NEET UG 2023 Counseling: நீட் தேர்வர்களுக்கு குட் நியூஸ்; மேலும் 326 எம்.பி.பி.எஸ் சீட்கள்; 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

நீட் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி; மேலும் 326 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்

மருத்துவராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தேசிய மருத்துவ ஆணையம் இரண்டு புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

12 ஆம் வகுப்பு முடித்த பெரும்பாலான மாணவர்களின் பெருங்கனவு நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவராக வேண்டும் என்பது தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுவதை வைத்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமான எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இந்தநிலையில், நீட் தேர்வு எழுதுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, தேசிய மருத்துவ ஆணையம் புதிதாக இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி மற்றும் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளுக்கு 5 ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரியில் 170 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும், கவுகாத்தி மருத்துவக் கல்லூரியில் 156 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.பி.பி.எஸ் இடங்களில் 326 இடங்கள் அதிகமாகும்.

Leave a Comment