டிசம்பர் – 2022 அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் வருகின்ற 23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி அரையாண்டு தேர்வுகள் 23 ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், தேர்வு முடிந்த அடுத்த தினம் முதல் அதாவது 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.