவிதைஎதிர்காலப் பெயரெச்சம் 
2. பொருத்துக.
வந்து வினையெச்சம்
எழுதிய பெயரெச்சம் 
எடுத்தனன் கொடுத்தான் முற்றெச்சம்
வேகமாக குறிப்புப் பெயரெச்சம் 
3. தேர்ந்தெடுத்து எழுதுக. 

(எழுதிய புத்தகம், எழுதுகின்ற, படித்து வந்தான், பேசி, விரைந்து வந்தான், பெரிய  புத்தகம்.)

   அ) பெயரெச்சம் – எழுதுகின்ற.

   ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்  –  எழுதிய புத்தகம்.

   இ) குறிப்புப் பெயரெச்சம்  – பெரிய  புத்தகம்.

   ஈ) வினையெச்சம்  – பேசி.

   உ) தெரிநிலை வினையெச்சம் –  படித்து வந்தான்.

   ஊ) குறிப்பு வினையெச்சம் – விரைந்து வந்தான்.

4. தொடரில் விடுபட்ட எச்சங்களை எழுதுக. 

   அ) அகிலன் நல்ல  மாணவன். 

   ஆ) குதிரை வேகமாக ஓடியது. 

   இ) கமலா எழுதிய கட்டுரை. 

   ஈ) அருண் நிறைய பணம் வைத்திருந்தான். 

   உ) அகிலா கல்லூரியில்  படித்து வந்தாள். 

5. கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள எச்சச் சொற்கள் மற்றும் முற்றுச்சொற்களை வகைப்படுத்தி எழுதுக.

பயிற்சி கட்டக புத்தகத்தில் உரிய பத்தி ஏதும் தரப்படவில்லை

6. பிறமொழிச் சொற்களுக்கு நிகரான  தமிழ்ச்சொற்களை எழுதுதல்

1. நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் பயன்படுத்தும் சொற்களைப்  பட்டியலிட்டு, அவற்றில்  உள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான  தமிழ்ச்சொற்களை  எழுதுக.
சொற்பட்டியல் பிறமொழிச் சொற்கள்நிகரான தமிழ்ச்சொற்கள்
பிளாக்  போர்டுBLACK BOARDகரும்பலகை
பேனாPENதூவல்
பென்சில்PENCILகரிக்கோல்
நோட்டுNOTEகுறிப்பேடு
2. உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச்   சொற்களைத் தமிழாக்கம் செய்க. 

அருண்  : வணக்கம் நண்பா ! 

நளன் : வணக்கம் நண்பா !  ஆளே அடையாளம் தெரியவில்லையே ! 

அருண் : ஆமாம் ! பத்தாண்டுகள் ஆகிவிட்டதல்லவா ? சரி நீ இப்பொழுது  வெளிநாட்டில் பணிபுரிகிறாயா ? 

நளன் : ஆமாம். நான் பன்னாட்டு நிறுவனத்தில் செயல்திட்ட மேலாளராக உள்ளேன்.     நீ? 

அருண் : நான் மயிலம் தமிழ் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்

நளன் : அதே  கல்லூரியில் தான் எனது தம்பியும் முதலாம் ஆண்டு  படிக்கிறான்.

அருண் : சரி நண்பா ! உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, சென்று வருகிறேன்.

 நளன் : நானும் சென்று வருகிறேன்.

Leave a Comment