10-தமிழ்-புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்-மதிப்பீட்டு செயல்பாடு 2-வினா விடை

செயல்பாடு 2 – வினாச்சொற்களை அறிந்து  வினாக்களை உருவாக்குதல் 

ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள ஒருவர், மற்றவரிடம் வினவுவது வினா எனப்படும். 

சொற்களில்/தொடரில், வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். 

விளக்கம் : 

எ, யா, ஆ, ஓ, ஏ என்பவை வினா எழுத்துகள் என அறிவோம். 

பின்வரும் அட்டவணையைப் பாருங்கள். வினா எழுத்துகள் சொற்களின் எந்தெந்த இடங்களில் வந்து வினாப் பொருளைத் தருகின்றன என்பதை அறிந்து  கொள்ளுங்கள். 

எ யா ஆ ஓ 
எந்த, எது,  எப்படி, எங்கே,  எதனால்  எதற்காக  எதில், 
 எப்போது
யார்,  யாவை,  யாது,  யாவர், 
யாரால்,  
யாருடைய
அவனா,  அவளா,  
அதுவா,  
அதிலா,  
அப்படியா
அவனோ,  அவளோ அவரோ அதுவோ 
அவையோ
ஏன், ஏது,  யானே,  
அவனே,  
அவரே

இப்போது இவற்றைப் போன்ற வினாச்சொற்களை நாம் எங்கெல்லாம்  பயன்படுத்துகிறோம் என்பதையும் வினாக்கள் உருவாவதற்குரிய காரணங்களையும்  பார்க்கலாம்.  

 மாறன் தன்நண்பனிடம் “நாளை தேர்வு உண்டா?”என்று கேட்டான். 

இந்த வினாவுக்கான காரணம் என்ன தெரியுமா? நாளை தேர்வு உண்டு எனில்  இன்று பாடங்களைப் படிக்க வேண்டும், தேர்வுக்கு வேண்டிய பொருள்களை எடுத்து  வைக்க வேண்டும்; இல்லையெனில் எதுவும் செய்யவேண்டாம் என்பன போன்றவையாக  இருக்கலாம். அல்லது இன்று மழை பெய்வதால் நாளை தேர்வு உண்டா என்ற ஐயம்  காரணமாகவும் வினா எழுப்பி இருக்கலாம். எந்தெந்தக் காரண காரியங்களுக்காக  வினாக்கள் கேட்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க. 

(எ.கா.) ஆய்வு என்பது அறிவின்வெளிப்பாடு.

வினா: அறிவின்வெளிப்பாடு எது? 

1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா: எங்கு ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன ?

2. உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று  இல்லை. 

வினா: எதனை பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று  இல்லை ?

3. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக  மாற்றப்பட்டுள்ளன. 

வினா: யார் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக  மாற்றப்பட்டுள்ளன ?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா: உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார் ? 

2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக. 

 பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில்  அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத  கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக்  கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக்  கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ  அரும்பாடுபட்டார்; அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச்  சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து  மறைந்தார். 

வினாக்கள் 

1. பெரியாரின் சிந்தனைகள் எத்தகையவை? 

2. தமது சீர்திருத்தக்  கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் யார்

3. பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் எக்கருத்துக்களைப் பரப்புரை செய்தார்

4. சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ  அரும்பாடுபட்டவர் யார்

5. இவ்வுரைப் பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக ?

Leave a Comment