IT FORMS-2022

IT FORM

இரண்டு நிமிடத்தில் உங்கள் IT FORM- 2022 தயார் செய்வதற்கான EXCEL SOFTWAR

2021-2022 ஆம் ஆண்டு வருமானவரியைக் கணக்கிடுவதற்கான EXCEL SOFTWARE கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுடைய ஆண்டு வருமான வரியை இரண்டு நிமிடத்தில் கணக்கிடுங்கள்.

1. முதலில் ENTRY PAGE ஜ OPEN செய்து கொள்ளவும்.

2. அதில் 1 முதல் 6 வரை கொடுக்கப்பட்டுள்ள கலத்தில் NAME, DESIGNATION, GPF/TPF/CPS No, OFFICE, AADHAAR NO, PAN NO ஆகியவற்றை மஞ்சள் நிறத்தில் உள்ள கட்டத்தில் நிரப்பவும்.

3. 7 ஆவதாக உள்ள BASIC BAY என்ற கலத்தில் MARCH-2021 முதல் FEB-2022 வரை உங்களுடைய அடிப்படை ஊதியத்தை நிரப்பவும்.

4. 8 ஆவதாக உள்ள GRADE PAY என்ற கலத்தில் எதனையும் ENTRY செய்ய வேண்டாம்.

5. 9 ஆவதாக உள்ள PP என்ற கலத்தில் நீங்கள் ஏதேனும் PERSONAL PAY பெற்றால் அதை நிரப்பவும்.

6. 10 ஆவதாக உள்ள HRA+CCA+HILL ALLOWANCE என்ற கலத்தில் நீங்கள் மாதம் தோறும் பெறக்கூடிய HRA+CCA+HILL ALLOWANCE தொகையை ENTRY செய்யவும்.

7. 11 மற்றும் 12 ஆவதாக உள்ள D.A 1, D.A 2 என்ற கலத்தில் DA ARREAR பெற்றிருந்தால் அதனை ENTRY செய்யவும். கடந்த ஆண்டில் DA ARREAR கொடுக்கப்படவில்லை.

8. 13 ஆவதாக உள்ள E.L.S என்ற கலத்தில் EL SURRENTER பெற்றிருந்தால் அதனை ENTRY செய்யவும். கடந்த ஆண்டில் EL SURRENTER கொடுக்கப்படவில்லை.

9. 14 ஆவதாக உள்ள BONUS என்ற கலத்தில் நீங்கள் பெற்ற BONUS தொகையை ENTRY செய்யவும்.

10. 15,16,17 ஆவதாக உள்ள Arr.1, Arr.2, Arr.3 என்ற கலங்களில் நீங்கள் வேறு ஏதேனும் ARREAR தொகை பெற்றிருந்தால் அதனை ENTRY செய்யவும். எடுத்துக்காட்டாக போரட்ட காலத்தில் பங்கு பெற்ற நாட்களுக்கு திரும்பப் பெற்ற தொகை, SELECTION GRADE ARREAR தொகை ,போன்றவற்றை ENTRY செய்யவும். ( Arr.1, Arr.2, Arr.3 என்ற இடத்தில் என்ன ARREAR என்பதை பெயர் மாற்றம் செய்து கொள்ளவும்)

11. 18 ஆவதாக உள்ள Professional Tax Paid என்ற கலத்தில் உங்களுடைய தொழில் வரியின் மொத்த தொகையை ENTRY செய்யவும்.

12. 19 ஆவதாக உள்ள C56=House Building Advance (HBA) Interest Paid Max 2,00,000 D56=ACTUAL HRA RECEICED என்ற கலத்தில் நீங்கள் HOUSING LOAN பெற்றிருப்பின் அதனுடைய வட்டித் தொகையை மட்டும் (Interest ) ENTRY செய்யவும் (அதிகபட்டசமாக 2 லட்சம் வரை மட்டும்) ,இல்லை எனில் அந்த இடத்தில் 0 என்று ENTRY செய்யவும்

13. 20 முதல் 33 வரை உள்ள கலங்களில் 80 C பிரிவின் கீழ் நீங்கள் காட்ட விரும்பும் தொகைகளை ENTRY செய்யவும். எடுத்துக்காட்டாக LIC, Tuition Fees, Housing Loan (HBA)Principal, CHIEF MINISTER’S PUBLIC RELIEF FUND , போன்றவற்றை ENTRY செய்யலாம். (அதிகபட்டசமாக 1.5 லட்சம் வரை மட்டும்)

14. 34 ஆவதாக உள்ள IT ADVANCE PAID IF ANY என்ற கலத்தில் நீங்கள் மாதந்தோறும் வருமான வரி முன்பணம் செலுத்தி இருந்தால் அந்த தொகையை ENTRY செய்யவும்.

15. 35 ஆவதாக உள்ள CPS ARREAR IF ANY என்ற கலத்தில் CPS ARREAR தொகை ஏதேனும் செலுத்தி இருப்பின் அந்த அந்த தொகையை ENTRY செய்யவும். இல்லையெனில் ENTRY செய்ய வேண்டாம்

16. 36 ஆவதாக உள்ள PLI DETAILS INCLUDING SERVICE TAX என்ற கலத்தில் நீங்கள் மாதந்தோறும் கட்டிய PLI மற்றும் SERVICE TAX தொகையை ENTRY செய்யவும்.

17. எல்லாவற்றையும் ENTRY செய்து முடித்த பின்னர் கீழே உள்ள CLICK HERE TO VERIFY DATAS என்பதை Click செய்யவும்

18. இப்பொழுது page4-bill drawn என்ற பக்கம் தோன்றும். அதில் CPS அல்லாமல் GPF திட்டத்தில் இருப்பவராக இருந்தால் CPS என்ற கலத்தில் மாதந்தோறும் உங்களுடைய GPF தொகையை MANUAL ஆக மாற்றம் செய்து கொள்ளவும்.

19. அடுத்து page-2 (NEW METHOD) ஐ Click செய்தால் உங்களுடைய வருமான வரி புதிய முறையில் எவ்வளவு என்பதை காண்பிக்கும். உங்களுடைய வருமான வரி இரண்டு முறையில் எது குறைவாக உள்ளதோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

20. இப்பொழுது PAGE-1 முதல் PAGE-4 வரை PRINT எடுத்தால் உங்களுடை வருமானவரிப் படிவம்-2022 தயார்.